கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை
Posted by Kattankudi Web Community (KWC) on 04/11/2011
முஹம்மது நபி(ஸல்) தொடர்பான கேலிச்சித்திரத்திற்கு எதிராக!
உணர்வுகள்பொங்கி
உயிரைக்குடிக்கும்
கண்களில் குருதி
கண்ணீராய் வடியும்
இதயம் எங்கினும்
பரந்து கிடக்கும்
நபியின் புகழை
நசுக்கும் போது.
இதயம் வலிக்கும்
இரத்தம் கொதிக்கும்
இறையின் தூதர்
எம் பெருமானை
இழிவாய் எவரும்
இகழ்ந்து விடின்
மற்றவை மறந்து
மனசு உருகும்.
உடலை இயக்கும்
உயிரை விட
உறவை உணர்த்தும்
தாயை விட
உறவில் உயர்ந்த
தந்தையை விட
உத்தம நபி மேல்
அன்பு எமக்கு.
மனதில் தோய்ந்த
கறையை அகற்றி
மடமை பேயை
தூர விரட்டி
புனித தீனை
பூக்க வைத்த
பூமான் பெருமை
கழுதைக்குத் தெரியுமா?
அகிலம் படைத்த
அல்லாஹூத்தஆலா
அருட்கொடையாய்
அத்தாட்சிப் படுத்திய
அன்னல் நபியை
இழிவாய் உரைக்க
அற்ப பிராணிகளுக்கு
என்ன துணிவு.
முஸ்லிம் உம்மா
சும்மாயிராது
முஹம்மது நபியில்
முள் பட்டாலும்
தன்னுயிர் போக்க
துணிந்த மக்கள்
நிறைந்ததிந்த
இஸ்லாம் மார்க்கம்.
ஒளியின் பிளம்பாய்
உலகில் உதித்த
உத்தமத் தூதர்
எம் பெருமானை
இருளே சூழ்ந்த
இதயம் உள்ளோர்
இழிந்துரைப்பது
வேடிக்கையன்றோ?
தீயில் இட்டு
எரித்திட்ட போதும்
இரண்டு துண்டாய்
பிழந்திட்ட போதும்
இதயத்தில் உள்ள
நபியின் அன்பை
அணுவின் அளவேனும்
அகற்றிட முடியாது.
இனியும் எங்கள்
நபியின் புகழை
அழித்திட கயவர்
துணிவு கொண்டாள்
ஒற்றுமையென்னும்
கயிறு கொண்டு
கயவர் கூட்டத்தை
கட்டத் துணிவோம்.








Prahasakkavi Anwer said
உள்ளமது கொதிக்குது
உணர்வுகள் அணுகுண்டாய் வெடிக்குது
குட்டிச்சாத்தாங்களின்
கிறுக்கு புத்தி கண்டு