மெத்தைப்பள்ளியில் அஸ்பர் ஏற்பாடு செய்யும் சஹர் உணவு வழங்கும் நிகழ்வு – சில அவதானங்களும் குறிப்புகளும்.
Posted by Kattankudi Web Community (KWC) on 25/08/2011
மூன்றாவது வருடமாகவும் எதிர்வரும் ரமழான் 27வது இரவு காத்தான்குடி 03 மெத்தைப்பள்ளிவாயலில் நகரசபைத் தவிசாளர் அஸ்பர் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்வதாக உரிமை கோரும் சஹர் உணவு வழங்கும் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
கடந்த முறை பள்ளி நிர்வாகத்துக்கு தகவலாகவே இந்நிகழ்வு அறிவிக்கப்பட்டு அவர்களைச் சங்கடத்துக்கு உள்ளக்கியிருந்தது கவனிக்கத்தக்கது. இம்முறை சற்று முன்னேறி இதை நடத்த அனுமதிக்குமாறு வேண்டுகோள் ஒன்று அஸ்பாரால் தனிப்பட்ட முறையில் விடுக்கப்பட்டாலும், அதற்கு நகரசபைக் கடிதத் தலைப்பு பாவிக்கப்பட்டுள்ளது.
இது அதிகார துஷ்பிரயோகத்தின் ஒரு வடிவமாகும். நகரசபைக்கு சம்பந்தமேயில்லாத ஒரு விடயத்துக்கு அதன் கடிதத் தலைப்பை பாவித்து அனுமதி கோருவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
இக்கடிதத்தில் குறித்த நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தன்னால் செய்யப்படுவதாக அஸ்பர் குறிப்பிட்டுள்ளார். அதாவது தானே இதற்கான நிதிப் பங்களிப்பை ஏற்பாடு செய்வது போன்ற ஒரு தோற்றத்தை இக்கடிதம் காட்டுகின்றது.
எனினும் தனவந்தர்களிடமிருந்து இதற்கான பண வசூல், அரிசி, மாடு போன்ற சமைக்கத் தேவையான பொருட்கள் சேகரிக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான எவ்வித பற்றுச்சீட்டுகளும் வழங்கப்படவில்லை.
பற்றுச்சீட்டுகள் மற்றும் முறையான கணக்கறிக்கைகள் இல்லாத எந்த செயற்பாடும் வெளிப்படைத்தன்மை அற்றதாகவும், உள்ளக மோசடி நோக்கை கொண்டதாகவே நோக்கப்பட முடியும்.
கடந்த முறையும் இவ்வாறான சேகரிப்புகள் மேற்கொள்ளப்பட்ட போதும் எவ்விதமான கணக்கறிக்கைகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது.
இவை தவிர பள்ளிவாயல் நிர்வாகத்தில் பதவி ஒன்றையும் வகிக்காத அஸ்பர் தனது அதிகார பலத்தை தவறாகப் பயன்படுத்தி பள்ளிவாயலில் இவ்வாறான உணவு வழங்கும் நிகழ்வுகளை நடத்துகிறார் என்ற குற்றச் சாட்டுகளும் கவனிக்கத்தக்கவை. ஏனெனில் கடந்த முறை இவ்வாறான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன் என்ற தோரணையிலேயே கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இதனால் கடந்த வருடம் பல நிர்வாக சபை உறுப்பினர்கள் இவ்விடயம் தொடர்பில் அதிருப்தியடைந்திருந்தனர்.
இவ்வாறான செயற்பாடுகள் நிர்வாக சபையின் கட்டுப்பாட்டை இழக்கச் செய்வதுடன், விரும்பியவர்கள் விரும்பிய நிகழ்வை பள்ளிக்குள் ஏற்பாடு செய்யக்கூடும் என்ற விரும்பத்தகாத நிலையை ஏற்படுத்தக் கூடும்.
நிர்வாக சபைக்குள் இவ்வாறான நார்ஸா, சோறு விநியோகம் போன்றவற்றை சொந்தக் காரணங்களுக்காக ஆதரிக்கும் நபர்களும், அஸ்பரின் அரசியல் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக நிற்கும் இளைஞர் அணி உறுப்பினர்களின் உறவினர்களும் இருப்பது நிர்வாகத்தின் மீது அதிகாரம் சார்ந்த நிர்ப்பந்தத்தை பிரயோகிப்பதற்கு சாதகமாக அமைவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
முன்னதாக புஹாரி ஓதுவது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையில் குறித்த இளைஞர் அணி பள்ளிக்குள் புரிந்த காடைத்தனங்களும் அவற்றுக்கு பின்னணியில் இருந்த தவிசாளர் இருக்கிறார் என்ற மறைமுகமான இறுமாப்பையும் எமது இணையத்தளம் சுட்டிக்காட்டியிருந்தது.
பின்னர் அணித்து தீர்மானங்களையும் மீறி புஹாரி நிறைவுநாள் அன்று நார்ஸா சோறு வழங்கப்பட்டதற்கும் குறித்த தரப்புகளே பின்னணியில் நின்றன.
மாத்திரமன்றி மெத்தைப்பள்ளிக்கு சொந்தமான கடையொன்றை முறைகேடாக வாடகைக்கு விட்ட விடயம் தொடர்பான பிரச்சினையிலும் இளைஞர் அணி உறுப்பினர்களின் உறவினரான நம்பிக்கைப் பொறுப்பாளரே உள்ளார்.
இவ்வாறான இளைஞர் அணிகளினால் பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள இரு வாக்களிப்பு நிலையங்களை இலக்குவைத்து வாக்கு மோசடிகளை ஒழுங்கமைக்கும் இடமாக மெத்தைப்பள்ளி வளவு பாவிக்கப்பட்டு வந்ததை கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது நிர்வாக சபை கதவுகளைப் பூட்டி தடை செய்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நடவடிக்கைகளிலும் அஸ்பரின் பங்களிப்புகள் இருந்தே வந்தன.
நகரசபைத் தவிசாளர் என்ற அதிகாரம் உள்ளூராட்சி சம்பந்தமானதேயன்றி பள்ளிவாயல்கள் போன்ற பொது நிறுவனங்கள் மீது பிரயோகிப்பதற்கல்ல என்பதை அஸ்பர் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் பள்ளிவாயல் நிர்வாகத்தினரை சங்கடத்துக்குள்ளாக்கும் இவ்வாறான நடவடிக்கைகள் தவிர்ந்து கொள்ளப்படுவது பொது நிறுவனங்களின் சுயாதீன இயக்கத்தை உறுதி செய்யும்.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் தவிர, பள்ளிவாயலுக்கு வழமையாக 27ம் இரவில் தொழ வரும் மக்களுக்கு மேலதிகமாக இந்த உணவு வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்ட முந்தைய சந்தர்ப்பங்களில் உணவைப் பெறுவதற்காக அதிகளவான மக்கள் குறிப்பாக சிறுவர்கள் ஆரம்பம் முதலே வந்துவிடுவதால், வணக்க வழிபாட்டுக்குரிய அமைதியான சூழ்நிலை அங்கு இல்லாமல் போய் சப்தமும் கூட்டமும் நிறைந்த நிலை ஏற்பட்டு விடுவது அவதானிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் தொழுகையிலும் ஏனைய வணக்கங்களிலும் ஈடுபடாமல் உணவுக்காகக் காத்திருப்பதால், அவர்கள் கதைப்பதும் சிறுவர்கள் ஓடி விளையாடுவதும், அவர்களை சிலர் அதட்டுவதுமாக பள்ளிவாயலின் அமைதி அப்படியே குலைந்து விடுகிறது.
மாத்திரமன்றி கடந்த முறை பள்ளிவாயல் மேல் மாடியில் உணவு வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டதால், அந்தப் பகுதி மிகவும் அசுத்தமடைந்ததை குறிப்பிட்டாக வேண்டும்.
இம்முறை மேல் மாடியில் பெண்களுக்கான தொழுகை இடம்பெறுவதால், பிரதான நுழைவாயில் பகுதியில் உள்ள சைக்கிள் தரிப்பிடம் மற்றும் வெறுமையான வாசல் பகுதியில் ஆண்கள் சாப்பிடுவதற்கான ஏற்பாடுகளும் மேலும் பெண்களுக்கு கியாமுல் லைல் முடிவில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
எனினும் கடந்த செவ்வாய்க்கிழமை போன்று மழை பெய்தால், உணவு விநியோகத்தை பள்ளியின் கீழ்த்தளத்தில் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் வழமையாக அதிக தொழுகைகள் இடம்பெறும் கீழ்த்தளம் முற்றாக அசுத்தமடையலாம்.
அத்துடன் பள்ளி வளவுக்குள் இரவு நேரத்தில் அதிக எண்ணிக்கையான வாகனங்கள் கட்டணம் செலுத்தப்பட்டு தரித்து நிற்பது வழமையாகும். கடந்த வருடம் பல வாகனங்கள் 27ம் இரவு பள்ளிக்கு வந்த சிறுவர்களால் கீறப்பட்டும் சிறிய பாகங்கள் சேதப்படுத்தப்பட்டும் பாதிப்புகளுக்கு உள்ளனதும் அவதானிக்கப்பட்டது.
கடந்த வருடத்துக்கு முந்திய வருடம் வந்திருந்தவர்களுக்கு உணவு போதாமல் போய் மீரா ஜும்ஆ பள்ளிவாயலின் (காத்தான்குடி 01) உதவி கோரப்பட்டதும், அவர்கள் மக்களை அங்கு அனுப்புமாறு கோரி நூற்றுக்கணக்கானோருக்கு உணவு வழங்கியதும் நடந்தது. பள்ளியில் உணவு வழங்குவதாக அறிவிக்கும் போது ஏற்படும் எதிர்பாராத அதிகளவு விருந்தினர்களை சமாளிப்பதில் இவ்வாறான அசௌகரியங்களும் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
குறித்த விடயத்தில் பள்ளிவாயல் நிர்வாக சபை உறுதியான முடிவொன்றை எடுக்கத் தவறியதும் அதற்கு அதனுள் இருக்கும் அரசியல் சார்பு மற்றும் கொள்கை சார் குழு நிலைகள் காரணமாக அமைந்ததும் கவனிக்கப்பட வேண்டியன. மூன்றாவது வருடமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்படும் போதும், இது தொடர்பில் தெளிவான முடிவொன்று எட்டப்படாமல் இருப்பதை நம்பிக்கையாளர் சபை கவனித்து இது போன்ற விடயங்கள் தொடர்பில் முன்னதாகவே முடிவுகளை எடுப்பது சிறந்தது. இல்லாவிட்டால் தொடர்ச்சியாக இவ்வாறான பிரச்சினைகளை சந்திக்க வேண்டி ஏற்படும்.
அத்துடன் அஸ்பர் தனது தனிப்பட்ட வேலைத்திட்டங்களுக்காக பள்ளிவாயலைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் இவ்வாறான வேலைகளுக்கு சரியான பற்றுச்சீட்டு – கணக்கறிக்கை போன்றவற்றைப் பகிரங்கப்படுத்தி வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.
ஆட்சியதிகாரம், நிர்வாகப் பொறுப்புகள், பதவி பட்டங்கள் என்பன அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட அமானிதங்கள், ஆதலால் அவற்றை உரிய முறையில் நிறைவேற்றுவது அவசியமாகின்றது. அவற்றைத் துஷ்பிரயோகம் செய்வது இழிவையே கொண்டுவரும். நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதரே! என்னை நீங்கள் பதவிக்கு நியமிக்க மாட்டீர்களா? என்று நான் கேட்ட போது அவர்கள் தன் கையால் என் தோளைத் தட்டி விட்டு ‘அபூதர்ரே! நீ பலவீனமானவன். ஆனால் பதவி (அதிகாரம்) என்பதோ அமானிதமாக இருக்கிறது. யார் அப்பதவிக்கு வந்து பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றுகிறாரோ அவர் தவிர ஏனையோருக்கு அது இழிவையும் வருத்தத்தையுமே கொடுக்கும்’ எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆபூதர் (ரலி), நூல்: முஸ்லிம் 1825)
இங்கே மேலும் நோக்கவேண்டியவிடயம் யாதெனில் மெத்தைப்பள்ளியை அண்டிய பகுதியில் ஒருநேர உணவுக்கு கஷ்டப்படுபவர்கள் மிகவும் குறைவு. எனவே இந்த சஹர் உணவு வழங்கும் நிகழ்வு தெளிவான வீண்விரயமே அன்றி வேறுதுவுமில்லை. வீண்விரையம் செய்வோரை மிகக்கடுமையாக சாடுகிறது இஸ்லாம்.
வீண் விரயம் பற்றி தன் திருமறையில் இறைவனின் எச்சரிக்கை யாதெனில்…
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காக தமது செல்வத்தை (வீணாக) செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன் (அல்குர்ஆன் 4:36)
வீண் விரயம் செய்வோரை இறைவன் நேசிக்க மாட்டான்.(அல்குர்ஆன் 6:141)
உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்7:31)
மேலும், இவ்வாறன புதுமையான செயற்பாடுகள் காலப்போக்கில் சடங்குகளாக மாறிவிடும். இந்த சடங்குகள் மக்களை வழிகேட்டுக்கு இட்டுச்செல்கின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அறிவிப்பவர்: அலி (ரலி) – நூல்: அபூதாவூது, நஸயீ.)
இன்னும் நேரம் இருக்கிறது. பள்ளிவாயல் நிர்வாகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சங்கடங்கள் ஆகியவற்றை தடுக்கவும் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளைத் தடுக்கவும் இந்த உணவு வழங்கும் நிகழ்வை வேறொரு இடத்துக்கு மாற்றி ஏற்பாடு செய்வது மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமையும்.
என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.









Abu Aayisha said
தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டும் காத்தான்குடி இன்போவின் இந்த வழிமுறையை மிகவும் வரவேற்கின்றேன்.
ABC Group90 said
எப்ப பாரத்தாலும் எமது சமூகம் சோறு, சாப்பாடு…என்றே போய்க்கொன்டிருப்பது வேடிக்கையானது. புனித ரமழானில் அல்லாஹ்வுக்கு சுஜூது செய்து அதிகமாக பிழைபொறுப்பு தேLவேண்டிய சங்கையான மாதத்தில் இப்படியொரு ஏற்பாடு எதற்கு என்று புரியவில்லை. வறுமையால் உயிரைவிடும் அளவுக்கு நோன்பு நோற்கும் எத்தனையோ ஏழைகள் எங்கள் ஊரில் இன்றும் வாழந்து வருகின்றனர். இன்னும் ஏழைச் சிறுவர்களும் விதவைகளும் அநாதைகளும் ஊரில் நிறைந்து காணப்படும் இவ் இக்கட்டான நிலைமையில் இப்படியொரு சாப்பாடு எதற்கு?
பேருக்கும் புகழுக்கும் மூக்கை நுளைக்கும் அரசியல்வாதிகளுக்கு ஊரில் செய்யவேண்டிய மேற்படி எத்தனையோ சேவைகள் இருக்கின்றன. இந்தச் சாப்பாடுதான் இவர்களுக்கு சேவையாகப் போனதோ? இறைவா எங்கள் அனைவருக்கும் நேர்வழிகாட்டு.
துணிச்சலுடன் உண்மையை அறியத்தந்த ‘இன்போ’விற்கு பாராட்டுக்கள்!
hasan said
masha allah
Weldon info keep it up……………….
hakeem said
if you have political support any thing can do…?
manithan said
Hatheesum Quranum namathu ……………………………… vilanguma?
HALEEM said
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்
மனிதர்களுக்கு உணவு வழங்குவது இஸ்லாத்தின் பார்வையில் மிகவும் நன்மை அளிக்கக்கூடியதாக காணப்படுகின்றது
அதிலும் அன்றாட உணவுக்கு கஷ்டப்படும் ஏழைகளுக்கு இந்த நோன்பு காலத்தில் ஒரு சஹர் உணவை
வழங்குவது மிகவும் பாரிய நன்மையைத்தரும் காரியமாக காணப்படுகின்றது .எனவே மேற்படி நற்பணியில்
ஈடுபடும் சகோதரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நமது பிரதேசத்தில் காணப்படும் ஏழைகளை அதிகமாகக்கொண்ட
பள்ளிவாயல்களைத் தெரிவு செய்து அங்கு மேற்படி நட்பணியினை மேட்கொள்வதால் இதனை ஏற்பாடு
செய்பவர்களுக்கு மிகவும் அதிகமான நன்மைகள் கிடைப்பது மட்டுமின்றி நமது ஏனைய முஸ்லிம் பிரதேசங்களுக்கும்
இது ஒரு முன்மாதிரியான விடயமாக நிச்சயம் அமையும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும் .
mohamed said
t is very nagging prob v facing for long years due to dominating one family’s members irritating and arrogant behavior, these days they have been supported by our chairmen,
any how these behaviors routinely presented due to the political influential support each time by different big shots
IMANA_KKY said
I too agree with this. Weldone info.
இறையன்பன், said
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று முன்னோர் கூறியதை மனதில் வைத்துத்தான், இன்றைய அரசியல்வாதிகள் இன்னும் மக்களை ஏழைகளாகவே வைத்து சிரிப்பைக் காண முயற்சி செய்கின்றார்களோ தெரியவில்லை. இன்னும் எவ்வளவு காலம் தான் இப்படி சாப்பாடு போட்டு மக்களை பிச்சைக்காரர்களாகவே வைத்திருப்பார்களோ தெரியவில்லை. மக்களுக்கு உதவி செய்வதற்கு எவ்வளோவோ வழிகள் இருந்தாலும் இந்த அரசியல்வாதிகளுக்கு அவை தெரியவே இல்லை என்பதுதான் வேதனையான விடயம்..
இறையன்பன், Swiss
MUHAMMAD IRSHAD JAMALY said
முன்னேறிச் சென்றவர்கள்…. முன்னேறிச் சென்றுவிட்டனர் …..
தர்மம்….பசித்தோருக்கு பசிதீர்பதும்…..வரியாரை வாழவைக்கவுமே….
இனிய இஸ்லாம் இயம்பிற்று…..ஆனால் … முகஸ்துதி களைந்து….மனத்தில் இக்லாஸ் எனும் தூய தனம் முரயாகவேனும்…..
அறபாத் said
சரியாக் கேட்டாங்க கேள்வி.
அஷ்பர் அவர்களே
நீங்க இதுல உள்ள விசயங்களக் கொஞ்சம் கவனிக்கோணும். தெளிவாவும் விளக்கமாவும் எழுதிருக்காக.
நீங்க மெத்தப்பள்ளி விடயத்துலயும் உங்குட சொந்த செல்வாக்க வளக்குற விஸயத்துல பள்ளியப் பாவிக்கிறதுலயும் ஈடுபடுறது இது முதல் தடவ இல்ல.
ஒரு பிரச்சினயும் இல்ல உங்களுக்கு சாப்பாடு குடுக்கலி பொது கிரௌண்டுலயோ கல்ச்சரல் ஹோலுலயோ ஏற்பாடு செஞ்சி நல்ல வடிவாக் குடுக்கலாம். ஆக்களக் கட்டுப்படுத்துறத்துல பிரச்சின எண்டா நேரத்தோடயே காட் ஒண்டு அடிச்சி குறிப்பிட்டளவு ஆக்களுக்குக் குடுத்து அவகள உள்ள அனுமதிக்கலாம்.
இத விடயும் நன்மய நோக்கமாக் கொண்டு செய்யுறயெண்டா ஒரு நூறோ இருநூறோ ஏழக் குடும்பங்கள செலக்ட் பண்ணி மொத்த ஆக்களக் கணக்கெடுத்து ஒரு இடத்த சமச்சி அவகள வந்து எடுத்துப் பொகச் சொல்லலாம். எத்துனயோ வழி இரிக்கி.
ரமழாண்ட கடசிப் பத்துல அதுவும் மக்கள் நன்மயயும் நரக விடுதலயயும் வேண்டி தொழுது பிரார்த்திக்கிற அல்லாட வீட்டுல கொண்டு போய் சாப்பாட்டப் போட்டு அங்க ஒரு சந்த மாதிரி நிலய உண்டாக்கி. அமலயும் குழப்பி சாப்பாட்டையும் குழப்பி ஏன் பலபேர சிரமப்படுத்தணும்?
அதோட என்ன வேல செஞ்சாலும் கணக்கு வழக்கு முக்கியம். உங்குட பாட்டுக்கு அங்கயும் இஞ்சயும் பொருட்களக் கலக்ட் பண்ணி எந்தக் கணக்குமில்லாம வேல செஞ்சா பாக்குற யாருக்கும் சந்தேகம் வரும்.
வழக்கமான அரசியல்வாதி வழிமுறையில என்னத் தாக்கி எழுதிட்டான் என்ன செய்யுறன் பார் எண்டு கிளம்பாம கொஞ்ச நேரம் உக்காந்து நடந்த தவறுகள யோசிங்க, அட் லீஸ்ட் நடக்கப்போற தவறயாவது நிப்பாட்டலாம் இல்லயா?
தைரியமா இந்த விடயத்த சுட்டிக்காட்டின இன்போவுக்கு என்ட நன்றிகள்
Ansar-qa said
“நகரசபைத் தவிசாளர் என்ற அதிகாரம் உள்ளூராட்சி சம்பந்தமானதேயன்றி பள்ளிவாயல்கள் போன்ற பொது நிறுவனங்கள் மீது பிரயோகிப்பதற்கல்ல என்பதை அஸ்பர் புரிந்து கொள்ள வேண்டும்”
well done Info
mohamed said
யா அல்லாஹ் ஹழாலாலான உணவைக் கொண்டு மிகுதி நோன்பை பிடிப்பதற்கு அருள்புரிவாயாக உன்னைத்தவிர உணவளிக்கக்கூடியவன் யாருமில்லை.
hony said
much much needed DHUA
sabry said
நன்றி இன்போ,
சம்மந்தப்பட்டவர்களுக்கு மாத்திரமல்ல இன்போவின் நடுநிலைமை தொடர்பாக அடிக்கடி விமர்சனக் குரல் எழுப்பும் சகோதரர்களுக்கும் இக்கட்டுரை பல விடயங்களைக் கூறுவதாயுள்ளது.
saji said
ippavavath unkaluku vilankiyath
Mohammed Hiraz said
பொதுவாக ரமழான் இருபத்தி ஏழாம் இரவில் காத்தான்குடியில் மாத்திரம் அல்ல முழு உலகிழுமே அதிகமான மஸ்ஜிதுகளில் மக்கள் இரவை ஹயாத்தாக்கி ஸஹர் நேரம் வரை அமல்களில் ஈடுபடுவது வழமையாகும் ! இலங்கையின் பல நகரங்களில் உள்ள மஸ்ஜிதுகளில் முழு குர்ஃஆனும் ஒரே நாளில் ஆரம்பம் முதல் முடிவு வரை தொழுகையில் ஓதப்பாடு தொழுவிக்கபடும் நிகழ்வும் நடைபெறகூடிய நாளாகும்.
எனவே இந்த இரவில் அதட்கு பின்னர் வீடுகள் சென்று உணவு உண்பதில் உள்ள சிக்கள்களும் சிறமங்களும் தூர இடங்களில் இருந்து வருகைதரும் மக்களை கருத்திட்கொண்டே நிர்வாகத்தினராலும் சில தனவந்தர்களினாலும் ஏடுபாடு செய்ய படுவதை உள் நாட்டின் பல பிரதேச மஸ்ஜிதுகளிளில் கான முடிகிறது அதே போன்று தோஹா கட்டாரில் சப்ஜி மார்கட்கு அருகாமையில் உள்ள மஸ்ஜிதிலும்,மேலும் கியாமுல் லைல் தொழுகை இடம் பெறகூடிய மஸ்ஜித் அபூபக்கர் ஸித்தீக்,மஸ்ஜித் உமர் இப்னு கத்தாப், மஸ்ஜித் அபூ ஹுரைரா, புகாரி மஸ்ஜித், போன்ற மஸ்ஜித்துகளின் முன்னே செல்வந்தர்கள் அந்த அதிகாலை வேளையில் உணவு பொதிகள் அடங்கிய வாகனங்களுடன் வந்து தொழுகை முடிந்து வருவோறுக்கு உணவு பொட்டலங்களை வழங்குவதை கான முடியும்! இது போன்று அமீரகத்திலும் நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது எனவே மஸ்ஜிதுகளை செழிப்பாக்குவதும் அமல்களில் ஈடுபடுவோறுக்கு தூய நீரை வழங்கி உதவி செய்வதும், தாகம் தீர்க்க வழி செய்வதும், பசியார வைபதும் , மஸ்ஜிதை அகில்,போன்ற புகைகள் மணங்களை கொண்டு மணக்க செய்வதும் நன்மையான விடயங்களே!!! ஏழைகளுக்குத்தான் உணவழிக்க வேண்டும் அதனாலேயே மஸ்ஜிதில் உணவு வழங்குவதென்றால் அதிக மக்களை நாம் கான்கிறோம் எனவே நம்மை போன்றே பிறறும் இருப்பார்கள் என்பதை விட உணவு வழங்கப்படும் இடங்கள் நிறைகிற்தென்றால் அவ்வளவு தூரம் எம்மிடையே ஏழைகள் நிறைந்துள்ளார்கள் என்பதை அன்றி நாம் வேறேதாகவும் எத்தகைய கோணத்திழும் இழிவாக கருதுவதும் ஏட்புடையதல்ல! எனவே மக்களின் சிரமத்தை போக்க முழு நாளும் அமலில் கழிக்க மக்கள் அந்நாளை ஒதுக்க வேண்டும் என்பதட்காக ஒருத்தர் உணவு வழங்க முன்வருவது பாராட்ட தக்கது ஆனால் அதனை தான் மட்டும் செய்ய வேண்டும் எனவும் தன் அதிகாரத்தை பாவித்து திணிக்க முயல்வதும் தகாதவையே!!! மேலும் ஒருத்தர் தனக்கு தெறிந்த அன்பர்கள் நண்பர்களிடம் வசூலிப்பதை இதில் சம்பந்த படாத யாறும் கணக்கு கேட்பதகு எத்தகைய ஒரு முகாந்திரமும் இல்லை! பொதுவாக நாங்கள் கூட ஒரு திருமணம், போன்ற அயல் வீட்டு நிகழ்வுகளுக்கு முன் நின்று தெறிந்தோறிடமும் வசூல் செய்து செலவழிப்பதும் செழவுக்கு கை கொடுப்பதும் வழக்கமே இதட்காக நாம் யாரிடம் பற்று சீட்டு கொடுக்கின்றோம்? யார் எம்மிடம் கணக்கு வழக்கு கேட்கின்றனர்? இருந்தாலும் இதை எல்லாம் விட மிக செலவு செய்யவும் கை கொடுத்து உதவவும் மிக தகுதியான இடம் இந்த உளகத்தில் பல உள்ளன அதில் சோமாலியா முதலிடம் வகிக்கின்றது!!! பல ஊர்களுக்கும்,பல அனர்தங்களுக்கும் கை கொடுத்து உதவும் எமதூர் சோமாலியா விடயத்தில் அக்கரை அற்று இருப்பது ஏனோ தெறியாது? பாகிஸ்த்தான் வெள்ள அனர்த்தத்திட்கு கூட இலங்கை முஸ்லிம்கள் உதவினர் சோமாலியாவுக்கு எப்போது உதவ போகிறோம்???
mmsa said
தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டும் காத்தான்குடி இன்போவின் இந்த வழிமுறையை மிகவும் வரவேற்கின்றேன்.
abdul wahab. said
Info its a good and safe U turn for you, keep it up.
Kattankudi Web Community (KWC) said
Assalamu alaikum,
Dear Brother Abdul Wahab,
We are on the straight path. You feel this as a ‘U’ turn as you are reading Info with a lense of suspicion and party support.
As a whole, we have no hidden agenda to support or suppress any political party, politician or any organisation.
You need to assess neutrally considering site as a whole – not post by post basis. If you have time, please browse the site from the beginning. You may get a clear idea about how it moves on.
Also it would be better to keep in mind that there are “unknown unknowns” – thinks we do not know that we do not know.
We hold certain media terrorism and masked media activities of the so called political movement considering long term reconciliation and conflict management.
This response is written based on your earlier comment declaring info is partial and also to make aware the readers on the same behaviour pattern.
Your valuable comments, views, advises and contributions toward our media is always welcome.
Wassalam
WebAdmin
Subry MMM said
ஹிராஸ் ,
வெளிநாடுகளில் சாப்பாடு கொடுப்போரை பற்றி சொல்லி இருக்கீங்க அவர்களுடைய நோக்கம் நீர் சொன்னதுபோல் பசித்தவர்களுக்கு உணவளிப்பதும் நன்மையை நாடியே அன்றி வேறு ஒன்றும் இல்லை ஆனால் இங்க உங்கட தலைவர் நோக்கம் அதுவல்ல , அப்படித்தான் கொடுக்கவேண்டும் என்றால் பள்ளி களைந்து போகும் போது வெளியில் பார்சல் வைத்து கொடுக்கலாம் அல்லவா நீங்க எப்பதான் பிழைக்கு வக்காலத்து வாங்குவதை நிறுத்து வீர் களோ தெரியாது ( நீங்க அவர் நகரசபை தலைவராக ஏற்று கொள்ளவில்லை என்பதை இன்போ வில் சொன்னது யாபகம் இருக்கட்டும் )இன்போ விற்கு எனது பாராட்டுக்கள்
IMANA_KKY said
Subry! Thanks a ton for your nice comments.
fawas said
தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டும் காத்தான்குடி இன்போவின் இந்த வழிமுறையை மிகவும் வரவேற்கின்றேன்.
thanks info
nadu nilai wahikkum infowukku “allah arull furiwanaha”
Rm.fowsan said
தேங்ஸ் இன்போ. ஆனா பள்ளி நிர்வாகமும் இந்த விடயத்தில் முடிவு எடுக்க திரானி அற்றவர்கள்.
Hidden KKY said
கண்ணால் கண்டவன் என்ற ரீதியில் சில விடயங்களை பகிர்ந்துகொள்ளும் கடமை எனக்கும் உண்டு. இந்த உணவு வழங்கும் வைபவத்தை பெயரளவில் ஏதோ ஏற்பாடு செய்பவர் அஸ்பராக இருந்த போதும்; அதை நடத்தி முடிப்பது அவரோட ……………….. கூட்டந்தான்.
காலைல ஏழு மணிக்கே வேளைகள தொடங்கிடுவாங்க. நிக்கிற அந்த அம்பது அறுபது பேர் கொண்ட கூட்டத்தில ஒரு சிலரை தவிர வேற எவருக்கும்; லுஹர், அசர், மக்ரிப், இஷா எந்த தொழுகையுமில்ல. நோன்பு துறந்ததிலிருந்து சமைக்கிற புகைய விட பள்ளிக்குள்ள …………. புகையே அதிகமா இருக்கும். ஏன். அல்லா மீது சத்தியமிட்டு சொல்றன். சமைக்கிற இடத்தில (பள்ளிக்குள்ள) நிண்டு அ……………… …………………….. நானே என் கண்ணால பார்த்திருக்கன்.
உங்குளுக்கு ஒரு விஷயம் தெரியா. சமைக்கிற அந்த கூட்டத்தார்ற குடும்பம் சாப்பிட்ட மிச்சந்தான் பள்ளிக்கு வர்ர மக்களுக்கு. ஆமாங்க. சமைச்சி முடிஞ்ச உடனேயே பேக்கு பேக்கா அவங்கட ஊடுகளுக்கு சாப்பாடு போயிடும். இத எந்த கணக்கில சேக்கிரயாம்?
சொல்லப்போனா இந்த விடயம் …………………………………………… கணக்குதான். நாமெல்லாம் பீச்சுக்கு பிக்னிக் போற மாதிரி, இவங்க ……………………….
பள்ளி நம்பிக்கையாளர்கள் பாவம். மெல்லவும் ஏலாத துப்பவும் ஏலாத ரெண்டுங்கெட்ட நிலை அவங்களுக்கு. இ………………. சண்டைக்கு போறது “………………………………………….என்டு இ………………….. என்னன்னாலும் செய்யட்டும் எண்டும் உட்டுட்டு ஒதின்கிர்றாங்க.
சொல்லப்போனா இந்த …………………………….. மெத்த பள்ளி; உம்மாட ஊடு மாதிரி. இப்ப கூட வந்தா பாக்கலாம். கியாமுல்லைல் தொழுகைக்கு புறகு குடுக்கிற டீ ய ட்ரயல் பாக்கிற இவகதான். எட்டு ரகாத்துல ஆறு ரகாத்து முடிய முன்பே டீ க்கு செம்பில் பாத்திருவாங்க. …………………….
இந்த மெத்த பள்ளில நடக்கிற அனைத்து அசம்பாவிதங்களுக்கும் நேரடியோ மறைமுகமோ, காரணம் ……………….. தான்.
வெள்ள நிவாரணத்தில மோசடி என்டு அல்லும் பகலும் கஷ்ட்டப்பட்ட பள்ளி நிர்வாகிகள் மேல அபாண்டம் சுமத்தினது இவங்க தான். கஞ்சி குடுக்ககுள்ள வந்து சண்டித்தனம் காட்டி, நிர்வாகி ஒருவருக்கு அடிக்க போனது இவங்க தான். நிர்வாக சபை தெரிவுல சாரண மடிச்சு கட்டி கொண்டு நிண்டு ………………… இவங்க தான்.
இந்த இருபத்தேழாம் கிழம போனா அவகட செடுள் படி எப்ப தெரியுமா வருவாக. அடுத்த நம்பிக்கையாளர் சபை தெரிவுக்கு. அப்ப வந்து அதே சண்டித்தனத்தையும், ……………………. காட்டி அ…………………. அவர்ர அடிவருடிகளையும் தெரிவுசெயஞ்சிட்டு போவாங்க.
இவங்களுக்கு எதிரா எதுவித நடவடிக்கையும் யாரும் எடுக்க ஏலா. ஏன் தெரியுமா? கூடவே பெரிய சண்டியன் ………………. இருக்காரே. அந்த தைரியந்தான் இவங்கள இந்தளவு ஆட வைக்குது.
இந்த கூட்டத்தாருக்கும், த……………………… நான் கூறிக்கொள்ள விரும்புறன்.
“கண்ணா…. நீ சத்தம் போட்டா பள்ளிக்குள்ள மட்டுந்தான் கேக்கும். அப்ப கூட ரோட்டால போறவன் உனக்கு தான் ஏசுவான். ஏன் எண்டா சமூகத்தில உனக்குள்ள பேரு அப்பிடி. —–.
ஆனா நாங்க இறங்கினா? பாத்ததில்ல………. உலகத்துல சந்து, பொந்து, மூல, முடுக்கு எல்லா இடத்தில இருக்கிரவனும் உனக்கு எதிரா குரல் கொடுப்பான்.
.
Wait and watch…………”
Mansoor said
“மேலும் ஒருத்தர் தனக்கு தெறிந்த அன்பர்கள் நண்பர்களிடம் வசூலிப்பதை இதில் சம்பந்த படாத யாறும் கணக்கு கேட்பதகு எத்தகைய ஒரு முகாந்திரமும் இல்லை! பொதுவாக நாங்கள் கூட ஒரு திருமணம், போன்ற அயல் வீட்டு நிகழ்வுகளுக்கு முன் நின்று தெறிந்தோறிடமும் வசூல் செய்து செலவழிப்பதும் செழவுக்கு கை கொடுப்பதும் வழக்கமே இதட்காக நாம் யாரிடம் பற்று சீட்டு கொடுக்கின்றோம்? யார் எம்மிடம் கணக்கு வழக்கு கேட்கின்றனர்?”
எதையும் அவர் அவர் வீட்டிலேயே வைத்துக்கொண்டால் யாரும் எதுவும் கேட்கப் போரதில்லையே………….
“அதற்கு நகரசபைக் கடிதத் தலைப்பு பாவிக்கப்பட்டுள்ளது.”
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு அமானிதத்தை தனிபட்டதிற்கு பயன்படுத்தினால் மக்கள் கேட்பார்கள் தானே………………..
mohamed said
தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டும் காத்தான்குடி இன்போவின் இந்த வழிமுறையை மிகவும் வரவேற்கின்றேன்.
riffka said
Thank u very much to Kattankudi info