காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

கருப்பு ஒக்டோபர்: கவிதைப் போட்டி

Posted by Kattankudi Web Community (KWC) on 04/09/2011

இலங்கையின் வடபுலத்து முஸ்லிம்கள் அவர்களின் தாயகப் பிரதேசத்திலிருந்து விடுதலைப் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு எதிர்வரும் அக்டோபர் மாதத்துடன் 21 வருடங்கள் நிறைவடைகின்றன.

இதனை முன்னிட்டு புலம்பெயர்ந்த இலங்கை முஸ்லிம் சம்மேளனமும், யாழ் முஸ்லிம் (www.yarlmuslim.blogspot.com) வலைத்தளமும்  இணைந்து கவிதைப் போட்டியொன்றை ஏற்பாடு செய்துள்ளன.

போட்டி நிபந்தனைகள்

  1. வயதெல்லை கிடையாது.
  2. கவிதைகள் மரபு சார்ந்தவையாகவோ அல்லது புதுக்கவிதையாகவோ இருக்கலாம்.
  3. கவிதைகள் சுருக்கமாக இருப்பது சிறந்தது.
  4. கவிதைகளின் கருப்பொருள் புலிகள் வடக்கு முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு மேற்கொண்டதை மையப்படுத்தியும், அதனால் ஏற்பட்ட அவலங்கள், வடக்கு முஸ்லிம்களின் தற்போதைய நிலை மற்றும் அவர்களின் எதிர்காலத்தை மையப்படுத்தியதாகவும் அமைவது விரும்பத்தக்கது.
  5. ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட அல்லது ஒலி/ஒளிபரப்பு செய்யப்பட்ட கவிதைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  6. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

பரிசில்கள் விபரம்

முதலாவது பரிசு - 10,000 ஆயிரம் ரூபாவுடன், பெறுமதிமிக்க பரிசில்கள்.
இரண்டாவது பரிசு - 5,000 ஆயிரம் ரூபாவுடன், பெறுமதிமிக்க பரிசில்கள்.
மூன்றாவது பரிசு – 2,500 ரூபாவுடன் பெறுமதிமிக்க பரிசில்கள்.
நான்கு ஆறுதல் பரிசில்களும் உண்டு.

போட்டியாளர்கள் தமது கவிதைகளை தெளிவான எழுத்தில், முகவரி, தொழில், சிறுவர்ண புகைப்படம், தொலைபேசி இலக்கம் மற்றும் பாடசாலை மாணவர்களாயின் பாடசாலை விபரம் ஆகியவற்றுடன் எதிர்வரும் அக்டோபர் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்க முடியும்.

 இலங்கை முகவரி

A.A.M. SAJEETH
48. PERCI DIAS MAWATTAH,
MABOLLA,
WATTALA.

 வெளிநாட்டு முகவரி

ABDUL AZEEZ
BAD STRASSE 6,
6423 SEEWEN,
SWITZERLAND.

அதேவேளை போட்டியாளர்களினால் அனுப்பி வைக்கப்படும் அனைத்து கவிதைகளும் காலக்கிரமத்தில் நூலுருவாக்கம் செய்யப்படுமென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s