சிறந்ததொரு சமூக தொண்டனாக செயற்பட்டவர் மர்ஹும் லாபீர்
Posted by Kattankudi Web Community on 16/12/2011
சிறந்ததொரு சமூக தொண்டனாக செயற்பட்டவர் மர்ஹும் லாபீர் என இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உப தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லா லாபீரின் மரணம் குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
புதிய காத்தான்குடி ஆறாம் குறிச்சி அப்றார் நகரைச்சேர்ந்த மர்ஹும் லாபீரின் திடீர் மரணச்செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்தேன்.
வியாழக்கிழமை (இன்று)மாலை வேளை பலருடன் சுகதேகியாக உரையாடிய எம்.எச்.எம்.லாபிர் மரணித்து விட்டர் என்ற செய்தி இரவு எட்டு மணியளவில் கேள்வி பட்டதும் அதிர்ச்சி அடைந்தேன்
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளையின் தொண்டராக இணைந்து சமூக தொண்டனாக செயற்பட்டவரே மர்ஹும் லாபீராகும்.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போதும் அதன் பின்னரும் எமது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளையின் தொண்டனாக அர்ப்பணிப்புடன் லாபிர் செயலாற்றினார்.
இறைவன் அவரது தொண்டு சேவையை அங்கீகரித்து பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை அன்னாருக்கு வழங்க நாம் பிராத்திக்கின்றோம்.
அவரின் மறைவால் துயரும் அவரது குடும்பத்திற்கு எமது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளையின் சார்பில் அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.








mmsa said
Allhumma ighfir lahu