காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

காத்தான்குடி சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தில்

Posted by Kattankudi Web Community (KWC) on 03/01/2012

-எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்-

எமது சமூகத்தின் நன்மை கருதி சமூக ஒழுக்கங்கள் மற்றும் திருமண விடயத்தில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் சில முடிவுகளை எடுத்து அதை பொதுமக்கள் நடைமுரைபடுத்துமாறு கேட்டுக்கொள்கின்றது. அந்த அறிவித்தலை கீழே பதிவுசெய்கின்றோம்.

அன்புடையீர்,

நமது பிரதேசம் அல்லாஹ்வினுடைய அருளின் காரணமாக இஸ்லாமிய விழுமியங்களைப் பேணி வாழ்கின்ற மக்களைக் கொண்ட நகரமாகும். இங்கு காணப்படும் பள்ளிவாயல்கள் நமது பிரதேச மக்களின் ஆன்மீக வாழ்க்கைக்கு வழிகாட்டுவதை நாம் மறுக்க முடியாது.

பள்ளிவாயல்களோடு மக்களுக்குள்ள தொடர்பு பள்ளிவாயல்களை நிருவகிப்பவர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள் சம்பந்தமாக இஸ்லாம் மிகத் தெளிவாக விளக்கியிருப்பதை நாம் காணலாம்.

இந்தவகையில், இஸ்லாம் மிகவும் வலியுறுத்திக் கூறுகின்ற திருமணம்  அதன் ஒழுங்குகள் சம்பந்தமாக தற்போதுள்ள நடைமுறைகளை ஒழுங்குபடுத்த வேண்டிய கட்டாய நிலை சம்மேளனத்திற்கு  ஏற்பட்டது.

எனவே, அனைத்துப் பள்ளிவாயல் நிருவாகிகளையும் அழைத்து 30.12.2011ம் திகதி இவ்விடயமாக விரிவான கலந்துரையாடலொன்றினை நாம் மேற்கொண்டதன் அடிப்படையில் பின்வரும் தீர்மானங்களைக் கண்டிப்பாக பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

1. இஸ்லாத்திற்கு மாற்றமான முறையில் மஹ்ரம் இல்லாத இருவர் தொடர்ந்தேர்ச்சியாக கதைத்துப் பழகுகின்ற  சூழல் அவதானிக்கப்பட்டால் பள்ளிவாயல் நிருவாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படல் வேண்டும்.

2. இஸ்லாம் மிகவும் வெறுக்கின்ற தகாத உறவில் இருவர் ஈடுபாடு கொண்டிருந்தார்கள் என்பது தகுந்த சாட்சியங்களோடு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு பள்ளிவாயல் நிருவாகம் ஹத்து என்ற தண்டனையை நிறைவேற்ற பணிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தண்டனையை  பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

3.    இவ்வாறு மேற்கூறிய இரண்டு செயற்பாடுகளில் இருவர் ஈடுபட்டுவிட்டார்கள் என்ற காரணத்திற்காக அவர்களுக்கு எக்காரணம் கொண்டும் உடனடியாக நிர்ப்பந்த திருமணம் முடித்து வைக்கப்பட முடியாது.   அவ்வாறு இரண்டு தரப்பினரின் குடும்பங்களும் திருமணம் முடிப்பதற்கு விரும்பும் பட்சத்தில் அவர்களது விடயத்தினை பள்ளிவாயல் நிருவாகிகள் கவனத்திற் கொண்டுவருவதுடன் காழி நீதிபதி அவர்களின் ஆலோசனைகளும் பெறப்படவேண்டும்.

4. வெளிப்பிரதேசங்களில் இருந்து வருபவர்கள் அவர்களுக்குரிய பள்ளிவாயல்களினால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்தினை காழி நீதி அவர்களிடம் ஒப்படைத்து திருமணம் முடிப்பதற்கான அனுமதியைப் பெறல் வேண்டும்.

மேற்கூறிய விடயங்களை பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு நமது பிரதேசத்தில் இஸ்லாமிய விழுமியங்களைத் தழுவியதான  ஒழுக்கமுள்ள சமூதாயத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

ஜஸாக்கல்லாஹு ஹைரன்

 தலைவர்  / செயலாளர்

5 Responses to “காத்தான்குடி சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தில்”

  1. nizarmsm said

    weldon but too late

  2. this is currect

  3. Abu Aayisha said

    அல்லாஹ்வினுடைய கட்டளையை செயற்படுத்த சம்மேளனம் எடுத்த இந்த முயற்சிக்கு அல்லாஹ் உதவி புரிவானாக.எங்கு தூய இஸ்லாமிய கட்டளைகள் பேனப்படுகிறதோ நிச்சயம் அங்கு அல்லாஹ்வின் பரகத் நிறைந்திருக்கும்.நிச்சயம் இந்த முயற்சிக்கு ஊர் மக்கள் அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.

  4. Abu Aayisha said

    நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ள இரண்டாவது விடயம் :-( இத்தண்டனையை பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.) இது உங்களுடைய ஆலோசனை என்பதை விட அல்லாஹ்வின் கட்டளை என்று சொல்வதே உண்மை.எனவே இது கட்டாயம் பல மக்களுக்கு முன்னிலையில் கொடுக்கப்படவேண்டிய தண்டனை.இன்னும் ஒருவர் இந்த தவறை செய்யக்கூடாது என்பதற்காகவே இஸ்லாம் இவ்வாறான தண்டனையை வழங்குகிறது என்பதை குர்ஆண் மற்றும் ஹதீஸ்களில் இருந்து விளங்கிக்கொள்ள முடியும்.

  5. riza said

    முதலாவது விடயத்துக்கு காரணம் பெண் பிள்ளைகள் மீது பெற்றோர்களின் சரியான கண்கானிப்பின்மையே.. தங்களது வீட்டுக்குள்ளேயே இருந்து தொலைபேசியில் கதைக்கும் தங்கள் பிள்ளைகளை அவதானிக்க , கட்டுப்படுத்த முடியாவிடில் பின்னர் எவ்வாறு ……………………….. ? true or not?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s