மழை நோய்
Posted by Kattankudi Web Community (KWC) on 05/01/2012
மழையது நின்று போச்சு
மாரியும் விலக லாச்சு
நோய்களே தொற்றி யாச்சு
நுளம்புகள் பெருக்க மாச்சு
.
உயிரினை டெங்கு கொல்லும்
ஊரெலாம் பரவிச் செல்லும்
சூழலில் வேண்டும் சுத்தம்
சுணங்கினால் நுளம்பு குத்தும்
.
வைரசும் தொற்று நோயே
வந்திடின் வாழ்வு தீயே
தேங்கிநீர் நின்றால் நஞ்சு
தெளிவினை கேட்டு அஞ்சு
.
வாந்தி பேதிகளால் மரணம்
வருவதில் விழிப்பு பெறணும்
வீடு வாசல்கள் சுத்தம்
விளங்கிட வேண்டும் நித்தம்
.
மழையது விட்ட பின்னால்
வருவது பிணிகள் முன்னால்
வருவதன் முன்னே காத்து
வளமது பெறுவோம் பார்த்து
.
குப்பையை கொளுத்தி வைப்போம்
கொதித்தநீர் ஆற்றிக் குடிப்போம்
செல்வமில் சிறப்பு சுகமே
சுகமதே எமக்கு இகமே








Mohamed Fashan. (@fashan89) said
எளிமையான அருமையான வரிகள்.
காலத்துக்கேற்ற வரிகளும் கூட.
நல்லதொரு கவிதை
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.