தாழங்குடா சமுர்த்தி வங்கியில் கொள்ளை முயற்சி
Posted by Kattankudi Web Community (KWC) on 07/01/2012
ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தாழங்குடா சமுர்த்தி வங்கி இன்று (07.01.2012) அதிகாலை உடைக்கப்பட்டு கொள்ளையிட முயற்சிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் தாழங்குடா சமுர்த்தி வங்கி இனம் தெரியாத சிலரினால் உடைக்கப்பட்டுள்ளன. அவ் வங்கிக்கு வெளியில் போடப்பட்டிருந்த பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கொள்ளைக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும் அந்த வங்கியினுள் இருந்த எந்தப்பொருளும் கொள்ளையிடப்படவில்லையென காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்திவருகின்றனர்.
இந்த வங்கிக்கு விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதி பணிப்பாளர் பி.குணரட்னம் விசாரணைகளை நடாத்தினார்.
இந்த சமுர்த்தி வங்கி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரும் உடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







