காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,236 மொத்த வருகைகள்

சத்திய சேவகர் வேண்டும்

Posted by Kattankudi Web Community on 19/10/2011

-இல்மி அஹமட் லெவ்வை-

வீட்டுச்சிறையில்
விடுதலை வேண்டி
விரக்தியில் நிரம்பி
வாழ்வின் விழிப்பில்
வாழும் -நம்
விதவையர்க்குதவ
சேவகர் வேண்டும் !
-0-

கோடையிற்
சருகிய பயிராய்
பாவம்-
முப்பது கடந்தும்-
மணங்கான –நம்
மங்கையர்க்குதவ
சேவகர் வேண்டும்
-0-
குட்டி மகள்
சட்டைச் சண்டையிலே
வட்டிக்கு பணமெடுக்க
வங்கிக்கோடும்
வறியவர்க்குதவ
வள்ளல்
சேவகர் வேண்டும் !
-0-
கானல்கள் வேண்டாம்
கதவுகள் தட்டும்
உண்மைக்
கல்புகள் வேண்டும்
-0-

One Response to “சத்திய சேவகர் வேண்டும்”

  1. விதவைகள் வாழ்வில்
    விளக்கேற்ற நினைக்கும்
    உங்களின் கவிதை
    அவர்களின் வாழ்வை
    சிறப்புற வைக்கும்
    என்ற நம்பிக்கையுடன்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s