சிறுநீரகம் பழுதடைந்த சகோதரருக்கு உதவுவோம்
Posted by Kattankudi Web Community (KWC) on 11/08/2011
கடந்த 04.07.2011 அன்று காங்கேயனேடையை சேர்ந்த உதுமாலெப்பை முகம்மது பஸ்லான் எனும் சகோதரருக்கு உதவுமாறு அவரது உறவினர்களின் வேண்டுகோளை நாம் பிரசுரித்திருந்தோம்.
இதனைத் தொடர்ந்தும் இன்னும் பல்வேறு ஊடகங்கள் மற்றும் வெ வ்வேறு வழிகளில் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்களை அடுத்து அவரது வங்கிக் கணக்குக்கு 35,000 ரூபாய் அளவில் பணம் வந்து சேர்ந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்ததோடு, பெயர் குறிப்பிடாமல் உயர்ந்த மனதுடன் உதவி செய்த அனைவருக்கும் அவர்கள் நன்றிகளைத் தெரிவித்தனர்.
இவரது தந்தையின் சிறுநீரகம் ஒன்றை இவருக்கு மாற்றி சத்திரசிகிச்சை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. இன்னும் போதுமான பணம் கிடைக்கவில்லை என்பதால் ஊதவிசெய்யக்கூடிய சகோதரர்களின் உதவிகளை இவர் எதிர்பார்க்கிறார்.
இது தொடர்பான ஆவணங்களும் முன்னைய செய்திகளுக்கான இணைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
பள்ளிவாயல் வழங்கியுள்ள கடிதம்:
வைத்தியரின் கடிதம்:
இது தொடர்பாக முதலில் பிரசுரிக்கப்பட்ட வேண்டுகோளை இந்த இணைப்பிலும் வங்கிக்கணக்கு, உறவினர்களின் தெலைபேசி இலக்கங்கள் போன்ற விபரங்கள் அடங்கிய செய்தியை இந்த இணைப்பிலும் காணலாம்









