காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

2011இல் உலகின் பிரசித்தி பெற்ற புகைப்படங்கள் (பாகம் 01)

Posted by Kattankudi Web Community (KWC) on 07/01/2012

கடந்த 2011ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளில் போது எடுக்கப்பட்ட பிரசித்தி புகைப்படங்கள் என்று கருதப்படும் படங்களின் தொகுப்புகளை பல இணையத்தளங்கள் வெளியிட்டு வருகின்றன.

அவற்றில் சில எமது வாசகர்களுக்காக வெளியிடப்படுகின்றன.

படங்களை உருப்பெருக்கிப் பார்வையிட படங்களில் கிளிக் செய்யவும்

9/11 தாக்குதல்களில் தனது மகன் டேவிட் ஐ இழந்த ரொபேர்ட் பெராசா 9/11 நினைவுச் சின்னத்தின் வடக்குத் தடாகத்தில் தனது மகனின் பெயர் இருக்குமிடத்தில் உறைந்த நிலையில் (Getty Images / Justin Lane)

மார்ச் 11 சுனாமியின் பின்னர் ஜப்பானின் கரைக்கு அருகில் ஏற்பட்ட நீர்ச்சுழி (Reuters / Kyodo)

ஜப்பானின் சுனாமிக்குப் பின்னர் காட்சி காண் படகான ஹமா யூரி கரையோரத்தில் இருந்து 1300 மீற்றர்கள் இழுக்கப்பட்டு இருமாடி வீடு ஒன்றின் மீது சமநிலை அடைந்த நிலையில்

மே முதலாம் திகதி இடம்பெற்ற உசாமா பின் லாதனுக்கு எதிரான தாக்குதலின் போது தேசிய பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள் வெள்ளை மாளிகையில் இருந்தபடி நேரடி தகவல்களைப் பெற்றனர் (Reuters / HANDOUT)

முன்னர் உலக வர்த்தக மைய இரட்டைக் கட்டடங்கள் அமைந்திருந்த இடங்களில் பொருத்தப்பட்டுள்ள ராட்சத விளக்குகள் 9/11 இன் பத்தாவது ஆண்டு நிறைவன்று ஒளிர்ந்த காட்சி (Reuters / Gary Hershorn)

அமெரிக்க பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து இடம்பெற்ற Occupy Portland போராட்டத்தின் போது எதிர்ப்பாளர் ஒருவர் முகத்தில் மிளகு ஸ்ப்ரே வீச்சுக்கு உட்படுகிறார் (Randy L. Rasmussen/  The Oregonian)

மிசூரியின் ஜோப்ளின் பகுதியின் மே 22 வீசிய டோர்நாடோ வகை சூறாவளியின் தாக்கத்துக்கு முந்திய மற்றும் பிந்திய படங்கள் (zeitlosimagery via flickr)

நோர்வேயின் உடோயா தீவில் மார்ச் 22 இல் இடம்பெற்ற குண்டு மற்றும் மனிதப்படுகொலை சம்பவங்களில் உயிரிழந்த 93 பேரின் இழப்புக்கு துக்கம் அனுஷ்டிக்க  ஒஸ்லோ நகரின் பிரதான தேவாலயத்தில் கூடியிருக்கும் குடும்பத்தினரும் நண்பர்களும் (Getty Images / Paula Bronstein)

அரிசோனாவின் பீனிக்ஸ் பகுதியை ஜூலையில் உலுக்கிச் சென்ற ராட்சதப் புழுதிப் புயலான ஹபூப் (dbryant via flickr)

மார்ச் 12 அன்று அசர்பைஜானின் பாகு நகரில் எதிர்க்கட்சி செயற்பாட்டாளர் ஒருவர் போலீசாரால் தடுத்து வைக்கப்படுகிறார். ஆளும் எலைட் கட்சிக்கு எதிராக வீதிப் போராட்டங்களை நடத்திய முசாவட் எனும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முப்பதுக்கும் அதிகமானோர் இவ்வாறு போலீசாரால் தடுத்துவைக்கப்பட்டனர் (Reuters)

எகிப்தின் கெய்ரோ நாகரில் இடம்பெற்ற மக்கள் புரட்சியின் போது தொழுகையில் ஈடுபடும் முஸ்லிம்களைப் பாதுகாக்கும் கிறிஸ்தவர்கள் (@NevineZaki via twitter)

ஜப்பான் சுனாமிக்குப் பின்னர் உடனடியான சேதங்களைக் காட்டும் வான்வழிப் புகைப்படம் (Reuters / Kyodo)

ஜப்பானின் நிஹோன்மத்சு நகரில் கதிர்வீச்சுப் பரிசோதனைகளுக்காக தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பெண் ஒருவர் தனது செல்லப்பிராணியை பார்க்கிறார் – மார்ச் 14 (Reuters / Yuriko Nakao)

மிசூரியின் ஜோப்ளின் நகரில் வீசிய டோர்நாடோ வகை சூறாவளியால் தகர்ந்து போன தனது தொடர்மாடிக் குடியிருப்பு அமைந்திருந்த இடத்தில் சோர்ந்து போய் அமர்ந்திருக்கும் ஒரு குடியிருப்பாளர் (Reuters)

அமெரிக்காவின் கலிபோர்னியா டேவிஸ் பல்கலைககழகத்தில் (UCD) Occupy UCD போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மிளகு-ஸ்ப்ரே விசிறும் பொலிஸ் உத்தியோகத்தர் (Jasna Hodzic)

அலபமாவின் கொன்கோர்ட் பகுதியில் ஏப்ரல் மாதத்தில் டோர்நாடோவால் முற்றாக அழிந்து போன தனது வீட்டுக்கு முன்னால் தனது மகனை ஆற்றுப்படுத்தும் தாய் ஒருவர் (AP / Jeff Roberts)

சிலி நாட்டின் புயேஹு எரிமலை வெடித்தது. இதனால் 3,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததோடு, தென் அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் நியூ ஸீலாந்து இடையிலான விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன (Reuters)

கொல்லப்பட்ட அமெரிக்க கடற்படை சீல் பிரிவைச் சேர்ந்த ஜொன் டுமில்சனின் செல்லப்பிராணி அவரது சவப்பெட்டிக்கு அருகில் படுத்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 06ம் திகதி தாக்குதலுக்கு உள்ளான துருப்பினருக்கு உதவச் சென்ற போது, சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகொப்டரில் இருந்து உயிரிழந்த 30 பேரில் ஜொன் டுமில்சனும் ஒருவர்.

ஹொங் கொங் அப்பிள் விற்பனை நிலையத்தில் (Apple Store) மறைந்த அப்பிள் நிறுவன தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு அஞ்சலி செலுத்துகையில் அவரது உருவ பொம்மையை பார்வையிடும் சிறுவன். கணினி வடிவமைப்பு, செல்லிடத் தொலைபேசிகள், கணினிகள், சினிமா உட்பட பலதுறைகளில் புரட்சிகளை ஏற்படுத்திய ஸ்டீவ் ஜாப்ஸின் மரணம் உலகெங்கும் பலத்த அனுதாபத்தை தோற்றுவித்திருந்தது (AP / Kin Cheung)

சிகாகோ நகர நதிக்கரை வீதியில் பனிப்புயலால் மூடப்பட்டு கைவிடப்பட்டுள்ள வாகனங்கள் (chicagotribune.com)

மத்திய கிழக்கின் பல பகுதிகளில் ஏற்பட்ட கலகங்களில் facebook அதி முக்கிய பாத்திரம் வகித்திருந்தது (theatlandicwire.com)

அமெரிக்க கிழக்குக் கரையை அணுகும் ஹரிகேன் ஐரீன் சூறாவளி

1903இல் கட்டப்பட்டு ஹரிகேன் ஐரீனால் அழிந்து போன விடுமுறைக் கொட்டகையின் படிகளில் அமர்ந்திருக்கும் தாய் பில்லி ஸ்டின்சன் தனது மகள் எரின் ஸ்டின்சனை ஆற்றுப் படுத்துகிறார். நாக்ஸ் ஹெட்ஸ் பகுதியில் அமைக்கபப்ட்ட ஆதியான விடுமுறைக் கொட்டகைகளுள் இவர்களது கொட்டகையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது (Getty Images / Scott Olson)

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனின் நடைபாதைகளில் 5.9 ரிச்டர் அளவிலான பூமி அதிர்ச்சியைத் தொடர்ந்து கூடும் அலுவலகப் பணியாளர்கள். ரிச்மொன்ட் பகுதிக்கு வடமேற்கில் மையத்தைக் கொண்டிருந்த இந்தப் பூமியதிர்ச்சி,வட கரோலினா முதல் மசாச்சுட்டஸ் வரை உணரப்பட்டது (AP / J. Scott Applewhite)

மிஹாக் கெடி பராஹ்: தனது தாயினால் கென்யாவின் டடாப் நகரின் சர்வதேச மீட்புச் சமூக வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்ட 7 மாதக் குழந்தை. இக்குழந்தை பின்னர் முற்றாக சாதாரண நிலைக்கு மீண்டது (AP / Schalk Van Zuydam)

4 Responses to “2011இல் உலகின் பிரசித்தி பெற்ற புகைப்படங்கள் (பாகம் 01)”

  1. Mohamed imthiyas said

    jasakallahuhair

  2. சிறந்த பதிவு
    இப்பதிவை வெளியிட்ட காத்தான்குடி.இன்போவுக்கு எமது மனமார்ந்த நன்றி

  3. azmy said

    eppadi patda photo kalai kattankudy info mulam parpathu athisayam ithu nalla payanai tharukerathu thanks kky info

  4. Abdul Majeeth said

    Well done – Very good work

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s