மெத்தைப்பள்ளிவாயலுக்கு ஏற்படும் நஷ்டத்திற்கு பள்ளிவாயல் நிருவாகிகளே காரணம்- நகரசபை தவிசாளரின் தம்பி அசீம்(காணொளி இணைப்பு)
Posted by Kattankudi Web Community on 18/10/2011
காத்தான்குடி மெத்தைப்பள்ளிவாயலினால் குட்வின் சந்தியில் கட்டப்படும் கடைகள் விவகாரம் தொடர்பில் எனது உறுதியில் சொல்லப்பட்டவாறு பொதுவான ஒழுங்கையை பெறுவதற்காக எனது சகோதரரான காத்தான்குடி நகர சபை தலைவர் அஸ்பரையும், காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பள்ளிவாயல் நிருவாகிகளையும் நீதி பெறுவதற்காக நீதிமன்றம் கொண்டு சென்றுள்ளேன் என நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பரின் சகோதரர் எஸ்.எச்.அஸீம் தெரிவித்தார்.
எனது சகோதரர் காத்தான்குடி நகர சபை தலைவராக இருந்தாலும் ஊருக்கு நகர சபையின் தலைவர் என்ற வகையில் அவருக்கு இதைப்பார்க்கும் பொறுப்புள்ளது என மெத்தைப்பள்ளிவாயல் நிருவாகிகளை கடுமையாக ஏசியதாக குற்றம் சாட்டப்படும் எஸ்.எச்.அஸீம் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பான அவரின் கருத்துக்கள் அடங்கிய காணொளியை இதில் காணலாம்.








sahid said
he talk about carriying janasa but he forget about he fight for property belonged masjid.
azrin said
இவ்வளவு நாளும் பழைய கட்டிடம் இருந்த போது மையித்துக்கொண்டு போகணும் என்பது தெரியாமல் தான் தம்பி அசீம் அந்த இடத்தில வசித்தயாக்கும் , தவிசாளர் புகாரின் பேரிலேயே நடவடிக்கை எடுக்கிறார் என்பது உண்மைதான் எனின் பின்பகுதிக் கடை கட்டி எவ்வளவோ நாட்களாகிறது அதுவரையில் அந்த நிலம் அரச பூமி என்பது தவிசாளருக்கு ஏன் தெரியாமல் போனது என்பதுதான் நாமெல்லோருமே சிந்திக்க வேண்டிய விடயம் ,அது ஏனோ தெரியாது கம்பி அறுக்க காரணமான தம்பியை பொலிசார்இன்னமும் கைது செய்யவில்லை இந்த இடத்தில் தவிசாளரின் தம்பி இல்லாமல் வேறு ஒருவர் என்றால் ,,,,,,,,,,,அதுசரி கம்பிஅறுக்க இவர்களுக்கு எந்தசட்டம் அனுமதித்தது என்பதுதான் புரியவில்லை? “அக்கிரமக் காரர்களில் எல்லாம் அக்கிரமக் காரனாக அல்லாஹ் இருக்கிறான்” தம்பி அசீம் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் ஒவ்வொரு அங்குலத்துக்கும் பதில் சொல்லியே ஆஹ வேண்டும்.
azaar mohamed said
இவர் கூறுவது போன்று இந்த காணிக்கான உருதியில் இந்த ஒழுங்னை காட்டப்பட்டிருந்தால், இவர் தீர்ப்பிற்காக நீதிமண்றத்தை நாடுபவராக இருந்தால் எதற்காக கம்பிகளை வெட்ட வேண்டும்… நீதிமண்றத்திற்கு போய் நியாயமான முறையில் இதற்கு தீர்வு காணமுடியுமே…. இதுபோன்ற செயல்களால் ஏதும் லாபம் கிடைக்கப் போவதில்லை.. பணத்தாலோ….. பணத்திமிறாலோ எதையும் சாதித்துவிட முடியாது… இதில் கூடுதலான எழுத்துப் பிழைகள் உள்ளன. மன்னிக்கவும்.