மட்/அல் அமீன் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமிக்கப்பட்டார் (படம் இணைப்பு)
Posted by Kattankudi Web Community on 30/07/2011
-தகவல்: APM. ஜலால்தீன் BBA (நூலக ஆசிரியர்)-
மட்/ஷுஹதா வித்தியாலய அதிபர் ஜனாப். எம்.எம். கலாவுதீன் (SLPS – 2II) அவர்கள் மட்/அல் அமீன் மகா வித்தியாலயத்திற்கு அதிபர் இடமாற்றத்தின் கீழ் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.மிக நீண்ட காலமாக மட்/அல் அமீன் மகா வித்தியாலயத்திற்கு நிரந்தர அதிபர் ஒருவர் நியமிக்கப்படாமை குறிப்பிடத்தக்கது.
புதிய அதிபர் நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்ற பின் இடம்பெற்ற வரவேற்பு உபசார வைபவத்திலும், ஜனாபா FUA. பரீதா மஹ்றூப் அவர்களின் ஓய்வு பெற்றுச் செல்லும் நிகழ்விலும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி மகா வித்தியாலயம் அரசினால் தற்போது மேற்கொள்ளப்படும் 1000 பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்படி வேலைத் திட்டத்தை தொடர்ந்து முன்கொண்டு செல்வதுதான் புதிய அதிபரின் முதல் பணி என்பதனை ஆசிரியர் சமுகம் இன்று புதிய அதிபரிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
This slideshow requires JavaScript.







aashamahmud said
Congratulation sir…..
mohamed said
whr is his pic?
Mazaa said
தங்களது புது வரவு – புதிய மாற்றங்களைக் கொண்டுவர வாழ்த்துக்கள்..
shamil said
Congratulation sir….
kuwat basheer said
congratulation sir my wish for you
Eng.Risath said
எப்போதும் நான் மதிக்கின்ற ஆசிரியர் கலாவுதீன் சேர் அவர்கள்,அவரது இந்த உயர்வுக்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.எனது வெற்றியின் பின்னாலும் எனது ஆளுமைகளின் பின்னாலும் காரணமாக இருக்கும் எனது மதிப்பிற்குரிய ஆசிரிய விருட்சங்களில் கலாவுதீன் சேர் முன்னிலை வகிப்பவர்.அல்லாஹ் இவருக்கும் எனது மதிப்பிற்குரிய ஆசிரிய விருட்சங்களுக்கும் அருள்பாளிப்பானாக.
எல்லாவற்றையும் விட நான் படித்த அல்-அமீன் வித்தியாலத்திற்கு நீங்கள் அதிபராக வந்திருப்பது மேலும் எனக்கு சந்தோசத்தை அளிக்கின்றது.உங்களது நல்லெண்ணம் ,சமூக சிந்தனை,மாணவர்கள் மேல் நீங்கள் கொண்டுள்ள அக்கறை அனைத்துக்கும் இறைவன் நிச்சயம் உங்களுக்கு சுவர்க்கத்தை வழங்குவான்.மேலும் எங்களை உருவாக்கிய இந்த பாடசாலையை தலைசிறந்த ஸ்தானத்திற்கு கொண்டு செல்வதற்குரிய சகல திறமைகளும் உங்களிடம் இருக்கின்றது.எனவே உங்களது வருகை அந்த பாடசாலையின் வளர்ச்சிக்கு இன்சாஅல்லாஹ் வெற்றியாக அமையும்.
Sajahan Farook said
Congratulation sir…
your student
Sajahan Farook BA (Cey), BA Hon,( EUSL) Dip In IT
From Liverpool UK
SMA said
Congratulation sir…..
atm said
congratulation sir…………………..
SAMEEM said
congratulation sir————-