காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

கல்வி அமைச்சரே! உங்களுக்கென்ன ஆச்சி..?

Posted by Kattankudi Web Community (KWC) on 03/01/2012

-காத்தான்குடி மதியன்பன்-

பரீட்சைப் பெறுபேற்றில் குழப்பம்!
படித்தவர்க்கும் புரியவில்லை விளப்பம்!
பாவிகளோ செய்த பிழை -
பார்த்திடவோ யாருமிலை -
படித்தாலும் எதிர் காலம் கலக்கம்!

குழுவொன்றை அமைத்ததுவே அரசு!
குழப்பத்தில் அக்குழுவின் சிரசு!
கூடியவர் பேசுகிறார் -
குறைகண்டு ஏசுகிறார் -
கொட்டும் அரசின் பொய் முரசு!

விஞ்ஞானப் பாடத்தில் தோற்றி!
விடைகண்டார் பொருளியலில் மாற்றி!
வேடிக்கைப் பெறுபேறு -
வேதனைகள் அது வேறு -
வேதாளம் முருங்கை மரம் ஏற்றி!

மீளாய்வு செய்வதற்குப் பணமாம்!
மேலிடத்து உத்தரவு தினமாம்!
மாணவர்கள் துயரத்தில் -
மாபிழையோ உயரத்தில் -
மாதங்கள் ஆனாலும் பிணமாம்!

கல்வியின் எதிர் காலம் போச்சி!
கடைத்தெருவின் சரக்குப் போல் ஆச்சி!
கற்றவர்க்கும் விடிவில்லை -
கற்றாலும் முடிவில்லை -
கல்வியமைச்சரே உங்களுக்கென்ன ஆச்சி..?

One Response to “கல்வி அமைச்சரே! உங்களுக்கென்ன ஆச்சி..?”

  1. riza said

    வேடிக்கைப் பெறுபேறு -
    வேதனைகள் அது வேறு true………

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s