கலாநிதி காமில் ஆஸாத் வபாத்தானார்
Posted by Kattankudi Web Community (KWC) on 02/12/2011
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபு இஸ்லாமிய நாகரிகத்துறை முன்னாள் தலைவர் கலாநிதி எம்.என்.எம். காமில் ஆஸாத் வபாத்தானார் இன்னாலில்லாகி வைஇன்னா இலைகி ராஜிஊன்.
அவரின் ஜனாஸா இன்று மாலை 4.00 மணியளவில் புத்தளம் பகா மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இவர் தனது துறைசார் மட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு கணிசமான சேவையாற்றியுள்ளார்.
இவர் தனது பதவிக்காலத்தில் கொழும்பு, தென்கிழக்கு, கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்கு துணையாக நின்றவர் என்பதும் இவரது பதவி காலப்பகுதியில் இஸ்லாமிய நாகரிகத்துறை முதுகலைமானி, முதுதத்துவமானி என்பன போராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
முன்னாள் நிதி அமைச்சர் நெய்னா மரைக்கார் அவர்களின் புதல்வரான இவர் தனது கலாநிதிக் கற்கையினை பிரித்தானியாவில் மேற்கொண்டார் குறிப்பிடத்தக்கதாகும். இவரின் ஜனாஸா புத்தளம் இஸ்மாயில் பிலேஸ் வீதிலுள்ள அவரின் வீட்டில் வைக்கபட்டுள்ளது.








sale said
Inna Lillahi Wainna Ilaihi Rajioon
abu azriff said
Inna Lillahi Wainna Ilaihi Rajioon