காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

ஒல்லிக்குளம் பிரதேச பள்ளிவாயல்கள் ஒன்றியம் விடுக்கும் வேண்டுகோள்

Posted by Kattankudi Web Community (KWC) on 10/08/2011

ஒல்லிக்குளம் பிரதேச பள்ளிவாயல்கள் ஒன்றியம் இப்பிரதேச மக்களின் நீண்ட கால தேவையான முஸ்லிம் மையவாடிக்கான சுற்று மதில் ஒன்றை அமைப்பதற்காக நமது சகோதரர்களிடம் இருந்து நிதி உதவிகளை எதிர்பார்த்துள்ளது. இது சம்பந்தமான ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ வேண்டுகோளும் இதற்கு தேவைப்படும் நிதிக்கான உத்தேச தொகை மதிப்பு ஆவணமும் வாசகர்களின் கவனத்துக்காக இங்கு பதிவேற்றம் செய்யப்படுகின்றது.

வழமை போல் அரச, மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் திட்டமிடப்பட்ட புறக்கணிப்புகள், மற்றும் நமது அரசியல்வாதிகளின் வழமையான பாராமுகம் மற்றும் அசமந்தப்போக்குகளின் காரணமாக அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலேயே இப்பிரதேச முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். இம்மக்களின் முக்கிய தேவையாக இம்மையவாடி உள்ளது.

இம்மையவாடி தொடர்பாக தமிழ் சகோதரர்களுடன் நீண்டகாலமாக இருந்து வந்த பிணக்குகள் அண்மையில் இம்மையவாடிக்கு சுற்று மதில் அமைத்து கொள்வது என்ற முடிவின் அடிப்படையில் தீர்த்து வைக்கப்பட்டது.

வசதி படைத்த சகோதரர்கள் இம்முயற்சிக்கு தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்குமாறு ஒல்லிக்குளம் பள்ளிவாயல்கள் ஒன்றியம் வேண்டுகோள் விடுக்கின்றது.


One Response to “ஒல்லிக்குளம் பிரதேச பள்ளிவாயல்கள் ஒன்றியம் விடுக்கும் வேண்டுகோள்”

  1. Ooraan said

    பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு இரண்டுக்குமிடையில் சிக்குண்டு முஸ்லிம் சமூகம் மிகப்பாரிய உயிர், நில மற்றும் பொருளாதார இழப்புகளை சந்தித்துள்ளது. இரண்டு பேரின சமூகங்களும் எமது சமூகத்தை அவர்களின் நலன்களை அடைவதற்கு பகடை காயாக பயன்படுத்தியுள்ளன. போருக்கு பின்னான அரசியலில் கூட இந்த நிலைமை தொடர்ந்து வருகின்றது.

    நமது மக்களுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்ட முறையில் நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டு மிகவும் நெரிசலான வாழ்க்கைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதுடன் வியாபாரம் தவிர்ந்த மாற்று வாழ்வாதார வாய்ப்புகள் நமக்கு மறுக்கப்பட்டுள்ளது.

    மிகவும் கேவலமான, சுயநலமான பேரினவாதிகளுக்கு அல்லக்கைகளாக செயற்படும் நமது அரசியல் வாதிகள் நமது சமூகத்துக்கு அமைந்த மாபெரும் சாபக்கேடாகும். சொல்லன்னா நிலப்பிரச்சினைகளை நாம் எதிர்நோக்கும் வேளையில் நமது அரசியல் வாதிகள் மிகவும் நளினமாக எமது சமுதாயத்துக்கு நிலப்பிரச்சினைகள் எதுவும் கிடையாது என்று நாக்கூசாமல் சர்வதேசத்துக்கு எடுத்தியம்பி வருகின்றனர். அரசியல் மூலம் நமது சமூகம் உருப்படியான எந்த ஆக்கபூர்வமான அடைவுகளையும் இதுவரை அடையவில்லை. நமது கேவலமான அரசியலால் நமது சமூகம் பல தசாப்தங்கள் பின் தள்ளப்பட்டதே நாம் கண்ட பலனாகும்.

    அரசாலும் நமது அரசியல் வாதிகளாலும் கைவிடப்பட்ட மீள்குடியேறிய முஸ்லிம் சகோதரர்களுக்கு உதவுவது எமது தலையாய பணியாகும்.

    -ஊரான்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s