தொடரும் மர்ம மனிதன் தொல்லை – மட்டக்களப்பு ஊரணியில் பெண் தாக்கப்பட்டார் (படம் இணைப்பு)
Posted by Kattankudi Web Community (KWC) on 17/08/2011
மட்டக்களப்பு ஊறணியிலுள்ள பிள்ளையாரடியில் பெண்ணொருவர் இன்று (17.8.2011) பிற்பகள் மர்ம மனிதர் ஒருவரினால் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து பிள்ளையாரடி மற்றும் ஊறணி பகுதியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு இப்பகுதியின் பிரதான வீதி உட்பட உள்ளக வீதிகளில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டன.
இப்பெண் மர்ம மனிதரினால் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து இந்தப் பகுதயில் திரண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பிள்ளையாரடி பொலிஸ் நிலையத்தை நோக்கி ஆர்ப்பாட்டமாக செல்ல முற்பட்ட போது அங்கு பதற்ற நிலை அதிகரித்தது.
இதையடுத்து அங்கு விரைந்த பொலிசார் கண்ணீர்ப்புகை பிரயோகம், மற்றும் வானத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் செய்து ஆர்பப்பாட்டக்காரர்களை களைத்தனர்.
இதன் போது மட்டக்களப்பு பொலனறுவை பிரதான வீதியில் உள்ள பிள்ளையாரடி ஊறணி பிரதான வீதியில் ஓரு மணித்தியாலயத்திற்கு மேல் வாகனங்கள் தரித்து நின்றன.
இதையடுத்து பொலிசார் மற்றும் இரானுவத்தினர் பாதையை சீர் செய்து நிலைமையை வழமைக்கு கொண்டு வந்தனர்.
இங்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா மற்றும் சி.யோகேஸ்பரன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது இன்று பிள்ளையாரடியில் பெண்ணொருவர் அவரது வீட்டில் உடு துணிகளை வெளியில் காய வைத்துக்கொண்டிருந்த போது மர்ம மனிதர் ஒருவர் வந்து அப்பெண்ணின் கை மற்றும் உடம்பின் சில பகுதிகளில் தாக்கி காயத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளான்.
காயமடைந்த இப்பெண் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரை மட்டக்களப்பு மாநகர சபை மேயர் மற்றும் அதன் உறுப்பினர் அருமைலிங்கம் உட்பட பல பிரமுகர்களும் சென்று பார்வையிட்டனர்.
This slideshow requires JavaScript.








fiham said
எப்போது முடிவுரும் இப்பிரட்சனை……
IMANA_KKY said
விஷேடமாக வருகை தந்துள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர! what you are going to tell us about the above news???
niyas said
மர்ம மனிதன் ஒன்றோ கிரிஸ் மனிதன் என்ற ஒன்றோ இல்லை இது வெல்லாம் கட்டுக் தையென்றால்
இதனை யார் செய்கிறார்கள். பல பெண்களுக்கு அசம்பாவதிங்கள் நடந்தது எல்லாம் பொய்யா? மக்கள் படித்து கொடுத்தவர்களுக்கு இதுவரை எந்த சட்ட நடிவடிக்கையும் எடுக்க பட வில்லை. மாறாக மக்களுக்கு எதிராகவே பொலிஸ் நடவடிக்கை ஈடுபட்டு பாரூக் ஹாஜியார் பாதிக்கப்பட்டது, பொத்துவலில் மவ்ஜின் சுடப்பட்டது இதற்கெல்லாம். என்னபதில்? கிண்ணியாவில் பள்ளியில் புகுந்து தொழுதிருந்த மக்களுக்கு அடித்தது இது வெல்லாம் யார்?
பொலிஸ் எதைத்தான் உண்மை என்று சொல்லி இருக்கிறது. இல்லை அரசாங்கம்தான் எதை உண்மை என்று சொல்லி இருக்கிறது. இல்லை எமது முஸ்லிம் …. அமைச்சர்கள்தான் எது நடந்தது என்று சொல்லிஏற்று கொண்டு அதற்கான தீர்வை சொல்லி இருக்கிறார்கள்.
இரவு பகலாக பொலிஸ் படையும் இராணுவமும் பாது காப்பாக இருந்தாலும் இந்த அட்டூலியங்கள் எப்படி நடக்கிறது? இவர்கள் வானத்திலிருந்தா வருகிறார்கள்.? மாறாக அனைத்து இடங்களிலும் பொலிசோடுதான் மக்கள் சந்தேககிக்கிறார்கள் என்றால் இது ஒன்று சாதரண விடயமல்ல. மாறாக அரசியல் இலாபம் கருதி ஏழை மக்களின் வீடுகளிலும் படிப்பறிவில்லாத மக்களின் வீடுகளிலும்தான் இந்தச் செயல் கூடுதலாக நடந்நதிருக்கிறது. இவையெல்லாம் அரசின் திட்டம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆயுதங்களோடு வந்த புலிகளையே உள்ளே நுளையாமல் பாதுத்த படைவீரர்கள் இந்த விடயத்தில் இப்படி இருப்பது என்பது ஆச்சரியமான வேடிக்கை.
எனவே இதன் பிண்ணியில் நிச்சயம் அரசியல் இலாபம் தேடும் எமது முஸ்லிம் தலைவர்கள் என்று கூறி வீட்டு வீடு வருகின்றவர்கள் விலை போய் விட்டார்கள்.
என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கும் மேலாக மட்டக்களப்பு பொலிஸ்மா அதிபர் முஸ்லிம் மக்களை மிரட்டி இருக்கிறார். எதோ முஸ்லிம்கள்தான் குற்றவளிகளாக காட்டி இருக்கிறார்.
எனவே இந்த பிண்ணியில் பல அரச தந்திரகள் இருப்பது தெளிவாகிறது. அதற்கு எமது முஸ்லிம் சமூகத்தின் அரசியில் இலாம் தேடுபவர்களும் இதை பார்த்து வேடிக்கை பார்க்கிறார்கள்.
அதற்கு மிக முக்கிய உதாரணம் அமைச்சர் பௌசியின் பேச்சு. ஒரு…. மாதிரியா அவர் பேசி இருக்கிறார்.
எனவே மக்களே இதை நீங்கள் ஒரு போதும் கட்டுக்கதையாக நம்பி ஏமறாதீர்கள் என்ற அரசின் வாத்தைகளை கேட்டு கவனயீனமாக இருந்து விடாதீர்கள். உங்களுக்’கு முடியுமான முற்பாதுப்பை தயார் படுத்திருங்கள். முடியுமானளவு கூட்டாக பெண்கள் இருங்கள் தனிமையில் இருப்பதை தவிருங்கள்.