மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரியின் பெருநாள் வாழ்த்து
Posted by Kattankudi Web Community on 07/11/2011
ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்
நமது இலங்கை திருநாட்டிலும், கடல் கடந்த நாடுகளிலும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு மலர்ந்துள்ள ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டில்லா மகிழ்ச்சி அடைகின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் தீனை நிலைநாட்டும் பணியில், நபி இப்றாஹிம் (அலை) அவர்களது தியாக மனப்பாங்கையும், இஸ்லாத்தின் தூதை உலகறியச் செய்யும் அன்னாரது அற்பணிப்பையும் முன் மாதிரியாகக் கொண்டு நம்மை நாம் வளப்படுத்திக் கொள்ள இத்தியாகத் திருநாளில் உறுதி கொள்வோமாக!
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ صَالِحَ الْأَعْمَالِ
அதிபர், விரிவுரையாளர்கள், மாணவிகள், மற்றும் நிருவாக உறுப்பினர்கள்.
மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரி,
காத்தான்குடி.
2011-11-07






