இளந்தளிர் நற்பணி மன்றத்தின் தொடரும் கல்விப்பணிகள்- 2014 ஆம் ஆண்டு A/L மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பம்
Posted by Kattankudi Web Community on 18/12/2011
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அனுசரணையுடன் காத்தான்குடியின் மிக அவசியத் தேவையாக உணரப்பட்ட உயர்தர கணித விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை வெற்றிகரமாக முற்றிலும் சேவை அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற ஆசிரியர்களை கொண்டு காத்தான்குடி இளந்தளிர் நற்பணி மன்றம் நடாத்திவருகின்றது.
மேற்படி செயற்திட்டத்தின் தொடர்ச்சியாக, இவ்வருடம் சாதாரண தரப்பரீட்சை (O/L) எழுதும் மாணவர்களுக்கான(2014 A/L Batch) கணித விஞ்ஞான வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இதன் ஆரம்ப கட்டமாக இம்முறை(2011) சாதாரன தரப் பரீட்சை எழுதும் மாணவர்களில் கணித விஞ்ஞானப் பிரிவுகளில் தங்களது உயர்தரக்கல்வியை கற்க விரும்பும் மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வு எதிர்வரும் 23-12-2011 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற இருக்கின்றது.
இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மத்தி வலய கல்விப்பணிப்பாளர் ULM.செயினுதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொள்ள இருக்கின்றார்கள்.
எனவே, கணித விஞ்ஞான பிரிவுகளில் கற்க விரும்பும் மாணவ மாணவிகள் அனைவரயும் தங்களது பெற்றோர் சகிதம் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்பு- 0776728007 / 0776648414 / 0714313039 / 0777978011
இளந்தளிர் நற்பணி கல்வியகம்
மேத்தைப்பள்ளி வீதி
காத்தான்குடி-03







