காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

சம்மேளன கூட்டமண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

Posted by Kattankudi Web Community on 31/07/2011

-எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்-

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், காத்தான்குடி மத்திய கல்லூரி, அல்அமீன் வித்தியாலயம், அன்வர் வித்தியாலய அதிபர்கள் ஆகியோர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று 20.07.2011 வெள்ளிக்கிழமை மாலை சம்மேளன கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது.

 காத்தான்குடி பிரதேசத்தில் 1000பாடசாலை திட்டத்தின் கீழ் காத்தான்குடி மத்திய கல்லூரி உள்வாங்கப்படுகின்ற போது அங்குள்ள தரம் 1தொடக்கம் 5வரையான மாணவர்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும், அன்வர் வித்தியாலய தரம் 2தொடக்கம் 5வரையான மாணவர்களை மத்திய கல்லூரி மாணவர்களுடன் இணைத்து புதிய ஜுனியர் பாடசாலை ஒன்றை அமைப்பது தொடர்பாகவும், அல் அமீன் வித்தியாலயத்தினை இத்திட்டத்துடன் சேர்ப்பதிலுள்ள நன்மைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அன்வர் வித்தியாலயத்தில் உள்ள முதலாம் தரத்தினை பழைய அன்வர் வித்தியாலயத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாகவும், மக்கா உம்முல் குரான் பல்கலைக் கழகத்தின் ஆசியாவுக்கான பல்கலைக் கழகத்தினை இலங்கையின் காத்தான்குடியில் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதால் தற்போதைய அன்வர் வித்தியாலய இடத்தில் அதனை தற்காலிகமாக அமைக்கமுடியுமா? என்பன போன்ற விடயங்களும் ஆராயப்பட்டது. இவ்விடயங்கள் தொடர்பாக பாடசாலை அபிவிருத்தி சபை மற்றம் பழைய மாணவர் சங்கம். பெற்றோர்கள் ஆகியோருடன் கதைப்பதோடு சம்மேளனம் மீண்டும் ஒரு தடவை இவ்விடயமாக கூடி ஆராய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

One Response to “சம்மேளன கூட்டமண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்”

  1. mmsa said

    let the federation to handle the matter by negotiating with the experts

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s