நாளை காத்தான்குடியின் சில பகுதிகளில் மின்வெட்டு
Posted by Kattankudi Web Community on 16/12/2011
நாளை காலை 8.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை காத்தான்குடியின் ஒருசில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி கிளை மின் அத்தியட்சகர் எ.எல்.மாஹிர் காத்தான்குடி இன்போவிற்கு தெரிவித்தார்.
இதற்கமைவாக காத்தான்குடி பிரதான வீதியில் குட்வின் சந்தியில் தொடங்கி காத்தான்குடி பிரதான நுழைவாயில் வரையும் , ஊர்வீதியில் ஜாமியதுள் பலாஹ் அரபுக்கல்லூரி முதல் குவைத் சிட்டி வீட்டுத்திட்டம் வரையான எல்லைகளுக்குள் உட்பட்ட சகல பிரதேசங்களிலும் மேற்குறிப்பிட்ட நேர இடைவெளியில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.






