காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,059 மொத்த வருகைகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தாறுஸ்ஸலாம் வீதி மக்களிடமிருந்து….

Posted by Kattankudi Web Community (KWC) on 26/11/2011

(file photo)

- நமது செய்தியாளர் -

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காத்தான்குடி ஆறாம் குறிச்சி  தாறுஸ்ஸலாம் பகுதி வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதால் இப் பகுயிலுள்ள பலரின் வீடுகளுக்குள் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இப்பதியில் வசிக்கும் குடும்பங்கள் பல தமது வீடுகளை விட்டு உறவினர்கள் வீடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளன.

இதே போன்று தாறுஸ்ஸலாம் பகுதியை அண்மித்த காசீம் போடியார் வீதி மற்றும், சி.பி காசிம் வீதி, எச்.ஆர்.எம்.வீதி ஆகிய வீதிகளிலுள்ள பல வீடுகளிலும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.

தாறுஸ்ஸலாம் வீதியும் பொதுமக்கள் பயணிக்கமுடியாதவாறு வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது.

கடந்த வருடமும் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தினாலும் தாறுஸ்ஸலாம்  பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டு இப்பகுதியிலுள்ள 100 க்கு மேற்பட்ட குடும்பங்கள் இடம் பெயர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் உறவினர் நண்பர்கள் வீடுகளில் குடியிருந்தனர்.

இதில் பலரின் வீடுகள் சேதமடைந்தன.

தாறுஸ்ஸலாம் வீதியிலுள்ள தாறுஸ்ஸலாம் பள்ளிவாயலுக்கு முன்பாகவுள்ள இடம் குளம் போல் காட்சி தருகின்றது. இப்பள்ளிவாயலுக்கு தொழுகைக்காக வரும் பொதுமக்களும் இந்த வீதியினால் செல்லமுடியாதவாறு உள்ளது.

இந்த வீதியைச் சுற்றியுள்ள ராசா ஆலீம் வீதி, அமானுல்லா வீதி, ஜின்னா லேன் ஆகிய வீதிகள் உயரமாக கொங்கிறீட் வீதியாக போடப்பட்டுள்ளதால் இந்த வீதியில் இருந்து வரும் வெள்ள நீர் இந்த தாறுஸ்ஸலாம் வீதிக்கே வந்து சேருகின்றது.

இதனால் இவ்வீதி குளம் போல் காட்சி தருகின்றது. இந்த வீதி தொடர்பில் இப்பகுதி பொதுமக்கள் காத்தான்குடியின் அரசியல் பிரமுகர்கள் அதிகாரிகள் அனைவரிடமும் முறையிட்டே வருகின்றனர்.

காத்தான்குடி பிரதான வீதியை மிகவும் அண்மித்த காத்தான்குடியின் நகர்ப்புறத்திலுள்ள ஒரு முக்கியமான வீதியாக இந்த தாறுஸ்ஸலாம் வீதி விளங்குகின்றது.

இந்த வீதியை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்காக மாஸ்ட்டர் பிளேன் தயாரித்து வருவதாக காத்தான்குடி நகர முதல்வர் அஸ்பர் தெரிவிக்கின்றார்.

குறைந்த பட்சம் திட்டமிட்ட முறையில் இந்த வீதியில் தேங்கும் வெள்ளத்தினையாவது வெட்டி தோணாவுக்கு ஓடவைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் ஆனால் இதை செய்ய காத்தான்குடியின் அரசியல் அதிகார மிக்க நிறுவனம் தவறி வருகின்றது.

தேர்தல் காலத்தில் மக்களை நாடி வரும் அரசியல் பிரமுகர்கள் இப்படியான நேரத்தில் அக்கறை காட்டுவதில்லை.

குறைந்த பட்சம் இந்த வீதிக்கு வருகை தந்து இந்த வீதியில் தேங்கி நிற்கும் வெள்ளத்தினையாவது திட்டமிட்ட முறையில் ஓடவைப்பதற்கு முடியாத அரசியல் வாதிகளாக இவர்கள் இருப்பதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

காத்தான்குடியின் அபிருத்திக்குழுக் கூட்டம் மற்றும் காத்தான்குடி அனர்த்த முகாமைத்தவ குழுக் கூட்டம் என்பவற்றில் இந்த விதியின் நிலைமை பற்றி எடுத்துக் கூறப்பட்டும் வாயால் மாத்திரமே தீர்வு வழங்கப்படுகின்றது. ஆனால் செயலில் தீர்வு காணப்படவில்லை.

எனவே காத்தான்குடியின் அரசியல் பிரமுகர்களே அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு

One Response to “வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தாறுஸ்ஸலாம் வீதி மக்களிடமிருந்து….”

  1. பொதுவாக தோனா என்று அழைக்கபட கூடிய எமது ஊரின் கிழக்கு பக்கமாகிய பெரும்பாலான பகுதிகள் 1990 ஆம் ஆண்டுகளுக்கு முன்பான காலத்தில் மழைகாலத்தில் நீர் தேங்கி நின்று கோடைகாலத்தில் வற்றி விடகூடிய பெரிய பள்ளங்கள், சிரிய குளங்கள் போன்ற அமைபுகளை கொண்ட தரை கட்டமைபையே கொண்டிருந்தன, யுத்த சூழ் நிலையும்,சூழ இருந்த முஸ்லிம் கிராமங்களின் இடம் பெயர்வும், மேலும் குடும்ப விருத்திகளும் பள்ளபாங்கான பிரதேசத்தில் எந்த வித திட்டமிடலும் இல்லாமல் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக குடியேற்றத்தை ஏட்படுத்தியதன் விளைவு இப்போது வெள்ளமாக மாறி இருக்கிறது கொங்கிரீட் வீதிகள் அதனை மேலும் அதிகரிக்க செய்திருக்கின்றன எனவே 1990 ம் ஆண்டுகளுக்கு முன் வெள்ளம் வடிந்தோட இருந்த புவி அமைபை கருத்தில் கொண்டு இப்போது அவ்விடத்தில் செரிவாக அமைக்கபட்டுள்ள கட்டிடங்கள் நிலைதிருக்கும் வகையிலான ஒரு நுட்பனான ஆய்வு மூலமான வெள்ளம் வடிந்தோட கூடிய நில கீழ் வடிகால் அமைப்புமுறை மூலமெ இந்த பிரச்சினை நிறந்தர்மாக தீரும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s