காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் புதிய மாணவர் அனுமதி
Posted by Kattankudi Web Community (KWC) on 07/10/2011
காலியில் உள்ள இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2012 ஜனவரி மாதம் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்கான மேற்படிக் கல்லூரியின் சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவு, அல்குர்ஆன் மனனப் பிரிவு என்பவற்றின் முதலாம் ஆண்டிற்கு மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதாக இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி தீனுல் ஹஸன் ( பஹ்ஜி ) தெரிவித்தார்.
பின்வரும் தகைமையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்:
சரீஆப் பிரிவு:
15 வயதுக்குட்பட்ட தற்பொழுது பாடசாலையில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் அல்குர்ஆனைச் சரளமாக ஓதத் தெரிந்தவர்கள்
அல்குர்ஆன் மனனப் பிரிவு:
11-13 வயதுக்கிடைப்பட்ட அல்குர்ஆனைச் சரளமாக ஓதத் தெரிந்தவர்கள் .
விண்ணப்பதாரிகளின் முழுப் பெயர், வயது, கல்வித் தரம், சேரவிரும்பும் பகுதி விலாசம், தொடர்புகொள்ள வசதியான தொலைபேசி இலக்கம் என்பன பற்றிய முழு விபரங்கள் அடங்கிய சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
விண்ணப்ப முடிவுத் திகதி : 31-10-2011 விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
அதிபர்,
இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி,
த. பெ. இல: 105,
இல.: 50, ஹிரிம்புர குறுக்கு வீதி, காலி
தொ. பே. இல. : 0912243672 ஃ 077 7921418
தொ. நகல் : 0912222037 ஈமெயில்: ibnuabbas.galle@gmail.com
இங்கு மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்பக் கல்வி வழங்கப்படுவதுடன் மாணவர்கள் க. பொ. த. சா/த, உ/த. பரீட்சைகளுக்கும் தயார்படுத்தப்படுகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது







