பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பெருநாள் வாழ்த்துச் செய்தி
Posted by Kattankudi Web Community (KWC) on 07/11/2011
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
‘தியாக திருநாளாம் இத்திருநாளில், தியாக உணர்வுடன் செயற்பட திடசங்கர்ப்பம் பூனுவோமாக’
முஸ்லிம்களாகிய எமக்கு தியாகத்தையும், அர்ப்பணிப்புடனான செயற்பாட்டையும் உணர்த்துவதே இத்தியாக திருநாளாகும். வெறுமனே பெருநாளை மட்டும் கொண்டாடாமல் தமது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் தியாகத்தை நினைவுபடுத்தி அதன்படி நடப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
பல்வேறு அசம்பாவிதங்களுக்கு காரணம் நாம் தியாக உணர்வுடன் செயற்படாமையாகும்.
ஹஜ்ரத் இப்றாஹீம் (அலை), ஹஜ்ரத் முஹம்மத் நபி (ஸல்) காட்டித் தந்த தியாக உணர்வுகளையும், சிந்தனைகளையும் தமது வாழ்வில் கடைப்பிடிப்போமாக இருந்தால் உலகத்தில் எங்கும் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை. ஆகவே, நாங்கள் எப்போதும் பொறுமையுடனும், சகிப்புத் தன்மையுடனும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வாழ பழகிக் கொள்ள வேண்டும். அவ்வாறான ஒரு வாழ்க்கையை நினைவுபடுத்துவதே இப்புனித ஹஜ்ஜுப் பெருநாளாகும்.
பல்வேறுபட்ட சமூகங்களுக்கு மத்தியில் வாழ்கின்ற நாம், எமது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் முன்மாதிரியாக திகழ வேண்டும். நமது மார்க்கத்தை அந்நிய மதத்தவர்கள் புரிந்து கொள்ள இருக்கின்ற ஒரே வழி நமது முன்மாதிரிகளாகும்.
எனவே, பொறுமையுடனும், சகிப்புத் தன்மையுடனும், தியாக சிந்தனையுடனும் வாழ வேண்டும் என்று, இன்றைய நன்நாளில் நாம் ஒவ்வொருவரும் திடசங்கர்ப்பம் பூனுவோமாக. புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது சார்பிலும், எனது குடும்பத்தவர்கள் சார்பிலும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.






