காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

தாறுல்ஹைர் நிறுவனத்தின் உயர் தர கணித,விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள்

Posted by Kattankudi Web Community on 07/08/2011

-தகவல்:MIM.முப்ராஸ் (செயலாளர்-தாறுல்ஹைர்)-

கடந்த 20-07-2011 இல் க.பொ.த உயர் தர கணித,விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான தொடர் பரீட்சையின் 4வது பரீட்சை நடைபெற்றது.தாறுல்ஹைரானது நான்கு வருடங்களாக பல்கலைக்கழக பொறியியல்,மருத்துவ பீட மாணவர்களை கொண்டு ஒவ்வொரு வருடமும் க.பொ.த உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வாராந்த தொடர் பரீட்சைகளையும்,வருட முடிவில் கல்விக்கருத்தரங்குகளையும் நடத்தி வருகின்றது.

இம்முறை தாறுல்ஹைர் நிறுவனமானது க.பொ.த உயர் தர கணித,விஞ்ஞான பிரிவுகளில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் வெளி மாவட்டங்களில் நடைபெற்ற வினாத்தாள்களை வழங்கியது. விசேடமாக கொழும்பு தமிழ் சங்கம்,றோயல் கல்லூரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.

கடந்த வாரம் முதல் தாறுல்ஹைர் நிறுவனமானது  அட்வகேட் அப்துல் காதர் வீதியில் உள்ள புதிய கட்டிடத்தில் தனது செயற்பாடுகளை மீண்டும் தொடர ஆரம்பித்துள்ளது.

மேலும் தாறுல்ஹைர் நிறுவனமானது இவ்வருடம் க.பொ.த உயர்தர பிரிவு பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு தனது பிரார்த்தனைகளையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.

This slideshow requires JavaScript.

 

 

4 Responses to “தாறுல்ஹைர் நிறுவனத்தின் உயர் தர கணித,விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள்”

  1. fayas said

    Masha allah
    they are achieving their targets

  2. dharulkhair said

    கல்வி என்பது மனிதர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட ஓர் அமானிதம் இதை நம் சமூகத்திக்கு வழங்க வேண்டிய பாரிய பொறுப்பு எம்மிடம் இருக்கிறது.
    தாறுல்ஹைர் அமைப்பின் வெற்றிக்கு சான்று,அதன் மூலம் முழுப்பலன் பெற்ற அனைவரும் அதனுள் தாமாகவே இனைந்து அதன் பணியை உயிர்பிப்பதே….
    இதுவரை காலமும் பொருளாதார உதவிகளை வழங்கிய நம் ஊர் தனவந்தர்களுக்கு எம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

  3. mohamed said

    வாழ்த்துக்கள்! தங்களின் பணி மேலும் மேலும் சிறப்படைய எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக.
    தாங்கள் மட்டும் மருத்துவ , பொறியியற் பீடங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டால் போதும் என்று எண்ணாமல் , எமது ஊரைச்சேர்ந்த ஏனைய மாணவர்களும் அத்துறைக்கு வரவேண்டும் என்ற இவர்களின் நோக்கம் உண்மையில் பாராட்டத்தக்கது.
    உண்மையில் கல்வி ரீதியாக எமது காத்தான்குடி பின்தங்கிய நிலையில் உள் ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.காரணம் ஒவ்வொரு முறையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்கலைக்கழத்திற்கு தெரிவுசெய்யப்படும் மொத்த மாணவர்களில் கால்பங்கினர் கூட முஸ்லிம்கள் இல்லை என்பதே கசப்பான உண்மையாகும்.
    5ம் தர பரீட்சையில் பிள்ளைகளின் மீது பெற்றோர் எடுத்துக்கொள்ளும் கரிசனையில் சிறு அளவுகூட உயர்தர பரீட்சையில் எடுப்பதில்லை.கபொ.த. சாதாரணதர பரீட்சையில் 10 A,9A ,8Aசித்திகளைப்பெற்றுக்கொள்ளும் பெரும்பாலான மாணவர்கள் உயர்தர பரீட்சையில் கோட்டை விட்டு விடுகினறனர். இதற்கான பிரதான காரணம் உயர்தரத்தில் அவர்களுக்கு உரிய வழிகாட்டல் கிடைக்காமையாகும்.

    மேலும் ஒரு சமூகத்தில் வளர்ச்சியும் அபிவிருத்தியும் வெறும் பொருளாதாரத்தை மட்டும் கொண்டு அளவிடப்படுவதில்லை. கல்வி அங்கு முக்கிய பங்கு வகிக்கிறதுஉதாரணமாக அண்மையில் வெளியான உயர்தரப்பரீட்சைகளின் முடிவுகளின்படி மருத்துவத்துறைக்கு மாவட்டமட்டத்தில் தெரிவான 26 மாணவர்களில் வெறும் 4 பேர் மட்டுமே முஸ்லிம்கள்.அதேபோல்பொறியியற்துறையில்மொத்த 21 மாணவர்களில் 5 பேர் மட்டுமே முஸ்லி்ம்கள். எனவே எமது ஊரின் கல்வி நிலையைஉணர்ந்து அபிவிருத்திப்பாதையை காட்டவேண்டியது ஒவவொரு முஸ்லிமின் தலையாய கடமை.

    மேலும் தாருல்கைர் நிறுவனமானது உயர்தர மாணவர்களின் மத்தியில் மிகவும் பிரபலம்பெற்ற ஒரு அமைப்பு . இவ்வமைப்பானது உயர்தர மாணவர்களுக்கு பல முன்னோடிப்பரீட்சைகளை நடாத்தி வருவதை காத்தான்குடி பிரதேச மாணவர்கள் நன்கறிவர்ஆயினும் இவ்வமைப்பின் சேவைகளை விரிவுபடுத்துவதில் முக்கிய பிரச்சனையாவுள்ளது பொருளாதாரப் பிரச்சினையாகும்.

    இப்புனித ரமழான் மாதத்தில் எமது ஊர் தனவந்தர்கள் ஏழைகள் ஒவ்வொருவருக்கும் 50 ரூபா,100 ரூபா கொடுப்பதோடு நம் கடமை முடிவடைவதாக எண்ணுகின்றனர் .ஆனால் இவ்வாறான செயற்பாடுகளால் வறுமைய நிரந்தரமாக ஒழிக்கமுடியாது . காரணம் தனவந்தர்கள் வழங்கும் 100 ரூபா ஏழையின் ஓரிரு வேளை பசியை மட்டுமே போக்கும். அடுத்த தடவையும் அவ் ஏழை பிறரின் உதவியைத்தான் நாடுவார்.
    நிரந்தர வறுமை ஒழிப்பை மேற்கொளள சிறந்த வழிகளில் ஒன்று கல்வி ரீதியான உதவிகளாகும். காரணம் ஒரு ஏழை மாணவன் அல்லது மாணவிக்கு உயர்தரம் சித்தியடைந்து பல்கலைக்கழகம் சென்று கற்று தகுந்த ஒரு அரச உத்தியோகம் பெற்றுக்கொள் ள உதவுவதே நிரந்தர வறுமை ஒழிப்புக்கு துணைகோலும் . அதன்மூலமே அல்லாஹ்விடமிருந்து நிறைவான பயனைப்பெற்றுக் கொள்ள முடியும்.
    எனவே எமது ஊர் தனவந்தர்கள் எமது ஊரின் கல்வி வளர்ச்சிக்காகஅரும்பாடுபடும் தாருல்ஹைர் நிறுவனத்திற்கு தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி உதவவேண்டும். இதன்மூலமே எமது சமூகத்தின் வளர்ச்சிப்பாதைக்கு தாங்கள் அடிகோலிட முடியும்.. அல்ஹம்துலில்லாஹ்!

  4. careem said

    ஒரு மாணவன் உயர்தரத்தில் அடையும் வெற்றி அது அவனுக்கு மட்டுமல்ல
    அவனது சமூகத்தை ஒரு உயர்தரத்திற்கு எடுத்துச்செல்லும் ஒரு மகத்தான
    வெற்றியாகும். ஒரு சமூகத்தின் அளவுகோலாக அந்த சமூகத்தின் படிப்பறிவுள்ளவர்களே
    கருதப்படுகின்றனர். ஆகையால் கல்வியை ஊக்குவிப்பது நம் அனைவரினதும் தலையாய
    கடமையாகும். இது நமது இஸ்லாத்தில் பர்ழுகிபாயாவின் ஒரு அங்கமாக விளங்குகிற்து.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s