நேர்காணல்: ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தின் Consul General அப்துல் றஹீம்
Posted by Kattankudi Web Community (KWC) on 09/08/2011
எமது நேர்காணல் தொடரின் அடுத்த நேர்காணலுக்காக விடுக்கப்பட்ட அழைப்பை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் இயங்கும் இலங்கைத் தூதரகத்தின் முதன்மைப் பொறுப்பதிகாரியான எமதூரைச் சேர்ந்த சகோதரர் அப்துல் றஹீம் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.
எதிர்வரும் 20.08.2011 சனிக்கிழமை துபாயில் அவரது வாசஸ்தலத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்நேர்காணலில் சேர்த்துக்கொள்வற்கான வாசகர் கேள்விகள் இத்தால் கோரப்படுகின்றன.
வெளிநாட்டு வர்த்தக சேவையில் கடந்த இருபது வருடங்களாகப் பணியாற்றி வரும் சகோதரர் அப்துல் றஹீம் அவர்களிடம் கேட்பதற்கான பொருத்தமான கேள்விகளை வாசகர்கள் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுப்பி வைக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒரு வாசகர் ஒரு கேள்வி மாத்திரமே கேட்க முடியும்
- கேள்வி கேட்கும் வாசகர் தனது முழுப்பெயர், முகவரி மற்றும் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை குறிப்பிட்டு அனுப்பிவைக்க வேண்டும்
- கேள்விகளை நேர்காணலில் அப்படியே இணைத்துக்கொள்ளவோ, தேவையான திருத்தங்களுடன் இணைத்துக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ இன்போ நிர்வாகத்துக்குள்ள உரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டும்
- கேள்விகள் யாவும் எமது மின்னஞ்சல் முகவரியான kattankudi@yahoo.com க்கு எதிர்வரும் 16.08.2011 செவ்வாய்க்கிழமை இலங்கை நேரம் நள்ளிரவு 12:00 மணிக்கு முன்னதாக Abdul Raheem Interview என்று தலைப்பிட்டு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்படாத எந்தக் கேள்வியும் நிராகரிக்கப்படும் என்பதை வாசகர்கள் தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.







aashamahmud said
thanks for info…………