ரமழான் மாத விஷேட போட்டி முடிவுகள் – காத்தான்குடியை சேர்ந்த பலபேருக்கு ஆறுதல் பரிசுகள்
Posted by Kattankudi Web Community (KWC) on 11/12/2011
சவுதி அரேபியா ரியாத் நகரில் உள்ள தமிழ் தஃவா ஒன்றியம் மாபெரும் “முஸாபகதுர் ரமழான்” எனும் ரமழான் மாத விஷேட போட்டி ஒன்றை நடாத்தியது. உலகளாவியரீதியில் நடாத்தப்படும் இந்த விசேட போட்டிக்கு காத்தான்குடி இன்போ ஊடக அனுசரணையாளராக செயற்பட்டது.
இந்த போட்டிக்கு இலங்கையில் இருந்து 70 பேர் கலந்துகொண்டனர். இதில் காத்தான்குடியை சேர்ந்த பலபேர் ஆறுதல் பரிசை பெற்றுக்கொண்டனர்.
இந்த பரிசளிப்பு விழா தொடர்பாக ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் எமக்கு அனுப்பி வைத்த செய்தியையும் பரிசுபெற்றவர்களின் விபரங்களையும் கீழே தருகின்றோம்.
அல்லாஹ்வின் பேரருளால் ரியாத், தமிழ் தஃவா ஒன்றியத்தின் தமிழ் பேசும் சகோதர, சகோதரிகளுக்கான மாதாந்த தஃவா நிகழ்ச்சியுடன் சென்ற ரமழான் மாத விஷேட போட்டிக்கான பரிசரிளிப்பு விழாவும் 07/01/1433 வெள்ளிக்கிழமை அன்று ஜூம்ஆத் தொழுகை முதல் இரவு 7.00 மணி வரை மிக சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
குத்பாப் பிரசங்கம், நபித் தோழியர் பற்றிய சிற்றுரை, சுருக்கக் கேள்வி பதில் நிகழ்ச்சி, கலந்து கொண்டோருக்கான பேச்சுப் போட்டி, விஷேட சொற்பொழிவு மற்றும் பரிசளிப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய மேற்படி தஃவா ஒன்று கூடலில் குளிரையும் பொருட்படுத்தாது சுமார் முன்னூறு சகோதர சகோதரிகள் பங்குகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வொன்று கூடலின் இறுதியாக மஃறிப் தொழுகையைத் தொடர்ந்து ரமழான் மாத விஷேட போட்டி நிகழ்ச்சியின் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்கு மௌலவி முஆஸ் தலைமை வகித்தார்.
பரிசைப் பெறத் தகுதிபெற்றவர்களாக 42 பேர் தமிழ் தஃவா ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய போட்டிக் குழுவின் மூலம் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 98 புள்ளிகளைப் பெற்ற பஷீர் சின்ன லெப்பை அஸனார் (ரியாத்) அவர்கள் முதல் பரிசான 1500 ரியால்கள் ரொக்கப் பணத்தை தனதாக்கிக்கொண்டார்.
மேலும் 97 புள்ளிகளைப் பெற்ற முஹம்மது மிப்ரான் (ரியாத்) அவர்கள் இரண்டாவது பரிசாக 1000 ரியால்கள் ரொக்கப் பணத்தையும்,
96 புள்ளிகளைப் பெற்ற நான்கு சகோதரிகள் சீட்டிழுப்பின் மூலம் மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் இடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டு 750, 500, 250, 200 ரியால்களை பரிசாகப் பெற்றனர். அவர்கள் முறையே பரீனா அமானுல்லாஹ் (ரியாத்), மஸிய்யா ஸிராஜ் (ரியாத்), பர்வீன் நிஸ்தார் (ரியாத்), தாஹிரா தாவூத் (ரியாத்) ஆகிய சகோதரிகளாகும்.
போட்டியில் பங்குபற்றிய மற்றும் வெற்றிபெற்றவர்களின் விபரங்களை அறிய கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்யவும்.







IMANA_KKY said
Thanks a lot info for the news & result.