ஏனிந்தப் பேரவலம்
Posted by Kattankudi Web Community (KWC) on 30/12/2011
பால்வத்தை ஓடையோரம் வீடு
படுகின்றோம் நாம்பெரிய பாடு
கால்வாயில் பாய்ந்துவரும் வெள்ளம்
கரைபுரள நாசம்தான் இல்லம்
அலைமேலே எழுந்துவர அச்சம்
அலைக்கழிச்சல் தானிரவில் மிச்சம்
நிலைதன்னைப் பார்ப்பாரோ இல்லை
நீர்புகுந்து அதுபெரிய தொல்லை
தோணிக்கால் வாயில்நீர் பெருக்கம்
தேங்குவதால் நோயெம்மை உருக்கும்
ஏனிந்தப் பேரவலம் இங்கு
எம்சோகம் சொல்லுவது எங்கு
மக்கள்தம் ஆணையை வென்றீர்
மறந்தேதான் அனைத்தையும் சென்றீர்
இக்கொடுமை வேண்டாமே ஐயா
இதுநாங்கள் சொல்லுவது பொய்யா
இல்லையே சரியான திட்டம்
எடுப்பதுவோ அவரவர்க்கு மட்டும்
நல்லதொரு வடிகானே தேவை
நாம்விரும்பு கின்றோமச் சேவை







