காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

”உம்மாவுடன் பேச சல்லி செலவாகுமே” – சகோதரி ரிஸானாவின் நாகரீகம்

Posted by Kattankudi Web Community (KWC) on 05/08/2011

சகோதரிறிஸானா நபீக் சிறைவைக்கப்பட்டுள்ள சிறைக்கு அடிக்கடி சென்றுவரும் இலங்கையைச்சேர்ந்த டாக்டர் கிபாயா இப்திகார் ஆங்கில இணையத்திற்கு வழங்கிய செவ்வியே இது.பின்னர் அது அச்சு ஊடகமொன்றிலும் வெளியாகியிருந்து. மிகுந்த சிரமத்திற்குமத்தியிலேயே சகோதர வலைதளமான யாழ் முஸ்லிம் பதிவேற்றம் செய்திருந்தது.நன்றியுடன் இச்செவ்வியை காத்தான்குடி இன்போ வாசகர்களுக்கு பதிவேற்றம் செய்கின்றோம். இந்த ரமழான் மாதத்தில் ரிசானாவின் விடுதலைக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு இன்போ வாசகர்களை வேண்டி நிற்கின்றது. – இன்போ நிர்வாகக்குழு

உங்களைப் பற்றி எங்களுக்கு சொல்ல முடியுமா?

நான் இலங்கை கண்டியை சேர்ந்தவள். கடந்த 9 வருடங்களாக ரியாத்தில் டாக்டராக தொழில் செய்கிறேன். எனது கணவர் ஒரு எஞ்சினியர். அவரும் சவூதி அரேபியாவில் தொழில் செய்கிறார். எங்களுக்கு ஒரு பெண் பிள்ளை அவரும் சவூதியில் கல்வி கற்கிறார்.

எங்கள் கேள்விகளுக்கு உங்களால் சுதந்திரமாக பதிலளிக்க முடியுமா அல்லது உங்களுக்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் இருக்கின்றனவா?

நான் எவருக்கோ எந்த அமைப்பிற்கோ கட்டுப்பட்டவள் அல்ல. தன்னிச்சையாக ரிஸானா விடயத்தில் நான் ஈடுபட்டு வருகிறேன். எனது மனிதநேயத்தை கணவர் நன்றாக புரிந்து வைத்திருப்பது இதுவிடயத்தில் எனக்கு ஈடுபட முடிகிறது.

ரிஸானா வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கும் நீங்கள் தொழில் பார்க்குமிடத்திற்கும் எவ்வளவு தூரம்?

அவர் அல் தவாத்மியில் அமைந்துள்ள சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். எனக்கு அங்கு செல்லத்தூரம் 400 கிலோ மீற்றர். மொத்த பிரயாணத் தூரம் 800 கிலோ மீற்றர். அதற்கான நேரச் செலவு 8 மணித்தியாலங்கள். அதுவும் வெறும் பாலைவனத்தில் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கிறது. சவூதியில் பெண்கள் வாகனம் ஓட்ட முடியாதிருப்பதால்
வழித்துணைக்கு நான் இன்னுமொரு பெண்ணை சேர்த்து கொள்வேன்.

எத்தனைமுறை நீங்கள் ரிஸானாவை இதுவரை சந்தித்திருக்றீர்கள்?

துல்லியமாக சொல்ல ஞாபகமில்லை. குறைந்தது 15 தடவைகளாவது சந்தித்திருப்பேன்.

சவூதி அரேபிய சட்டங்கள் கடினமானது என விமர்சனங்கள் இருக்கின்றபோது நீங்கள் இத்தனை முறைகள் சந்திப்பது எப்படிச் சாத்தியம்?

இன்னுமொரு நாட்டுச் சட்டதிட்டங்களை விமர்சனம் செய்யும் உரிமை எவருக்கும் கிடையாது. ஷரீஆ சட்டத்தைப் புரியாமல் சிலர் இப்படிப் பேசுகிறார்கள். ரிஸானா விடயத்தி; நான் ஆர்வமாக இருப்பதால் நான் அவரை சந்திக்க அனுமதி கேட்ட போதெல்லாம் அதற்கான சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கி இருக்கிறார்கள்.

சவூதியிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் எனக்கு நல்ல ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள். நான் ரிஸானாவை பார்க்கப்போக வேண்டுமென அவர்களுக்கு அறிவித்தால் உடனே காரையும் சாரதிகளையும்கூட அவர்கள் அனுப்பிவைப்பார்கள். இந்த இடத்தில் இன்னுமொரு விடயத்தையும் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது.

சிறைச்சாலை என்றதும் நமது நாட்டிலுள்ள சிறைச்சாலைகளையும் இரும்புக் கம்பிகளையும் கைவிலங்கிடப்பட்ட இரும்புச் சங்கிலிகளையும் கற்பனைக் பண்ணிக்கொண்டுதான் இங்குள்ளவர்கள் விமர்சனங்களை செய்து வருகின்றனர். ஆனால் ரிஸானா வைக்கப்பட்டுள்ள சிறை அப்படிப்பட்டதல்ல. அது ஒரு வீட்டுச் சூழல் போன்றது.

சில சந்தர்ப்பங்களில் அங்குள்ள அதிகாரிகள் நான் வந்திருப்பதை அறிந்துகொண்டு அவர்களது காரியாலயத்தில் என்னை அமரவைத்துக்கொண்டு ரிசானாவை அழைத்துவந்து தருவார்கள். மிகுந்த மனித நேயத்துடனே அவர்கள் ரிஸானா விடயத்தில் நடந்து கொள்கிறார்கள்.

நீங்கள் ரிஸானாவை சந்திக்கும் சந்தர்ப்பங்களில் ரிஸானா உங்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பது பற்றி விபரிக்க முடியுமா?

ரிஸானா மிகவும் தெளிந்த மனநிலையில் காணப்படுகிறார். சில சந்தர்ப்பங்களில் என்னi நோனா என அழைப்பாள். நான் அவளிடத்தில் நெருக்கமாக பேசும்போது என்ளை சிறிய தாயார் (சாச்சி) என்றுகூட உரிமையுடன் பேசுவாள். உம்மாவுக்கு பேச வேண்டுமா? எனக்கேட்டால் நோனா உங்களுக்கு சல்லி செலவாகுமே என்று என்னிடத்தில் கேள்வி எழுப்புவாள்.

வறுமைக்குட்பட்ட குடும்பத்தில் ரிஸானா பிறந்தாலும் என்னிடத்தில் நாகரீகமாக நடந்து கொள்வாள். மூதூரிலுள்ள தாயாருக்கு பேச தொலைபேசியைக் கொடுத்தால் தாயும் பிள்ளையும், சில சமயங்களில் உறவினர்களும் கூட அவளிடத்தில் பேசுவார்கள்.

அவளது தாயாரும் இறைபக்தி மிக்கவர். ரிஸானாவுக்கு சிறைச்சாலையில் தொழுவதற்கும், நோன்பு நோற்பதற்குமான அனைத்து வசதிகளையும் சிறைச்சாலை அதிகாரிகள் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

ரிஸானாவின் பொழுதுபோக்கு சிறைச்சாலையில் எப்படி கழிகிறது?

இறை கடமைகளை தவறாது செய்வதுடன் வீட்டிற்கு கடிதம் எழுதுவது ஏதாவது பின்னால் வேலைகளைச் செய்வது போன்றவற்றில் அவளது நேரம் கழிகிறது. இந்த இடத்தில் ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும். ஒருமுறை நான் அவளை பார்க்க சிறைக்கு சென்று திரும்ப முயற்சித்தபோது என்னிடத்தில் ஒரு வேண்டுகோளை விடுத்தாள். நான் ஒரு கம்பளத்தை பின்னி இருக்கிறேன். இதனை உம்மாவுக்கு அனுப்பவைக்க வழி பண்ண முடியுமா என்று கேட்டாள்.

கம்பளத்தைப் பார்த்துவிட்டு யார் கொடுத்தார்கள் எனக்கேட்டேன். எனக்கு மாதாந்தம் 64 ரியாழ்கள் தருவார்கள் அதனைக் கொண்டு நூல்களை வாங்கித்தான் இதனை செய்தேன் என்று கூறினாள். அப்பொழுதுதான் எனக்கு தெரியவந்தது இவளுக்குப் பினனல் வேலைகள் தெரியும் என்பதும், கைதிகளுக்கு மாதாந்தம் 64 ரியாழ்களை வழங்குகிறார்கள் என்பதும்.

ரிஸானா தண்டனை விடயத்தில் சவூதி ஊடகங்களினதும், சமூகத்தினதும் கருத்து எப்படி இருக்கிறது?

80 முதல் 90 சதவீதமான அபிப்பிராயங்கள் அவள் விடுதலையை ஆதரிப்பதாக அமைகிறது.

ரிஸானா சிறு வயதுக்காரி. அவளுக்கு இந்தத் தண்டனை கூடாது என்றதொரு அபிப்பிராயம் இருக்கின்றதே என்று கேட்டபோது?

சவூதி அரேபிய பதிவுகளும் இலங்கை கடவுச் சீட்டிலும் அப்படியில்லை. எனவே அவள் சிறுமி என்ற வாதத்திற்கே இடமில்லை. தவறு எங்கோ நடந்துவிட்டது.

ரிஸானா விடுதலை தொடர்பாக ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் நடத்தப்படுகின்றனவே. இவை அவர் விடுதலைக்கு எந்தவகையில் தாக்கத்தைச் செலுத்தும்?

இது  மிகமோசமான பின்விளைவுகளைத்தான் ஏற்படுத்தும் இந்த நடவடிக்கைகள் ஒருபோதுமே அவர் விடுதலைக்கு உதவமாட்டாது. மாறாக இது ரிஸானாவிற்கு ஆபத்தையே உண்டு பண்ணும்.

இலங்கை அரசு ரிஸானா விடுதலைக்காக எதுவுமே செய்யவில்லை என்று எதிரணி அரசியல்வாதிகள் குற்றம்சாட்டுகின்றனரே. சவூதியில் இதுவிடயத்தில் கதாநாயகியாகச் செயலாற்றும் நீங்கள் என்ன சொல்கிறீர்கள?

அரசியல் பற்றி எனக்கு எதவும் தெரியாது. அதில் எனக்கு ஆர்வமும் கிடையாது. இந்தக் கருத்து முற்றிலும் தவறானது. அவர்கள் என்னதான் முயற்சித்தாலும் சட்டம், தீர்ப்பு என்று இப்போத முடிவாகி இருக்கிறது. சர்வதேச சமூகமும் இந்த விடயத்தில் தலையிட்டு இருக்கும்போது ஒன்றும் செய்யவில்லை என்றவாதம் அரசியல் மேடைகளுக்கும்,  கோஷங்களுக்கும் உதவுமே தவிர ரிஸானா விடுதலைக்கு அவை ஒருபோதுமே உதவ மாட்டாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸகூட சவூதி மன்னரிடத்தில் ரிஸானாவிற்கு மன்னிப்பு கொடுக்கும்படி ஒரு உருக்கமான கடிதம் எழுதியிருக்கிறார். இந்தக் கடிதம் ரிஸானா விடயத்தில் மன்னரின் கவனத்தை ஈர்க்குமென நம்புகிறேன். என்றாலும் மன்னருக்குக்கூட மன்னிப்பு வழங்க முடியாது. சம்பந்தப்பட்ட பெற்றோரை அழைத்து அவர்களிடத்தில் மன்னிப்பு தொடர்பான வேண்டுகோளைத்தான் அவரும் விடுக்கமுடியும். அந்த விடயம் மட்டுமே நடைபெற வேண்டியிருக்கிறது. ரிஸானாவின் தலைவிதி இறைவன் கரங்களில்தான் தற்போது இருக்கின்றது.

நீஙகள் ரிஸானாவை கடைசியாக எப்போது சந்தித்தீர்கள்?

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர்.

ரிஸானாவுக்கு மன்னிப்பு எவ்வளவு தூரம் சாத்தியம் என நீங்கள் கருதுகிறீர்கள்?

80 சதவீதம் நம்பிக்கை எனக்கிருக்கிறது. சவூதி மீதான விமர்சனங்களும், கண்டனங்களும் இலங்கைக்கு மட்டுமல்ல ரிஸானா விடுதலைக்காக முயல்கின்ற எம்போன்றவர்களுக்கும் இக்கட்டை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட தரப்பை ஆத்திரமூட்டுவதை தவிர்த்து அதுவிடயத்தில் மன்றாட்டங்களும், பிரார்த்தனைகளுமே தேவை.

ரிஸானாவின் பெற்றோரை நீங்கள் தொடர்புகொண்டு வருகிறீர்களா?

நான் இலங்கை சென்றிருந்தபோது ரிஸானாவின் பெற்றேர்களை எனது வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு தைரியமும், ஆறுதல்களையும்கூட சொன்னேன். அவர்கள் ஏழைகளாக இருந்தபோதும் மிகவும் கௌரவமானவர்கள்.

நல்லதொரு கதையைச் சொல்லுகிறேன் கேளுங்கள். ஒரு சமயம் செலான் வங்கி உரிமையாளரும், பிரபல கோடிஸ்வரருமான  லலித் கொத்தலாவலை ரிஸானாவின் குடும்ப நிலையையும், அவரது மின ஏழ்மையான  வீட்டையும் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு கொழும்புக்கு சமீபமாக ஒரு வசதியான வீட்டைக்கொடுக்க முன்வந்தார். ஆனால் ரிஸானாவின் பெற்றோர் அதனை நிராகரித்துவிட்டமை மட்டுமல்லாது எமது பிள்ளையின் விடுதலைதான் எமக்கு தேவை வசதி வாய்ப்புகள் எமக்குத் தேவையில்லை என்று சொல்லியதை நான் அறிவேன்.

தீர்ப்பு தொடர்பாக அப்பீல் செய்யப்பட்டதே அதற்கு என்ன நடந்தது?

சிறிது நேரம் மௌனமாகிறார் டாக்டர் கிபாயா. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதில் எனக்கு பெருத்தமான அழுத்தங்கள் இருக்கின்றன. என்றாலும் மறைக்காது உண்மையைச் சொல்வதைத் தவிர வேறுவழி எனக்கு தெரியவில்லை.  அப்பீல்  தீர்ப்பும் முன்னைய  தீர்ப்பை உறுதிசெய்துவிட்டது. இதில் வேதனையான விடயம் என்னவென்றால் இந்த விடயம்  இதுவரை ரிஸானாவிற்கு இன்னும் தெரியாது. தீர்ப்பை நான் எனது கண்களாலே பார்த்துவிட்டேன. அவள் விடுதலை என்ற நம்பிக்கையில் வாழ்கிறாள்

13 Responses to “”உம்மாவுடன் பேச சல்லி செலவாகுமே” – சகோதரி ரிஸானாவின் நாகரீகம்”

  1. Muslim Care said

    யா அல்லாஹ் நீதான் அருள் புரிய போதுமானவன்!

  2. abdulla said

    irayvan thunai irukka entha theerppum eathuvum seyya mudiyathu viduthalai niccayam insha allah

  3. Muzzammil said

    அன்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்…
    றிஸானவின் விடயத்தில் இப்போதிருக்கின்ற நிலவரங்களின்படி அவரின் விடுதலைக்கு பெரும்பாலும் தடையாக இருப்பது அவரது வயதுப்பிரச்சினைதான். எமது நாட்டின் பெரும்பாலான வெளிநாட்டு முகவர்கள் (பண ஆசையில்) சிறுமிகளின் வயதைக்கூட்டி விஸா முடித்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கிறார்கள். றிஸானாவுக்கு உண்மையான வததைக்காட்டி அனுப்பியிருந்தால் சிறுவர் நன்னடத்தைப்பிரிவில் அவர் ஆரம்பத்திலேயே விடுதலையாகியிருப்பார்.

    அன்பர்களுக்கு அடியேனின் அன்பான வேண்டுகோள்………
    இப்புனித றமழானில் தாங்கள் நரக விடுதலைக்காக அல்லாஹ்விடத்தில் கையேந்தும் வேளை றிஸானாவின் சிறை விடுதலைக்காகவும் கையேந்துங்கள்.
    ‘இறைவன் நாடினால் உங்களுக்கு நினையாப்புறத்தில் இருந்து உதவி புரிவான்’

  4. Ahnaf Farook said

    இறைவா யாவற்றையும் அறிந்தவன் நீயே இப்பெண் மணிக்கு உனது கிருபையை காட்டுவாயாக

  5. பஹ்மி இஸ்ஸத் said

    யா அல்லாஹ் நீதான் அருள் புரிய போதுமானவன்!

  6. mmsa said

    In this world as far as Muslims concern the most powerful and the sophisticated weapon is only DUAA asking Almighty Allah for her release specially if we all pray during the midnight prayer Thajjath Allah will accept our prayers and she will be released insa Allah we all pray for her release

  7. allah pothumaanavan..

  8. hasan said

    இதைப்படித்து முடித்ததும் என்னை அறியாமல் நான் அழுதுவிட்டேன். யா அல்லாஹ் நீதான் நியாயத்தை ரொம்ப அறிந்தவன்

  9. Abdullah said

    அஸ்ஸலாமு அலைக்கும் இந்த சம்பவத்தை வாசிக்கும் போது கவலையாக உள்ளது. ஆனால் தலையங்கத்தை பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது. தலையங்கத்தை மாற்றினால் மிகவும் நன்றாக இருக்கும்.. இன்போவிக்கு நன்றிகள்

  10. யா அல்லா அன்புச் சகோதரி றிஷானாவை விடுதலை செய்யே அருள் புரிவாய் யாகே

  11. NoorMohamed said

    Rizana likely to be pardoned
    [ Monday, 08 August 2011, 03:53.53 AM GMT +05:30 ]
    Rizana Nafeek, the Sri Lankan maid who was on death row in Saudi Arabia is likely to be pardoned and brought to Sri Lanka very soon. A ministerial delegation from Sri Lanka is already in that country to attend to the formalities.
    The death sentence on Rizana was confirmed on June 16, 2007. She was charged with the strangling of a four-month old baby whom she was bottle-feeding.

    Since then, local parties and human rights groups have campaigned to secure a pardon for Rizana who hails from Mutur.

    President Mahinda Rajapaksa had also requested the King of Saudi Arabia in writing last year to pardon to Rizana who went to Saudi Arabia seeking employment as a housemaid. As a result the King had suspended the implementation of the death sentence on Rizana.

    According to Sharia Law which is practiced in Saudi Arabia, even the King cannot pardon a person sentenced to death. If a pardon is to be granted, the consent of both parents of the dead baby must first be obtained. Furthermore, blood money has to be paid.

    Foreign Employment Minister Dilan Perera and Kingsley Ranawaka the chairman of the Sri Lanka Foreign Employment Bureau had flown to Saudi Arabia on Saturday to attend to the formalities involved.

    Rizana was born on February 4, 1988. However, the employment agency that sent her had altered her date of birth to February 2, 1982, and prepared the relevant documents based on that date to send her for employment to Saudi Arabia in May, 2005.

    http://eng.lankasri.com/view.php?20SAC630eRlOK4eadBmycadB5Yyddc4Y53ac4YmB3e43mOl2023QMI32

  12. ahamed said

    I ask dhuaa with the almighty of Allah for risana’s release from jail.Insha allah during the ramalan if every muslim should link through dhuaa with allah , Allah will be enough for risana’s release.

  13. M Rizan ... Qatar said

    ரிசானா நபீக் விடுவிக்கப்படும் வாய்ப்புகள்! குழந்தையின் பெற்றோர் பொதுமன்னிப்பு வழங்கியதாக தகவல்……..

    நான்கு மாதக் குழந்தை ஒன்றின் மரணம் தொடர்பில் சவூதியில் மரணதண்டனை கைதியாக இருக்கும் திருகோணமலை மூதூர் பெண்ணான ரிசானா நபீக், பொதுமன்னிப்பு கிடைக்கப்பெற்று விரைவில் நாடு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இலங்கையின் அமைச்சு மட்டக்குழு ஒன்று இதற்கான உத்தியோகபூர்வ விடயங்களுக்காக சவூதிக்கு சென்றிருப்பதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது

    2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ம் திகதி முதல் ரிசானர் நபீக், சவூதியில் மரணதண்டனை கைதியாக இருந்து வருகிறார்.

    சவூதியில் உள்ள சட்டத்தின்படி மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு அந்த நாட்டின் மன்னர் பொதுமன்னிப்பு வழங்கமுடியாது.

    அவ்வாறான ஒரு அதிகாரம் இறந்துப்போன குழந்தையின் பெற்றோருக்கே உள்ளது. அத்துடன் இரத்த நிதியும் அவர்களுக்கு செலுத்தப்படவேண்டும்.

    இந்தநிலையில் ரிசானா நபீக் புட்டிப்பால் பருக்கிக்கொண்டிருந்த வேளையில் இறந்து போனதாக கூறப்படும் நான்கு மாதக் குழந்தையின் பெற்றோர் ரிசானாவுக்கு பொதுமன்னிப்பை வழங்க இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து குறித்த உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் துறை அமைச்சர் டிலான் பெரேரா, மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க ஆகியோர் கடந்த சனிக்கிழமையன்று சவூதிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

    1988 ஆம் ஆண்டு பிறந்த ரிசானா, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான வயது தகுதியை பெற்றிருக்காத போதும், முகவரால் 1982 ஆம் ஆண்டு பிறந்தவராக காட்டப்பட்டு 2005 ஆம் ஆண்டு சவூதிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s