இன்றைய ஜும்ஆவின் ஒலிப்பதிவு
Posted by Kattankudi Web Community on 02/09/2011
ஒலிப்பதிவு: AM. சாதிகீன்
இடம்: காத்தான்குடி 01 , பெரிய மீரா ஜும்ஆப் பள்ளிவாயல்
தலைப்பு: எமது சமூகத்தின் கல்வியில் கவனம் செழுத்துவோம்.
நிகழ்த்துகிறார்: அஷ்-ஷெய்க் MI. அப்துல் கபூர் (மதனி)
ஒலிப்பதிவினைக் கேட்க கீழேயுள்ள சிவப்புநிற அம்புக்குறியினை கிளிக் செய்யவும்.







Abdul Raheem said
Good timely Kothba for our people to think future of Kattankudy generation and to make investment on education.
this is.mail said
எமது ஊரின் தற்போதைய கல்விநிலையினை அருமையாக விளக்கினார்கள் மதிப்பிற்குரிய கபூர் மதனி அவர்கள்.
எமது ஊர் ஆண்களை விட எமது ஊர் பெண்கள் ஏன் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்றால், முன்னொரு காலத்தில் எமது ஊர் பெண்கள் வெளிநாடு சென்று உழைத்தார்கள். ஏன் தெரியுமா? அப்போதுதான் தனக்கென வீடு கட்ட முடியும் அத்துடன் இலகுவாக திருமணம் நடக்கும் என உணர்ந்ததால். ஆனால் தற்போது வெளிநாடு செல்லும் பெண்களை ஆண்கள் திருமணம் செய்ய விரும்புவதில்லை. அதனால் தான் எவ்வாறாவது படித்து ஒரு ஆசிரியையாக வந்துவிட்டால் தனக்கு வீடு இல்லாவிட்டாலும் இலகுவாக திருமணம் செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதாலாகும். இதனை பெண்களும் அவர்களது பெற்றோர்களும் உணர்ந்ததால் அதிகமான ஆசிரியைகளையும் அரச சேவையிலுள்ள பெண்களையும் இலகுவாக எமது ஊர் பெற்றுள்ளது.
ஆண்கள் வெளிநாடு செல்வதும் எவ்வாறாவது தனது சகோதிகளை கரை சேர்க்கவேண்டும் என்ற சுமைக்காக இருந்தாலும் தனது வாழ்க்கைக்காக பெண்கள் வசதியான மாப்பிள்ளைகளை எதிர்பார்ப்பதால் ஆண்கள் தன்னிடம் அறிவுத்திறமை இருந்தும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது பணத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
ஆண்கள் கல்வியினை இடைநிறுத்த பெற்றோர்களின் ஏழ்மை நிலை முக்கிய காரணமாகும். ஒரு பிள்ளை கல்விபயில்வதற்கான ஆர்வம் அதனிடத்தில் இருந்தாலும் பெற்றோர் ஏழைகளாக இருப்பதால் உறவினர்களிடம் (சொந்த மாமாவிடம்) எனது மகனின் கல்விக்கு உதவி செய்யுங்கள் எனக்கேட்டால் அவர்கள் உன்மகனுக்கும் உனக்கும் எந்த தொடர்பும் இல்லை என எழுதித்தந்தால் நான் உன்மகனின் கல்வியைப் பொறுப்பேற்கின்றேன் என கூறுகிறார்கள். இதற்கு எந்தப் பெற்றோர்தான் சம்மதிப்பர்? (இது உண்மைச் சம்பவம் – எனது சொந்த அனுபவம்.)
எனவே, அறிவினை வழங்குவது அழ்ழாஹ்வின் வசமுள்ள ஒன்று. ஆனால் அதற்காக நாம் முயற்சிக்க வேண்டும் அல்லது முயற்சிப்பவர்களுக்கு எந்த பலனும் எதிர்பாராமல் அழ்ழாஹ்விற்காக என்ற தூய எண்ணத்துடன் உதவவேண்டும். நம்மால் உதவி பெற்றவர் குறிப்பிட்ட இலக்கை அடைந்துகொள்ள முடியாவிட்டாலும் அழ்ழாஹ்வின் நாட்டத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நம் அனைவரின் தவறுகளையும் அழ்ழாஹ் அவனுடைய ரஹ்மத்தைக் கொண்டு மன்னிப்பானாக.
இந்த ஜும்ஆ குத்பாவினை உங்கள் கொம்பியுட்டருக்கு டவுன்லோட் செய்ய : http://a4.video3.blip.tv/0330009303014/Kwcaudio-KKY01MeeraJummaMosque02092011Jumma122.mp3
MHA.Rasool said
அப்துல் கபூர் மதனி அவர்களின் கருத்துக்கள் ஆழமாக சிநதிக்கப்பட வேண்டியவை.
நிச்சயமாக கறறவர்களும் கற்காதவர்களும் சமமாக மாட்டார்களே!
வர்த்தக சமூகத்திற்கு சமமாக வாழுதல் என்ற நமதூர் வாழ்வியல் போக்கு
நமதூர் கல்வியை வெகுவாக பாதித்துள்ளது.இதனால் எதிர்காலத்தில் எல்லா துறைகளிலு்ம் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு ஊராக மாற்றடையலாம்.
Badurzaman .uk said
very good bayan our kattankudi community think about this. and allah will help us for our community future foe education alhamthulillah allah akbar