அடிச் செருப்பாலே!
Posted by Kattankudi Web Community (KWC) on 15/09/2011
கற்கை நன்றே;
கற்கை நன்றே;
பிச்சைபுகினும்
கற்கை நன்றே;
இல்லை இல்லை
கற்கை நன்றே;
கற்கை நன்றே;
கற்றதைக் கொண்டு
மணாளனை
விற்பது நன்றே!
பிச்சைப் பெறத்
தடுக்கப் பள்ளிப்
பட்டம் பெறவேண்டுமடா;
நீயோ;
பெற்றப் பட்டம் கொண்டு;
பிச்சைக் கேட்க
வந்தாயடா!
மென்றுத் திண்ணும்
உன் உறவிற்கு
நான் என்ன பலி ஆடா;
தினைக்கூலியாய்
இருந்தாலும் பரவாயில்லை;
முதலில் கரம் கொடுக்க
என் விரல் தலைமைத்
தாங்குமடா;
கைக்கூலி கேட்டு நீ வந்தால்;
என் விழி;
செருப்பைத் தேடுமடா!
நன்றி – itzyasa வலைப்பூ








Aliyar said
சபாஷிடா மன! அரும அரும!!! என்ன ஒரு அருமயான கவித…… டியூபுலைட்டுகளைத் தவிர?? அனைவருக்கும் ஆணியடிச்சமாதிரி தம்பி அரபாத்து இந்த கவித மூலயமா சொன்ன விசயம் புரிஞ்சிருக்கும்….
nizarmsm said
Excellent poem.
riza said
“பிச்சைப் பெறத்
தடுக்கப் பள்ளிப்
பட்டம் பெறவேண்டுமடா;
நீயோ;
பெற்றப் பட்டம் கொண்டு;
பிச்சைக் கேட்க
வந்தாயடா! (மிகவும் பிடித்த வரிகள் )