வள்ளல் மாதமே விடைபெறலாமா?
Posted by Kattankudi Web Community (KWC) on 30/08/2011
கண்ணியம் நிறைந்த
புண்ணியம் சுமந்திட்ட
மாதமே-நீ
புறப்படலாமா ?
இரும்(ப்)பு
பெட்டகங்களையும்
இஸ்லாத்திங்காய்
திறக்கவைத்தவன்
நீயல்லவா?
தாயே –தன்
சிசுவை
தண்ணீர்க்கிணற்றுக்குள்
வீசிய அதிர்வில்
உறைந்தது
ஊரின் -உதிரங்கள்?
உன் ஜனனத்தால்…
ஈமானியம்விளித்தது
தா(தூ)ய்மையின்
தாள்பாள் திறந்தது….
மூலையில் முளைத்த
மௌட்டீகமும்
மறைந்தது!
மர்ம மனிதப்பீதி-
முழு தேசத்தையும்
உலுப்பிய போது…..
திரையிலாத்துஆக்களால்
தடையிலா வணக்கம் செய்து
தேற்றமும் கண்டோம் !
தோற்றது துஸ்டர் கூட்டம்!
நாள்முழுதும்
இறையோடு இணைகின்ற
ஆத்மீக அகக்கற்றல்-உன்
பட்டறையில்லவா
பட்டை தீட்டப்பட்டது.
மான்புள்ள மாதமே !
இவையுன் மகத்துவ சான்றுகள்
விளிகள் கசிய
விடை பெறுவோம்…
கலிமத்து காதலனே…!
சென்று வா-
நாளை ‘மஹ்சரில்’
சாட்சியாளனாய்-உனை
சந்திப்போம் !







