காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

தேசிய பாதுகாப்பு தின வைபவத்தில் முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்டுள்ளது-ULMN.முபீன்

Posted by Kattankudi Web Community on 27/12/2011

நமது செய்தியாளர்

நேற்று (26.12.2011) காத்தான்குடியில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின பிரதான வைபவத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புறக்கனிக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக  கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழு செயலாளருமான யு.எல்.எம்.என் முபீன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேற்று காத்தான்குடியில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின வைபவத்தில் அங்கு நான்கு பிரதியமைச்சர்கள் கலந்து கொண்டனர். பிரதியமைச்சர்களான துலிப் விஜேசேகர மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பசீர் ஷேகுதாவூத், விநாயக மூர்த்தி முரளிதரன் ஆகிய நான்கு பிரதியமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

இதில் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, துலிப் விஜேசேகர மற்றும் விநாயக மூர்த்தி முரளிதரன் ஆகியோர் அந்த வைபவத்தில் உரையாற்றினார்.

ஆனால் பிரதியமைச்சர் பசீர் ஷேகுதாவூதுக்கு மட்டும் இந்த வைபவத்தில் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

இது பிரதியமைச்சர் பசீர் ஷேகுதாவூதையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையும் புறக்கறித்த செயலாக நாங்கள் கருதுவதுடன் இது திட்டமிட்ட புறக்கணிப்புமாகும். இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கின்றேன்.

அரசாங்ககத்தின் பங்காளியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கின்றது. அத்தோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளராக பிரதியமைச்சர் பசீர் ஷேகுதாவூத் இருக்கின்றார். இந் நிலையில் அவருக்கு உரையாற்ற சந்தர்ப்பம் வழங்காதது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசையே புறக்கனித்ததாக கருத வேண்டியுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

இந்த தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான வைபவத்தின் நிகழ்ச்சி நிரல்  காத்தான்குடியிலுள்ள உள்ளுர் அரசியல் வாதிகளினால் தயார் படுத்தப்பட்டு அதற்கேற்றவாறு அது நடை பெற்றுமுடிந்தது

இதில் காத்தான்குடியிலுள்ள உள்ளுர் அரசியல் வாதிகளின் சுய நல அரசியல் பிரயோகிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது அரசாங்க நிருவாகமும், இடர் முகாமைத்துவ மத்திய நிலையமும் இதை பொறுப்புடன் கவனத்திற் கொண்டிருக்க வேண்டும் அத்தோடு துக்கத்தை அனுஷ்டிக்க வேண்டிய  இந்த வைபவம் களியாட்ட வைபவமாக இடம் பெற்றது எனும் விமர்சனங்களும் வெளியாகியுள்ளன

இந்த நிலையில் பிரதியமைச்சர் பசீர் சேதாவூதுக்கு உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படாமையை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முபீன் வெளியிட்டுள்ள  அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்தள்ளார்.

2 Responses to “தேசிய பாதுகாப்பு தின வைபவத்தில் முஸ்லிம் காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்டுள்ளது-ULMN.முபீன்”

  1. farhan said

    அவர் பேசி இருந்தால் என்ன பேசி இருக்க போகிறார். புதிதாக ஒன்றும் இல்லை. உள்ளூர் அரசியல் வாதிஹளை வீணாக இழுக்க தேவை இல்லை இது நிஹழ்ச்சி எட்படலர்களின் தவறு….

  2. காத்தான்குடி மகன் said

    அவரை சொன்னதே பெரிய விடயம், விட்டுவிட்டு வேலையைப் பாருங்க சேர்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s