காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்

Posted by Kattankudi Web Community (KWC) on 27/07/2011

-அபூ றப்தான்-

நான் வழமையாக எனது மகளின் வீட்டிலுள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவேன். இதே போன்று கடந்த ஞாயிற்றுக்கிழமையன்றும் (24.7.2011) மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக அன்று காலை 9.30 மணியிருக்கும் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றினுள் வாளியை விட்ட போது குழந்தையொன்று கிணற்றினுள் மிதந்து கிடப்பதை கண்டு அதிர்ந்து போனேன்.

அது எனது சகோதரி ஜெமீலாவின் குழந்தை பாத்திமா ஹனா தான் என்பதை கண்டு சப்தமிட்டு அழுதேன். எனது வீட்டு அயலவர்களை கூக்குரலிட்டு அழைத்தேன், அயலவர்கள் என்லோரும் அந்தக்கிணற்றடியில் ஒன்று சேர்ந்தனர் என காத்தான்குடி ஆறாம் குறிச்சி ஹைறாத் நகரிலுள்ள வீட்டு கிணற்றினுள் குழந்தையொன்று தாயினால் வீசி குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயின் சகோதரி ஆரிபா மேற்கண்டவாறு அழுது கொண்டு தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காத்தான்குடி ஆறாம் குறிச்சி டீன் வீதியிலுள்ள ஹைறாத் நகரில் ஏழு மாதக் குழந்தையொன்று தாயினால் கிணற்றினுள் வீசப்பட்டு அந்தக்குழந்தை உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றது.

இந்தச்சம்பவம் தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அக்குழந்தையின் தாயின் சகோதரி (பெரியம்மா) ஆரிபா,

எனது சகோதரி ஜெமீலாவும் கணவரும் காத்தான்குடிக்கு அருகிலுள்ள பாலமுனைக் கிராமத்தில் வசித்து வருகின்றார்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்,  அதில் மூத்தது ஆண் பிள்ளை வயது மூன்று. இரண்டாவது பிள்ளை பெண் குழந்தை அது தான் கிணற்றினுள் வீசப்பட்ட குழந்தை. இக்குழந்தை 31.12.2010 அன்று பிறந்தது.

இக்குழந்தைக்கு ஏழு மாதங்கள். மிகவும் அழகான குழந்தை. சகோதரியின் குழந்தையாக இருந்தாலும் நாங்கள்  அக்குழந்தையின் மீது கடுமையான பாசம் வைத்திருந்தோம்.

எனது சகோதரி திருமணம் முடித்து மகிழ்ச்சியாக சந்தோசமான வாழ்க்கை நடாத்திவந்தார். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக சகோதரியின் வாழ்வில் புயல் அடிக்க ஆரம்பித்தது.

சகோதரிக்கும் அவரது கணவருக்குமிடையில் ஏற்பட்ட தகராறு அவவை மிகவும் கடுமையாக பாதித்தது.

சகோதரியின் கணவர் வெளியூரில் தொழில் செய்து வருகின்றார். சகோதரியின் கணவருக்கு  வேறு ஒரு பெண்னுடன் ஏற்பட்ட தொடர்பே இந்தப்பிரச்சினைக்கு காரணமாகும்.

அந்தப்பெண்னுடன் அவருக்கு தொடர்பு என்பதை அறிந்த எனது சகோதரியின் மனநிலையிலும் அவவின் நடை, உடை பேச்சு என்பற்றில் மாற்றங்கள் தெரிந்தன.  இவர்களுக்குள் பிரச்சினை இருந்தே வந்தது.

எனது வீட்டுக்கு சகோதரி வரும்போதெல்லாம் தொலைபேசியில் கணவருடன் சண்டையிடுவதைத்தான் கேட்கக்கூடியதாக இருந்தது.

கணவரை வெளியூரில் தொழில் செய்யாமல் ஊருக்கு வந்து தொழில் செய்யுமாறு அரிடம் எனது சகோதரி கூறியே வந்தார்.

சகோதரியின் மூத்த ஆண் பிள்ளைக்கும் அடிக்கடி அடிப்பதும் தேவையில்லாத கதைகளை கதைப்பதுமாக இருந்தார்.

கிணற்றினுள் பிள்ளையை வீசுவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பிருந்து இவவின் பேச்சு மிகவும் கடுமையாக இருந்தது. எனக்கு அதிர்ச்சியாக இருக்கின்றது என்னை யாரோ துரத்துகின்றார்கள், எனது வீட்டில் இருக்க முடியாது என்றெல்லாம் அடிக்கடி கூறினார்.

ஆனால் இவ்வாறான அச்சுறுத்தல் எதுவும் இருக்கவில்லை.  வழமையில் அவ தெளிவாகவே பேசுவார் எந்த விதமான நோயும் அவவுக்கு இருக்கவில்லை.

எனது வீட்டுக்கு சகோதரி ஜெமீலா வரும்போதெல்லாம் எனது கணவரை எடுத்து தாருங்கள் அவரை இங்கு தொழில் செய்ய சொல்லுங்கள் என்றே கூறினார்.

நாங்களும் அவரின் கணவருடன் தொடர்பு கொண்டு நீங்கள் ஊருக்கு வந்து இவவை சமாதானப்படுத்தி விட்டு செல்லுங்கள் என்றே கூறினோம். அவரும் ஊருக்கு வந்து மனைவியை சமாதானப்படுத்தி விட்டே சென்றார்.

ஆனால் கணவன் மனைவி இருவருக்கு மிடையில் பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருந்தது.

கடந்த சனிக்கிழமையன்று மாலை அவவின் பாலமுனை வீட்டிலிருந்து எனது காத்தான்குடி வீட்டுக்கு வந்தார். வழமை போன்று நடந்து கொண்டார்.

நாங்களும் அவவை ஆதரித்து அன்றிரவு அவவுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி பொறுமையாக இருக்கும்படி ஆலோசனை கூறினோம்.

வழமையாக நானும் எனது மகளும்  அக்குழந்தையின் முகத்தை கழுவி  பவுடர் போட்டு பம்பஸ்  அணிந்து விடுவோம்.

ஆனால் சம்பவ தினத்தன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிருக்கும் எங்களிடமிருந்த குழந்தையை பெற்றுக்கொண்டு நான் எனது கணவரின் உம்மாவின் (மாமியாவின்) வீட்டுக்கு செல்லப்போகின்றேன் எனக்கூறி குழந்தையை வாங்கிக்கொண்டு மூத்த மகனையும் அழைத்துக்கொண்டு எனது வீட்டிலிருந்து எனது மகளின் வீட்டின் வழியாக  சென்று விட்டார்.

வழமை போன்று எனது கணவனை தொழிலுக்கும் மகளை பிரத்தியேக வகுப்புக்கும் அனுப்பி விட்டு எனது வீட்டிலிருந்த வேலைகளை முடித்து விட்டு இருக்கும் போது, அருகில்  இருபது ரூபாய் பொருட்கள் விற்பணை செய்வதை அறிந்து அங்கு சென்று அப்பொருட்களில் உயிரிழந்த எனது சகோதரியின் குழந்தைக்கு தேவையான பால் போத்தல், விளையாட்டுப்பொருட்கள் சிலவற்றை வாங்கிக்கொண்டு வந்து வீட்டில் வைத்து விட்டு எனது மகளின் விட்டிலுள்ள மரங்களுக்கு வழமைபோன்று  தண்ணீர் ஊற்றுவதற்காக வாளியை எடுத்து கிணற்றினுள் விட்ட போது குழந்தையொன்று கிணற்றினுள் மிதந்து கிடப்பதை கண்டு வாளியை தூக்கி எறிந்து அழுது கொண்டு சப்தமிட்டு அயலவர்களை அழைத்தேன் என அழுது கொண்டு தெரிவித்தார்.

இக்கிணற்றுக்குரிய வீட்டில் வசித்து வந்த எனது மகள் வேறு ஒரு இடத்தில் வசித்து வருவதால் அவ்வீட்டில் யாரும் வசிப்பதில்லை என்றும் ஆரிபா கூறினார்.

குழந்தையை கிணற்றினுள் உயிரிழந்து கிடப்பதை கண்டதையடுத்து எனது சகோதரியை தேடினோம் பின்னர் இவர் அவரின் கணவரின் உம்மாவின்(மாமியாவின்) வீட்டில் இருப்பதாக அறிந்து அங்கிருந்து அவரை அழைத்து வந்தார்கள் பின்னர் அவரை பொலிஸார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.

குழந்தையை எனது சகோதரி கிணற்றினுள் வீசிவிட்டே மாமியாவின் வீட்டுக்கு சென்றுள்ளதை பின்னர்தான் அறிந்து கொண்டேன்.

குழந்தையை நினைக்கும் போதே எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது.

எனது நெஞ்சு வெடிக்கப்பார்க்கின்றது. அந்தக்குழந்தையின் முகமே எனது கண்களுக்கு வருகின்றது என அழுது கொண்டு அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக குழந்தையின் தாயான ஜெமீலாவின் தாய் சீனி உம்மா தெரிவிக்கையில் எனது மகளுக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையினாலேயே இவர் குழந்தையை கிணற்றினுள் வீசி விட்டு சென்றிருக்கின்றார்.

அவவுக்கும் கணவருக்குமிடையில் தொடர்ந்து பிரச்சினை இருந்ததை நான் நன்கு அறிவேன். அவவின்  கணவருக்கு வேறு ஒரு பெண்னுடன் தொடர்பு ஏற்பட்டதாலேயே இந்தளவு பிரச்சினை ஏற்பட்டது.

நாங்கள் ஏழைகள் எனக்கு ஐந்து பெண் பிள்ளைகள் அதில்  இவவுமொன்று. இவதான் வெளிநாடு சென்று அவர்கள் குடியிருந்த வீட்டை கட்டினார்.

அடிக்கடி இவ்வீட்டையும் விற்றுத்தருமாறு கணவர் கூறுவதாக என்னிடம் கூறுவார் என தெரிவித்தார்.

குழந்தையின் தாயான ஜெமீலா மற்றும் அவரது கணவரிடமும் பேட்டிகான நாம் செய்த  முயற்சி பலனளிக்கவில்லை.

தற்போது குழந்தையின் தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை நடாத்திவருகின்றனர்.

8 Responses to “நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்”

  1. Abdul Rahman said

    குற்றம் செய்வதைவிடவும் குற்றத்துக்கு காரணமானவர், துணை நிற்பவர், அங்கீகாரம் கொடுப்பவர் எல்லோரும் குற்றமிழைத்தவர்களே. எத்தனையோ, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சமூகத்தில் போராடி வாழ்க்கை நடத்துகின்றனர். எந்த காரணம் சொன்னாலும் தன்னையே அறிந்துகொள்ளாத அந்த பிஞ்சு குழந்தையின் மரணம், அது குற்றத்திலும் குற்றம்தான். இந்த உலகத்தில் யாரையும் குறைகலற்று இறைவன் படைக்கவில்லை எல்லோரிடத்திலும் குறைகள் உண்டு அதை ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து பொருந்தி வாழவேண்டும். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் உங்கள் மனைவியிடத்தில் பிடிக்காத ஒரு விடயம் இருக்கும் ஆனால் பிடித்த விடயம் பல இருக்கும் அதை பொருந்தி வாழவேண்டும். நம் ஊரையும் ஊர் மக்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!
    Abdul Rahman
    Doha Qatar

  2. sri boss said

    நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் உங்கள் மனைவியிடத்தில் பிடிக்காத ஒரு விடயம் இருக்கும் ஆனால் பிடித்த விடயம் பல இருக்கும் அதை பொருந்தி வாழவேண்டும்.

  3. Inshaaf said

    Dear -Abdul Rahman
    உங்களது கருத்து மிகவும் வரவேற்கத் தக்கது

  4. riza said

    Dear kky.info
    I’m very exciting to read kky.info regularly. Thanks for the web community who are doing very good job Mashallah. I would like to put a request to your kind consideration that can you publish at least one Quranic verse on your header page in Tamil everyday. It will be useful to whole of our humanity. may Allah give you the guidance to become more success in future.
    This is only my personal Opinion, I’m expecting your reply whatever you wish.
    Thanks for KWC.

  5. jas said

    imran’s response to what they?

  6. Aliyar said

    பாத்திங்காளா மக்காள் சங்கதி எங்கயிரிக்கென்டு…… 10 மாசம் சுமந்து கஷ்டப்பட்டு ஒரு பள்ளைய பெத்த சுய நினைவுள்ள ஒரு தாய் இப்படியொரு காரியத்த ஆயிசுக்கும் செய்ய மாட்டா மக்காள்… இந்த செய்தி கிடைச்சதில இருந்து என்ட மனசு சொல்லிச்சு.. உள்ளுக்குள்ள என்ன வோ நடந்திருக்கென்டு…..

    மக்காள்… அண்மையில கலிபோர்னியா மாநிலத்துல இதே மாதிரி சம்பவம் ஒன்று நடந்திரிக்கி…. ஒரு குடும்பம். அப்பா அம்மா 3 புள்ளைக… 3ம் ஆம்புளப் புள்ளைக… 2வது புள்ளைக்கப்பபுறம் தாய் கர்ப்பமாயிருந்தா.. கொஞ்ச நாள்ள அபோசன் என்டு வெளியால கத வந்திச்சாம்.. அதுக்கு புறவு 2 ஆண் புள்ளைக…

    கத என்னான்னா 2வது பொற்நத புள்ளைய அப்பாக்காரன் அன்டர்கிரவுன்டுல மறச்சு வச்சி பாலியல் கொடுடுமைகள் செஞ்சு வந்தரிக்காரு…. அம்மாட கண்ணு முன்னாடியே… ஆனா அம்மாக்கு இது தெரியும் ஆனா.. 100 வீதம் அவவுக்கு சுய நினைவு இல்ல… என்னா ரென்டு பெருக்கும் இடையில கஜால்…

    இவக கனவன் மனைவிகுள்ள அடிக்கடி சன்ட நடந்து ஒரு நாள் தன்ட ரெண்டு புள்ளைகளைளும் கத்தியால குத்தி கொல செங்சிட்டா இந்த தாய். மக்காள்….

    கொல செஞ்ச பொறகு பொலிசு புடிச்சு தாய்கு ட்ரிட்மெடன்டு கொடுத்தப்புறம் தன்ட பிள்ளைகள தேட ஆரம்பிச்சா அந்த தாய்… அப்புறம் தான் பொலிசக்கு தெரிஞ்சுச்சு கணவன்ட கொடுமையால மனைவி புத்தி பேதலிச்சு அடிக்கடி தன்ட புள்ளைகள கொல செய்ய முயற்சிக்கறதும் புள்ளைகள் தப்புறதம்…. கடைசியா தூங்கக்குளள் கத்தியால கொல செய்யப்பட்டிருக்கு அந்த பிஞ்சு பாலகன்க… மக்காள்….

    துக்கொல்லாம் யாரு காரணயம் மக்காள்… அந்த மனுசன் தானே?? இந்த காத்தான்குடி சம்பவமும் இப்போ அத மாதிரி தானே கிடக்குது… இதுக்கொல்லாம் சரியான பாடம் கற்பிக்கனும் மக்காள்… ஊடு கெட்டு சன்ட புடிச்சாரமே.. எல்லாம் இந்த பணத்தாச மக்காள்…

  7. Atheef said

    I believe hereafter the ruling & responsible public organizations & each individual will take in part for reducing social issues. Think problem oriented way rather person oriented. Just think this sentence (நாங்கள் ஏழைகள் எனக்கு ஐந்து பெண் பிள்ளைகள் அதில் இவவுமொன்று. இவதான் வெளிநாடு சென்று அவர்கள் குடியிருந்த வீட்டை கட்டினார்.

    அடிக்கடி இவ்வீட்டையும் விற்றுத்தருமாறு கணவர் கூறுவதாக என்னிடம் கூறுவார் என தெரிவித்தார்.) What is this claiming says to us?. Severe depression or any kind of mental ill health tend to do such restricted matters. we need a proper systematic approach to assist assistance to the people & also controlling & preventing offences. Domestic violence & women related violence are registered in Batticaloa hospital & police approximately 600-700 in our district as well as the Eastern province is the high child abuse issues recorded area in the country. In our hometown due to the superior power of male, dowry related violence, no primary guidance activities for public, lack of systematic approach in the responsible social agents & corruption in each responsible sectors & improper understanding & working plan for working with/for people cause to deviant behaviors of public & anomic situation of the society

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s