காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,059 மொத்த வருகைகள்

குட்வின் சந்தி – மத்திய வீதியிலுள்ள மெத்தைப்பள்ளி கடைகள் இரண்டு மணிக்கு உடைக்கப்படும்: அஸ்பர் (Update 5 – படம் இணைப்பு)

Posted by Kattankudi Web Community (KWC) on 26/11/2011

- kattankudi.info Exclusive -

(01:20 pm)குட்வின் சந்தி மத்திய வீதியில் அமைந்துள்ள மெத்தைப்பள்ளிக்குச் சொந்தமான கடைகள் இன்று இரண்டு மணிக்குள் உடைக்கப்படும் என தவிசாளர் அஸ்பர் சார்பாக கடையில் வாடகைக்கு இருப்போருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விடயம் தொடர்பாக கடந்த வருடம் வெளியிடப்பட்ட எமது விரிவான செய்தியை வாசகர்கள் இந்த இணைப்பில் காணலாம் .

கடைகளில் வாடகைக்கு இருப்போர் பொருட்களை அகற்றிக்கொண்டிருப்பதாக அவ்விடத்திலிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தச் சந்தியில் மத்திய வீதிப் பகுதியில் தூபி ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. முன்னதாக பஸ்மலா சந்தி என்றும் தற்போது அல் குர்ஆன் சந்தி என்றும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தரப்பினால் இச்சந்தியில் நடைபெறும் அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் முரணான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

மேலும் குட்வின் சந்திப் பகுதியில் பிரதான வீதியில் மெத்தைப்பள்ளி நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டு வந்த கடை கட்டுமான வேலைகள் அஸ்பரின் சகோதரர் அசீம் மற்றும் ஒன்றுவிட்ட சகோதரர் நஜீம் ஆகியோரின் தலையீட்டினால் நெருக்கடிக்குள்ளான நிலையில், அஸ்பரால் அக்கடைகள் அமைக்கப்படும் காணி அரச காணி என்ற காரணத்தினால் கட்டுமான வேலைகளை நிறுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டடைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Update 01: 01:30 அளவில் கிடைத்த தகவல்களின் படி, கடைகளுக்குரிய மின் விநியோகத்தை துண்டிக்கும்படி மின்சார சபையை அஸ்பர் கோரியுள்ளதாகவும் (இத்தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை) நகரசபைப் பணியாளர்கள் சகிதம் அஸ்பர் குட்வின் சந்திக்கு வந்து பொருட்களை அகற்றுவதை துரிதப்படுத்தும்படி கடைகளில் வாடகைக்கு இருப்போரைக் கோருவதாகவும் அறியக்கிடைக்கிறது.

Update 02: இவ்விடயம் தொடர்பில் எமது செய்தியாளர்களுடன் பேசிய தவிசாளர் இக்கடைகள் சட்டவிரோத கட்டடங்கள் என்ற வகையில் வீதி அபிவிருத்தி வேலைகளுக்காக இவற்றை அகற்றித் தருமாறு மெத்தைப்பள்ளி நிர்வாகத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்ததாகவும், அவர்கள் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார். எனவே கடைகள் நகரசபையால் இன்று பின்னேரத்துக்கு இடையில் உடைத்து அகற்றப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார். நிர்வாக சபைத் தலைவர் மர்சூக் அஹ்மத்லெப்பையை தொடர்புகொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

Update 03: 14:15 pm: தற்போதைய தகவல்களின்படி, கடைகளின் கூரைகள் நகரசபை தொளிலார்களினால் அகற்றப்படுவதாகவும், வாடகைக்கு இருந்தோர் பொருட்களை தீவிரமாக அகற்றிக்கொண்டிருப்பதாகவும் இவ்விடத்திலுள்ள அனைத்து கடைகளினதும், வீதிப்பக்கம் உள்ள அரைவாசிப் பகுதிகள் உடைத்து அகற்றப்படும் எண்டும் தெரிவிக்கப்படுகிறது. பள்ளிவாயல் நிர்வாகம் சார்பில் இவ்விடத்தில் எவரும் பிரசன்னமாகி இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Update 04: 14:20 pm: மெத்தைப்பள்ளி நிர்வாகம் காத்தான்குடிப் பொலிசில் இவ்விடயம் தொடர்பில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து ஸ்தலத்துக்கு விரைந்த பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி நிலைமையை அவதானித்து, நாளைக் காலை 8:00 மணி வரை வர்த்தகர்களுக்கு பொருட்களை அகற்ற அவகாசம் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் பொருட்களை அகற்ற முடியாத வர்த்தகர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், பொருட்கள் அகற்றப்பட்ட சில கடைகளை உடைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உடைக்கப்படும் கடைகளில் அஸ்பரின் தந்தை வாடகைக்கு இருக்கும் கடையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குட்வின் சந்திப் பகுதியில் தயார் நிலையில் கலகத்தை அடக்கும் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பான மேலதிகச் செய்திகள் கிடைக்குமிடத்து உடனடியாகப் பதிவேற்றப்படும்:

This slideshow requires JavaScript.

10 Responses to “குட்வின் சந்தி – மத்திய வீதியிலுள்ள மெத்தைப்பள்ளி கடைகள் இரண்டு மணிக்கு உடைக்கப்படும்: அஸ்பர் (Update 5 – படம் இணைப்பு)”

  1. sri boss said

    கடைகள் உடைக்கப்பட்டால் ………….கு கடுமையான விளைவுகளை எட்படுத்த தயராக உள்ளோம்! இடண்டில் ஒன்று? நாங்களும் மனிதன்தான்

  2. Baba Azzam said

    மையவாடி அரச காணி என்று சொல்லப்பட்டது, எதிர்வரும் காலத்தில் ஒட்டுமொத்த காத்தான்குடி பிரதேசமே அரச காணியில்தான் இருக்கிறது என்று சொல்லமாட்டார்கள் என்று நம்ப முடியாது. தங்களுக்கு நல்லது செய்வோம் என பிச்சை கேட்டுப் பெற்ற பதவியை மக்களுக்கு எதிராகவே திருப்புகின்றனர்.

    இவர்கள் போன்றவர்கள் கல்லியங்காட்டைப் பற்றிப் பேசுவார்களா என்ன?

  3. உனது கஃபாவை யாணை படை மூலம் அழிக்க வந்த ஆப்ரஹாவையும் அவனது படையையும் அழிதொழித்த அல்லாஹ்வே உன்னிடமே …. இவரது அட்டகாசத்தையும் இவரது ….. அட்டகாசத்தையும் முறையிடுகிறோம் உனகாக உன்னை வணங்கும் உன்னை மட்டுமே அழைக்க பயன்படும் உன் வீட்டுக்குறிய சொத்தை பாதுகாப்பது உன் கடமையாகும் நீ உடனடியாக உன் தீர்பை அனுப்புவது எத்தனையோ ஆயிரம் உன்னை நம்பிய உள்ளங்களில் உன்மேலான உருதியை அதிகரிக்கும் மாறாக நீ இதிலும் பாரா முகமாக இருந்தியனில் திக்கற்ற நிலையில் இருப்போர் அழைக்க உன்னை அன்றி யார் இருக்கின்றனர்

  4. mjm said

    weldone chairman! arasa pumiyai ellam pallikku sonthamakki athil kulir kaya ninaikkum nirvahihalukku ippadittan seyya wendum. ……………. inthakkadaihalai udaippathal palli nadatta mudiyamal ponal neengal seivathu thavaru. m………… makkalin nalanum urin nalanum emakkum palli vayalhalukkum mukkiyam

  5. எம் ஜே said

    இவர்களை போலல்லாது முழு நாட்டையுமே ஆண்ட சதாம்,முபாரக்,கடாபி போன்றவர்களது நிலைமையே இறுதியில் இவர்களுக்கும் ஏற்படும்

  6. محمد said

    பள்ளி நிர்வாகம் மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தால் என்ன?
    A Kattankudy spring….

  7. Aliyar said

    அண்மைக்காலமாக எமது ஊரில் பொதுச்சொத்துக்கள், மார்க்க விடயங்கள் போன்றவற்றை தமது சுய இலாபத்திற்காகவும் பதவிக்காகவும், குரோதம், பழிவாங்கல் போன்ற காரணங்களுக்காக கையிலெடுப்பது அதிகரித்துள்ளது.. இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரையுமே ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது ஏதாவது ஒரு விதத்தில் சுயலாபத்திற்காகவே செயற்படுவது புலப்படுகிறது.

    அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.. இவர்களுக்கும் மரணம் வரும் என்ற சிந்தனையை இவர்கள் மறந்து விட்டார்களோ என்னவோ?? பொதுச்சொத்துக்கள் மார்க்க விடயங்கள் பற்றி குர்அன் அல்-ஹதீஸ் விடுத்துள்ள எச்சரிக்கைகளையும் துச்சமென மதித்து செயற்படும் இவர்கள் அல்லாஹ்வின் பிடியில் இருந்து தப்ப முடியாது….. யாஅல்லாஹ் இவர்களை நீயே பாரமெடுத்துக்கொள்…!! இவர்களுடைய அநியாயங்களுக்காக அப்பாவி, பாமர மக்களை தண்டித்து விடாதே!!! இவர்களுக்கு நேரான நல்ல புத்தியை கொடுத்தருள்….

    பாவம் செய்வதை பெ(f)ஸனாக பார்க்கும் இக்காலத்தில் இவர்கள்தான் உதாரணங்கள்… இந்த ஊரையும் மக்களையும் இவ்வாறான கெட்டவர்களிடம் இருந்து காப்பாற்று யாஅல்லாஹ்… காப்பாற்று…!!!

  8. imran said

    ஒரு வரியில் கமெண்ட் அடிக்கணும் அப்பிடிண்ட
    “காத்தான்குடி திருந்தாது ”
    அடுத்த முறையும் பாருங்க இவர்தான் நகர பிதாவ அறிவிப்பாங்க இல்லாட்டி …….. …………அறிவிப்பாங்க
    நல்லவன் படிச்சவன் வந்தா காத்தான்குடி மக்களுக்கு பிடிக்காது
    எல்லாதுக்கு மேலாக அல்லாஹ் இருக்கான் அத மட்டும் நம்புங்க

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s