காத்தான்குடியில் தொடரும் பதற்ற நிலை (படம் இணைப்பு)
Posted by Kattankudi Web Community (KWC) on 20/08/2011
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனைக் கிராமத்தில் நேற்றிரவு (19.8.2011) ஏற்பட்ட மர்ம மனிதன் பதற்றத்தினால் பொலிசாருக்கும் பொதுமக்கள் சிலருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பாலமுனை மற்றும் கர்பலா காத்தான்குடி ஆகிய பிரதேசங்களில் அமைதியின்மை ஏற்பட்டது.
காத்தான்குடியை அண்மித்த ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனை கிராமத்தில் மர்ம மனிதர்கள் இருவரின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை காணப்பட்டது.இதையடுத்து நேற்றிரவு 11 மணியளவில் பாமுனை மற்றும் கர்பலா பிரதேசங்களில் பெலாலிசார் குவிக்கப்பட்டனர்.
பொலிசாருக்கும் பொதுமக்கள் சிலருக்கு மிடையில் முரண்பாடு அதிகரிக்கவே பொலிசாரை நோக்கி பொதுமக்கள் சிலர் கற்களை வீசியுள்ளனர்.இதன் பின்னர் பதற்ற நிலை அதிகரித்த போது அங்கு வரவழைக்கப்பட்ட இரானுவத்தினர் சப்த வேட்டுக்களை தீர்த்து பொதுமக்களை கலைத்துள்ளனர்.
இதன் போது காத்தான்குடி கடற்கரை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி மற்றும்வேன் அதே போன்று புதிய காத்தான்குடி கர்பலாவீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் என்பவற்றின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் சில ஹோட்டல் கடைகளின் முன்பகுதி கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளன.
இதே போன்று சில வீடுகளிற்குள் இருந்த மின் குமிழ்கள் வீட்டின் கதவுகளும் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தின் போது அங்கு விரைந்த காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஷ்பர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் ஆகியோர் இரானுவ பொலிஸ் உயரதிகாரிகளுடன் பேசி நிலைமையை வழமைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர், இன்று அதிகாலையில் காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள குட்வின் சந்தியில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டன. இதையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி நகர சபை தலைவர் அஷ்பர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள் சிலர் எரிந்து கொண்டிருந்த டயர்களை அகற்றி வாகனப்போக்குவரத்தை சீர் செய்தனர்.
தற்போது மேற்படி பிரதேசங்களில் பதற்ற நிலை காணப்படுகின்றன.
This slideshow requires JavaScript.








Badurzaman .uk said
thanks Abu Rapthaan.
aashamahmud said
thanks Abu Rapthaan bro r…..
Hilmy said
What’s going the r
Hilmy said
What’s going the r. pls update news evrey seconts. we r closely watch KKY info.
Mahathevan said
Very sad & shame to hear these type of news continuously from our area.
Thanks to kattankudi.info.
Mahathevan V.K
Doha-qatar
Mohamed Saji said
oooh …., never expected causes are happening over there. info please keep update………….
Mazaa said
யா அல்லாஹ்.. சதிகாரர்களின் – சதிவலையிலிருந்து எமது சமூகத்தைப் பாதுகாப்பாயாக.. உன்னையன்றி உதவி செய்யக்கூடியவர் எவருமில்லை றஹ்மானே..
நாங்கள் நோன்பாளிகளாக இருக்கின்றோம் – நோன்பாளிகளின் பிரார்த்தனை அங்கீகரிக்க நீயே போதுமானவனாக இருக்கின்றாய்.. ஆமீன்.
Abu Nasif said
கிறீஸ் மனிதன் என்ற பெயரில் சிறுமான்மை மக்களின் அமைதியை குழப்பியும் ஒட்டுமொத்த முஸ்லிம், தமிழ் பெண்களின் கற்பை பொலிஸ் தலைமைகள் கொச்சைப்படுத்தியதுடன் தற்போது காத்தான்குடியில் உள்ள முஸ்லிம்களின் சொத்துக்களை அழித்து பொருளாதார ரீதியான இழப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளாகவே இந்த சம்பவங்களை பார்க்கத் தோன்றுகிறது. ‘ ஒவ்வொரு விசையும் அதன் எதிர் விசையை கொண்டுள்ளது’ இது மிக விரைவில் தொழில்படலாம் அல்லது தாமதமாகலாம். அவசரமாக அனைத்து பள்ளிவாசல்களிலும், ஒவ்வொரு தனி நபரும் இந்த புனித றமழான் இறுதிப் பத்தில் அநியாயக்கார ஆட்சிக்கெதிராகவும் படைகளுககெதிராகவும் அவர்களை தடம் புரட்டிவிடவும் பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும்.
muslim said
பொலிஸாரும் இராணுவத்தினரும் சேர்ந்து எமது கடைகள், வாகனங்கள் வீடுகளை சேதப்படுத்தினர். முஸ்லிம்களும் தமிழர்களும் தமக்கு எதிராக என்ன அநியாயம் நடந்தாலும் வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்பதையே இந்த நடவடிக்கை காட்டுகிறது.
Mohamed said
சகோதரர்களே..!
நோற்றிரவு நூராணியா ஜூம்ஆப் பள்ளிவாயல் முன்பாக அப்பாவி பொது மக்கள் மீதும் அவர்களுடைய உடமைகள் மீதும் இராணுவத்தினர் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடர்பில் சில தகவல்களை இங்கு குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.
நேற்று பாலமுனையில் தோன்றிய மர்ம மனிதன் பீதியால் அலியார் சந்தியில் சில இளைஞர்களால் டயர்கள் எரியூட்டப்பட்டபோது அங்கு கவச வாகனத்தில் நின்று கொண்டிருந்த இராணுவத்தினர் இளைஞர்களை கலைந்து செல்லுமாறு கூறினர் அதற்கு செவிசாய்க்க மறுத்த இளைஞர்கள் மீது தாக்குதலை நடாத்த முட்பட்டனர் பின்னர் இராணுவத்தினரை தூசிவிட்டு அங்கிருந்த இளைஞர்கள் தப்பிச்சென்றனர்.
பின்னர் அவ்வழியாக நூராணியா பள்ளிவாயலை நோக்கி கவசவாகனத்துடன் நகர்ந்து வந்த இரணுவத்தினர் தொழுகையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிள்களில் வீடுதிரும்பிக்கொண்டிருந்த அப்பிரதேசத்தைச்சேர்ந்த அப்பாவி குடும்பஸ்த்தர் ஒருவரையும் அப்பாவி இளைஞர்கள் இருவரையும் வழிமறித்து அவர்கள்மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டபோது அவர்கள் அல்லாஹ அக்பர் என கத்திக்கொண்டு ஓடியபோது அவர்களுடையடைய இரு மோட்டார் சைக்கிள்களைளையும் அவ்விடத்திலேயே வைத்து இராணுவத்தினர் உடைத்து நொறுக்கி கவசத்தையும் அவைகள்மீது ஏற்றிக்கொண்டு அவ்வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற கார் ஒன்றின் நான்கு பக்க கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி அவ்வீதியில் அமைந்துள்ள வீடுகளின் கதவுகளையும் உடைத்தவிட்டுச் சென்றனர்.
பின்னர் நிலைமைகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்குவதற்கு ஸ்தலத்திற்கு விரைந்த மாண்புமிகு நகர முதல்வர் சகோ. அஸ்பர் அவர்களும், மாண்புமிகு மாகாணசபை உறுப்பினர் சகோ. பரீத் அவர்களும் உடைக்கப்பட்ட வாகனங்களை வீட்டினுள்ளே இழுத்துப்போட்டு நடந்த சம்பவங்களை மூடிமறைப்பதற்கு மக்களை பொறுப்பற்றமுறையில் கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்தனர்.
மீண்டும் பொலீசாரையும் வரவழைத்துக்கொண்டு நூறாணியா சதுக்கத்திற்கு விரைந்த இராணுவத்தினர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மீது தூசண வார்த்தைகளை பேசி, உடைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை டிராக்கடர் வண்டியில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.
நிலமை இவ்வாறிருக்க நகரமுதல்வரும் மாகாண உறுப்பினரும் நிலமைகளை வழமைக்கு கொண்டுவந்ததாக காத்தான்குடி இன்போ குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கின்றது.
IMANA_KKY said
“பின்னர் நிலைமைகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்குவதற்கு ஸ்தலத்திற்கு விரைந்த மாண்புமிகு நகர முதல்வர் சகோ. அஸ்பர் அவர்களும், மாண்புமிகு மாகாணசபை உறுப்பினர் சகோ. பரீத் அவர்களும் உடைக்கப்பட்ட வாகனங்களை வீட்டினுள்ளே இழுத்துப்போட்டு நடந்த சம்பவங்களை மூடிமறைப்பதற்கு மக்களை பொறுப்பற்றமுறையில் கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்தனர்.”
இதுவல்லவா பசுமை நகர அரசியல்வாதிகளின் வியத்தகு சேவை! நமது ஊரில் கானிப் பிரச்சினையும் இல்லை! கிறீஸ் மணிதன் பிரச்சினையும் இல்லை! யாஅல்லாஹ் நீதான் இந்த அரசியல் வியாபாரிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றுவாயாக!
Ashraf. SAM said
thz for information
Muslim Care said
நமது ஊரின் நிலைமைகளை உடனுக்குடன் அறிய தந்தமைக்கு காத்தான்குடி இன்போ விற்கு நன்றிகள் பலநூறு!! வேதனை இன்னவேன்றல், நாமெல்லாம் பாடுபட்டு வாக்களித்த நல்லாட்சி மன்னர்கள் இதுவரை அவர்களின் வெப் தளத்தில் ஒரு அறிக்கை கூட இல்லை! ( time is now: 1:52 pm)
IMANA_KKY said
அவங்கெல்லாம் இப்போ வெகேஷன்ல இருக்காங்க போல!
ANILAR said
நல்லாட்சிக் காரங்களுக்கு மாடறுக்கிற மடுவத்திலதான் அறிக்க விடுவாங்க அவங்க விடுகிற அறிக்கய விட சும்மா இருக்கிறது மேல்
Mohammed Hiraz said
அவர்கள் அறிக்கை விட்டால் நிலமை சீராகிடுமா? இந்த விடயம் உலக நாடுகளின் தூதரகங்களுக்கு காத்திரமாக எட்ட வைபதும் உலக மனித உரிமை கழகங்களுக்கு இந்த அநியாயங்களை ஆதாரங்களுடன் சமர்பிப்பதும் அரச படைமேல் நாட்டில் உள்ள சிறு பான்மை மக்களுக்கு எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை என்பதை முழு உலகத்திட்கும் ஐகிய நாடுகள் சபையின் செயலாளருக்கும் பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளுக்கும் முழு சிறுபான்மை மக்களின் கை எழுத்து முறைபாடுகளை சமர்பிக்கும் தேவையான தேவையான ஏனைய சிறுபான்மை கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்ற துணிவதே அவர்களுக்கு முன் உள்ள சவால்
naw said
please update current situation
imaan said
yaru arikka vitta enna
muthalle inthe piracchinaye eppadi sari panre endu oru mudivu edunge
Shukry said
Don’t say Grease MAN Please tel the truth P…..CE MAN……………..