சர்ச்சைக்குரிய வியாபாரம் தொடர்பாக கவனம் செலுத்துமாறு காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமாவிற்கும் சம்மேளனத்திற்கும் கடிதம்
Posted by Kattankudi Web Community (KWC) on 25/12/2011
காத்தான்குடியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சர்ச்சைக்குரிய வியாபார முறைமை தொடர்பாக கவனம் செலுத்துமாறு கேட்டு காத்தான்குடி பள்ளிவாயல்களின் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திற்கும் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபைக்கும் கடிதமொன்று இன்று அனுப்பப்பட்டுள்ளது.
காத்தான்குடி பிரதேசத்திலுள்ள சில உலமாக்கள் துறை சார்ந்த சிலர் மற்றும் முக்கியஸ்த்தர்கள் சேர்ந்து கையொப்பமிட்டு இக்கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
இக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
“அண்மைக்காலமாக நமதூரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நெட்வேக் மார்கெட்டிங் (Network Marketing) எனும் பெயரில் புதிய வியாபார முறைமை ஒன்று தீவிரமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வியாபார முறைமை இலங்கையின் மத்திய வங்கியின் Act no 30 of 1988 எனும் கட்டளைச்சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட பண்புகளைக்கொண்ட வியாபார முறைமையை ஒத்ததாக காணப்படுகின்றது.
மேலும் இவ்வியாபார முறைமை இஸ்லாமிய மார்க்க ரீதியாக தடை செய்யப்பட்டது என்று தேசிய ரீதியான முன்னணி உலமாக்களும் சர்வதேச ரீதியிலான உலமாக்களும் அங்கீகரிக்கப்பட்ட பத்வா நிறுவனங்களும் தீர்ப்பு வழங்கியுள்ளன.
மேலும் இம்முறைமையில் இது பற்றி தெளிவில்லாததன் காரணமாக பாமரர்கள் மற்றும் படித்தவர்கள் என பலரும் வீழ்வதையும் அவதானிக்க முடிகின்றது.
எனவே இது தொடர்பில் பொதுமக்களை விழிப்பூட்டி இதனை கட்டுப்படுத்தி மக்களை இதிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








Abd Bin Meera said
you mean global life style lanka (pvt) ltd……….
azhar.msm said
இந்த குளோபல் …… pvt இனது வியாபார முறைமை மிகவும் குழப்பமாகத்தான் உள்ளது சும்மா இருந்து உழைக்க வழி காட்டுகிறார்கள் இது எந்த வகையில் ஹலால் என்பதனை உலமாக்கள் கட்டாயம் தெளிவு படுத்த வேண்டும் அதோடு இந்த வியாபாரத்தில் நன்கு படித்தவர்களே (?)அதிகமாக ஈடுபடுவதாய் தோன்றுகிறது .(ஜாமியதுல் உலமா ,அதர் ,சென்டர்,cig ,அ இ த ஜமாஅத் ,கவனம் எடுப்பார்களா ????????????)