கவிச்சுடர் ரீ.எல்.ஜவ்பர்கான் அவர்களின் ஈதுல் அழ்ஹா வாழ்த்துச்செய்தி
Posted by Kattankudi Web Community (KWC) on 07/11/2011
இலங்கை மனித உரிமைகள் சமாதான நீதவான்கள் அமைப்பின் கிழக்குமாகாண அமைப்பாளரும், சமூகப்பணியாளரும், அரசியல் செயற்பாட்டாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான கவிச்சுடர் ரீ.எல்.ஜவ்பர்கான் அவர்கள் விடுத்துள்ள புனித ஈதுல் அழ்ஹா வாழ்த்துச்செய்தி.
கலிமாவின் பூமியாம் காத்தான்குடி மண்ணின் இஸ்லாமிய உம்மத்துகளுக்கு தித்திக்கும் தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்.
தியாகத்தின் முதல் பக்கமே ஹஜ்ஜூப் பெருநாள்தான். அல்லாஹ்விற்காக மாத்திரமே அனைத்தும் என்ற தத்துவத்தை மெய்ப்பித்துச்சென்ற அல்லாஹ்வின் நேசர் இப்றாஹீம் (அலை) அவர்களதுதியாககம் முழு உலகையும் நிமிர்ந்து பார்க்க வைக்கிறது.
சத்தியம் வென்றே தீரும் என்கின்ற உயர் மெய்ப்பித்தல் உயிர்பெற்ற தியாகத்தின் வரலாற்றின் சுருக்கமான ஹஜ்ஜூப் பெருநாள் ஒரு பதச்சோறாகும்.
உலக ஈமானிய சமுகத்தின் குரல்வளை நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஏகாதிபத்தியத்தின் கரங்கள் உயர்ந்துள்ள இன்றைய சூழலில் உலக கலிமாவின் முகங்கள் ஒன்றுபடுதலின் மூலம் சியோனிஸத்திற்கும் ஏகாதிபத்தியத்தினதும் கொடுரமிக்க சிந்தனைகளை கிழித்தெறியமுடியும். எமது சமுகத்திடமிருந்து பறிக்கப்பட்ட எமது நிலங்கள் எமக்கு கிடைக்கவும் வடக்கு முஸ்லிம்களின் வாழ்வில் நிம்மதி மலரவும் பிரார்த்திப்போமாக.






