காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

தாயினால் கிணற்றில் வீசப்பட்டு ஆறு மாதக் குழந்தை பரிதாப மரணம்: ஹைறாத் பகுதியில் சம்பவம்

Posted by Kattankudi Web Community (KWC) on 24/07/2011

- அபூ றப்தான் / M. A. C. M. ஜெலீஸ் -

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி ஆறாம் குறிச்சியில் தாயொருவர் தனது ஆறுமாதக்குழந்தையை கிணற்றினுள் வீசி குழந்தையை கொலை செய்த சம்பவமொன்று இன்று (24.7.2011) காலை இடம்பெற்றுள்ளது.

ஹைறாத் நகரிலுள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாலமுனைக்கிராமத்தில் வசித்து வரும் இத்தாய் தனது குடும்பத்தகராறு காரணமாக காத்தான்குடியிலுள்ள அவரது சகோதரியின் வீட்டுக்கு வந்து இன்று காலை சகோதரியின் வீட்டு கிணற்றினுள் தனது குழந்தை வீசியுள்ளார். இதையடுத்து குழந்தை கிணற்றினுள் உயிரிழந்துள்ளது.

இச்சம்பவத்தை கேள்வியுற்ற இந்த வீட்டு அயலவர்கள் காத்தான்குடி பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிசார் ஸ்த்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்தள்ளனர்.

பாத்திமா ஹனா எனும் ஆறுமாதக்குழந்தையே இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய் ஜெமீலா என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்குழந்தையின் தந்தை வெளியூர் ஒன்றில் தொழில் செய்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

44 Responses to “தாயினால் கிணற்றில் வீசப்பட்டு ஆறு மாதக் குழந்தை பரிதாப மரணம்: ஹைறாத் பகுதியில் சம்பவம்”

  1. Ahnaf said

    எங்கே சென்று கொண்டிருக்கின்றது எமது ஊர் இவ்வாறான செயல்களின் காரணமாகவே அல்லாஹ்வின் கோபப்பார்வை எம்பக்கம் திரும்பியுள்ளது என்பதை நாம் மறந்து விடக்கூடாது,……

  2. anilar said

    Allahu Akbar Ennaithu Nichayamaha namathoorukku Allahvin Koopaaparvai yundu

  3. Mazaa said

    கருணையே உருவான தாயினை – கோபம் மிகைக்கலாமா..?
    உங்கள் பிரச்சனை நடுவில் – இந்தப் பச்சிளம் குழந்தை என்ன செய்தது..?

  4. Alf said

    enna koduma ………….

  5. nusky said

    பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்றவாசகம் மாறி பெத்தமனம் கல்லு பிள்ளை மனம் பித்து என்று மாறிவிட்டது இந்தக்காலம் யா அல்லாஹ் இக் குழந்நைக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை கொடுப்பாயாக

  6. Mohamed Sibran said

    Jahiliyyakkalin thalaimurai velivanthu vittathu. Innalillahi va inna ilaahi rajioon.

  7. Mohamed Sibran said

    Innalillahi va inna ilaihi rajioon.

  8. Abu Aayisha said

    என்னவொரு வேதனைக்குரிய சம்பவம்,எவ்வாறு அந்த தாய்க்கு தான் பெற்ற அந்த குழந்தை செல்வத்தை கிணற்றில் வீச மனம் வந்தது? எத்தனையோபேர் குழந்தை செல்வம் இல்லாமல் ஏங்குகிறார்கள்,தன்னால் வளர்க்க முடியவில்லையாயின் நல் உள்ளம் கொண்ட தாய்மார்களிடம் கொடுத்திருக்கலாமல்லவா?எவ்வளவு வேதனையான செயல்.இப்படியெல்லாம் முஸ்லிம் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கையில் மிக வேதனையாக உள்ளது.யா அல்லாஹ் இவ்வாறான செயல்களில் இருந்து மனிதர்களை காப்பாற்றுவாயாக.

  9. mohammed uk said

    heart broking news. please kky info remove the pictture

  10. sri boss said

    அல்லாஹு அக்பர்! என் மனம் எரிகிறது இப்படி ஒரு செயலை கட்பனை கூட செய்ய முடியவில்லையே! எப்படி அந்த நேரம் அவளின் மனம் இயங்குகிறது யா அல்லாஹ்! எங்கள் அனைவருக்கும் ஈமானை பலப்படுத்தி கொடு

  11. mafas said

    எங்கே சென்று கொண்டிருக்கின்றது எமது ஊர் இவ்வாறான செயல்களின் காரணமாகவே அல்லாஹ்வின் கோபப்பார்வை எம்பக்கம் திரும்பியுள்ளது என்பதை நாம் மறந்து விடக்கூடாது,……
    ஊரில் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டால் .. பெண்கள் மிக மோசமாக நடந்து வருகின்றனர் இதை எவ்வாறு திருத்த முடியும் என்பதை நாம் சிந்திக்கும் அதே வேளை இவ்வாறான தவறுகள் ஏன் நடக்கிறது என்பதையும் சிந்திக்க வேண்டும் இவை அனைத்துக்கும் காரணம் எமது பெண்களிடம் மார்க்க அறிவு குறைந்தமையாகும் ,இதற்கு என்ன தீர்வு உள்ளது என்பதை சிந்தித்து அதன் படி நடந்தால் மாத்திரமே இவற்றுக்கு தீர்வு காண முடியும் என்பது எனது கருத்து

  12. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
    மிக பெரிய கொடூரமிது உயிர் வலி தரும் சோகமிது!அடக்க முடியாத கடுமாத்திரம் எவ்வளவு பெரிய கை சேதத்தை ஏட்படுத்தி இருக்கிறது!!! அந்த குழந்தைகு நேர்ந்தது போல் எந்த குழந்தைகும் நேராமல் அல்லாஹ்விடம் பிராத்திக்கிறேன்!!! அந்த தாய்க்கி சொந்த குழதையை ஈவிரக்கமற்று கொண்ரொழித்த கொலைகாரி என்ற பழிப்பே வாழ்நாள் முழுக்க கொடுக்க போகும் தண்டனையை விட மிக பெரிய தண்டனை ஏதுமே இல்லை!!!

    தயவு செய்து எல்லோருமே கட்டுபடுத்த முடியாத கோபம்,தீராத ஆத்திரம்,அடங்காத பழி ஆவேசம் போன்ற செய்தானிய குணங்களை ஈமானிய உணர்வுகளை கொண்டு இல்லாமல் செய்ய இந்த சம்பவத்தை ஒரு பாடமாக கொள்வோம்!!! ஏனெனில் எல்லோருக்குமே இப்படி உணர்சிவசபட்டு கட்டு படுத்த முடியாத ஆத்திரம்,கோபம்,ஆவேசம் ஏட்படலாம் அந்த நேரத்தில் செய்யும் காரியம் வாழ் நாள் முழுக்க அழவைக்காமல் இருக்க எல்லா உணர்வுகளையும் அல்லாஹ்வின் தூதரின் வழியில் கட்டு படுத்த ஒவ்வொருத்தரும் தங்கள் மீது உழைப்பது கடமை

  13. Aliyar said

    ஆண்டவா….. என்ன மனுச ஜென்மம் இவள்..?? என்ன தான் பிரச்சன இருந்தாலும் இந்த அருமயான படப்ப, பச்சிளம் புள்ளய தண்ணிக்குள்ள போட்டு கொன்னுட்டு அவ மட்டும் நிம்மதியா இருப்பாவா??

    இறுதி நாளன்டு ஆண்டவன் பெத்தவங்கள நரகத்துக்கு அனுப்பக்குள்ள சின்னப்புள்ளயல் உடாம அடம்புடிக்குமாம்… ஆண்டவன் அந்தப் புள்ளயல்ல வச்ச அன்பின் காரனத்தால இவகள சொரக்கத்துக்கு அனுப்புவானாம்…..

    ஆனா இந்த மாதிரி படுபாதகச் செயலச்செஞ்ச தாய்.. சீ தாய் என்டு சொல்ல ஏலாது… இவள மாதிரி ஆக்களுக்கு அந்த புள்ள வந்து இப்புடி கெஞ்சும் என்டு நினைக்கீகளா.?

    வக்கிரபுத்தியும் கடுத்த மனசும் கொண்ட இவகள மாதிரி ஆக்கள ஆண்டவன் தான் நேர்வழிக்கு கொண்டுவரனும்…..

  14. SAALOOM said

    Allahu Akbar,inna liilahi vainna ilahi rajioon.Marumai naal vehu thoorathil illai…….

  15. anilar said

    Dear Modearater Plz remove the picture and NEWS

    PLZ PLZ

  16. mohamed said

    dear, kattankudi.info brothers, I humbly request, please remove the pic of fathima hana..

  17. Azeem said

    INNALILLAHI VA INNA ILAIHI RAJIOON.

  18. abdulwahhab said

    அல்லாஹு அக்பர் என்னவொரு வேதனைக்குரிய சம்பவம்

  19. fazna06 said

    makkal padangalai paarthu kolai seyyavum palahi vittanga

  20. masfi said

    allah pachchilangulanthai yann paawan saithu irikkum

  21. jabeer said

    அல்லாஹு அக்பர்!…இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

  22. rIzWaN said

    innalillahi vainna ilaihi raajioon

  23. fajeeth said

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இக் குழந்நைக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை கொடுப்பாயாக………. இப்படியான ஈவிரக்கமற்ற செயலை செய்யும் முஸ்லிம் பெண்கள் ஆண்களுக்கு முஸ்லிம் ஊர் என்பதனாள் இஸ்லாமிய சட்ட தண்டனையை வழங்க வேண்டுமெனவும். கலாசார சீர்கேடுகள் நடைபெறாமல் குர்ஆண் மற்றும் சுன்னாஹ் அடிப்படையிலான நல்லதோர் சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் இவ்விடயத்தினை சரியான முறையில் கையாள ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும்
    ஒழுக்க ரீதியான ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக. நாம் ஒவ்வொறு முஸ்லிம்களும் பாடுபட வேண்டும் எனவும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம் ஜஸாக்கல்லாஹு ஹைர்

    இவ்வண்ணம்
    MAJIMAULL ISLAMIC SRILANKA

  24. mmsa said

    very sad news may Allah give the Hidayath and the Emaan

  25. Arsath kky said

    Please kky info intha news a fulla thanga eathala intha sampavam nadantha eanru

  26. Ashraf. SAM said

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்…!!!

  27. niyasnuha said

    allhu akbar namathu islamiya samuthayam ankay senro hondirukkirathu,entha thai marumaiel eraivanidem anna marumoli solla pohiraal

  28. jazeema.dubai said

    ya.allah.yam.manasu.rompe.valikkuthu.thange.mudiyala. jazeema.dubai

  29. fn said

    ALHAMTHULILAH YA ALLAH ! MELUM IPPATIYANA SOTHANAYEL IRUNTHU ENGAL OORAI PATHUKAPAYAHA AMEENNNNNN

  30. aasathrlan said

    அல்லாஹு அக்பர்! என் மனம் எரிகிறது இப்படி ஒரு செயலை கட்பனை கூட செய்ய முடியவில்லையே! எப்படி அந்த நேரம் அவளின் மனம் இயங்குகிறது யா அல்லாஹ்! எங்கள் அனைவருக்கும் ஈமானை பலப்படுத்தி கொடு

  31. Abdul Rahman said

    ஏதோ ஒரு துன்ப மிகுதியால் இதை செய்துவிட்ட தாயே இதை விட பெரிய துன்பம் உனக்காய் உள்ளதே இதை ஏன் மறந்தாய். உன் மடியில் அம்மா என்று அழுதபோது ஆனந்தத்தில் சிரித்து மகிழ்ந்தாயே இப்போ கடைசி நிமிடம்கூட அம்மா என்று அழைக்கமுடியதபடி ஜீவன் அனைத்துவிட்டாயே.
    நெஞ்சம் பொறுக்கவில்லையே….. நம் ஊரின் பெருமையை இங்குள்ளவர்களுக்கு எப்படி சொல்லமுடியும் உன் போன்ற பெண்கள் உள்ளவரை..

    Abdul Rahman
    Doha Qatar

  32. MHM NAUFAL said

    BRUTAL MOTHER! SHE SHOULD BE PUNISHED. I HAVE REALLY SHOCKED AND WATER HAS FLOWED FROM MY BOTH EYES AFTER I SAW THIS NEWS ESP PICTURE OF BABY/INFANT IN THE WELL.

    AS FAR AS I AM CONCERN AND IN VIEW OF CURRENT INCIDENTS , OUR SOME WOMEN FAILED TO PREPARE THEMSELVES FOR BETTER FAMILY LIFE WHICH MEANS NO PROPER/ADEQUATE EDUCATION, SPIRITUAL KNOWLEDGE, HOW TO TACKLE THE DOMESTIC/FAMILY CONFLICT,ETC.

    THIS ACT REVEALS MORE FOOLISH /DARKNESS SEEM AMONG OUR WOMEN. WE HAVE TO EVOLVE TO ERADICATE THIS TO BRING THE LIGHT AMID OUR ENTIRE SOCIETY.

    MAKE DUA TO SUPPLICATE PROBLEMS IN OUR SOCIETY FOR BETTER AND PROSPEROUS FUTURE ONLY WITH ALLAH!

  33. SUHAIR Q-TEL said

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இக் குழந்நைக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை கொடுப்பாயாக……….

  34. அல்லாஹு அக்பர் செய்தி பார்த்து இதயம்
    இலட்சம் முறை துடித்தது
    கண்களில் கண்ணீர் கசிந்த்தது

  35. sifana said

    please remove the photo

  36. வேதனைக்குரிய சம்பவம்,

  37. imran said

    அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்புக்குரிய சகோதரர்களே! அன்பு உள்ளங்களே!!
    -07-2011 தீன் வீதியில் ஒரு தாய் தனது 6 மாதக் குழந்தையினை கிணற்றுக்குள் வீசி அக்குழந்தையைக் கொலை செய்ததாக பல இணையத்தள ஊடகங்கள், அச்சு ஊடககங்கள் மற்றும் Facebook, Twitter சமுக இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்ததை தாங்கள் அனைவரும் அறிவோம்.
    உண்மையில் இந்தத் தாய்தான் குழந்தையை கிணற்றுக்குள் வீசி இருக்கின்றார். எனினும் மேற்படி ஊடகங்களின் செய்திகள், உண்மையை மறைத்து விட்டு சக்கையை மாத்திரம் வெளிக்காட்டி இருந்தமையும் அதற்கு வாசகர்களும் நண்பர்களும் கண்மூக்குத் தெரியாமல் கொமண்ட்ஸ் அடித்திருந்தமையும் வேதனையான விடயம்.
    திருமணம் முடித்து கணவன் மனைவியாக வாழ்ந்த இவர்களுக்குக் குழந்தை பிறந்தது. வெளிநாட்டிலிருக்கும் தன் கனவன் போன நாளிலிருந்து தனக்கோ தன் குழந்தைக்கோ செலவுக்கு சரியாக பணம் அனுப்புவது கிடையாது. இக்கனவரின் பிறந்த குடும்பத்தில் தாயுடன் சேர்த்து பல சகோதரிகளும் இருக்கின்றனர். கனவர் வெளிநாடு சென்ற காலத்திலிருந்து தனக்கும் குழந்தைக்கும் சரியாக செலவுக்குப் பணம் அனுப்பாததால் தன் மாமியாருடன் சென்று இவ்விடயமாக் கூறி வந்துள்ளார். எனினும் தாயின் சொல்லைத் தட்டாத இந்த கனவன் தாயையும் தன் சகோதரிகளையும் கவனிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வந்துள்ளார். பல முறை சென்று மாமியாருடன் வினயமாக் கேட்டும் பலன் கிடைக்கவில்லையாம். வெளிநாட்டிலிருக்கும் கனவன் பல மாதங்களாக மனைவியுடன் தொடர்பற்று இருந்து வருகின்றாராம். நியாயம் பெறச் சென்றால் பிரச்சினையில் முடியுமாம்!
    இதே போன்றுதான் நேற்றும்; இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கின்றது. காலையில் பலத்த வாக்குவாதங்களின் பின்னர் குழந்தையை வீசிய இத்தாய் மன நிலை பாதிக்கப்பட்டவள்போன்று வீதியால் அழுது புலம்பி, தனக்குத்தானே கதைத்து தன் வீட்டுக்கு வந்திருக்கின்றார். குழந்தையை கிணற்றுக்குள் வீசி விட்டு அருகில் இருந்து அழுதிருக்கன்றார். அயல் வீட்டுக்காரி அழுகைச் சத்தத்தைக் கேட்டு வந்து, ஏன் அழுகிறாய் என கேட்டிருக்கின்றார். மன நிலை பாதித்தவள் போலிருந்த அந்தப் பெண் குழந்தை,பிள்ளை என வாய்தடுமாரி பேசாமல் அழுதிருக்கிறாள். பின்னர் கிணற்றுக்குள் பார்த்ததும் பிள்ளை மரணித்திருந்தது.
    நடந்த சம்பவம் இதுதான். இவள் ஒரு கொலை செய்தது போன்று ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன. எனினும் வாசகர்கள் தெளிவாக சிந்தித்து நடந்ததை விசாரித்து முடிவெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். உண்மையில் இத்தாய் குழந்தையைக் கொள்ளவேண்டும் என தூக்கிப் போடவில்லை. அவளது மனம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அவள் மாமியாலும் கனவனாலும் மன அழுத்தங்களுக்கு ஆளாக்கப் பட்டிருக்கின்றாள் என்ற பரிதாபகரமான செய்தியைக் கூறி விடைபெறுகின்றோம்.
    அல்லாஹ் உண்மையை அறிந்தவன். அவனே போதுமானவன்.

    • Thank you Imran.

      உண்மையில் நீங்கள் சொல்லித் தான் கணவன் மனைவி இருவருக்கும் இடையே நடந்த பிரச்சனை என்ன என்பது எங்களுக்கு தெரிய வருகிறது. மிக்க நன்றி. இல்லாவிடில் அபாண்டம் இழைத்த கூட்டத்தாராக நானும் மாறியிருப்பேன்.

      “ஏதோ இருவருக்குமிடையே பிரச்சனையாம். அந்த ஆத்திரத்தில் தாய் தனது குழந்தையை கிணற்றில் தூக்கி போட்டு விட்டாளாம்” என்று தான் ஊர் முழுக்க கதை பரவியது. ஆனால் இதன் பின்னும் ஒரு மாமியார் கொடுமை உள்ளது என்பது இப்போது தான் புலப்படுகிறது.

    • இந்த செய்தி கேள்வி பட்டதுமே ஏதோ மிக பெரிய சோகம் அந்த தாய்க்கி பின் புலமாய் இருந்து இருக்கும் என்பதை விளங்க முடிந்தது ஆனால் அதை பற்றிய தெளிவான அறிவில்லாமல் கருத்தெழுத கூடாதென விட்டு விட்டேன்!
      உண்மையை அறிய செய்த இம்ரானுக்கும் அதனை பிரசுறித்த இன்போவிட்கும் நன்றிகள். நாம் எல்லோருமே கருத்தெழுதி விட்டு கால ஓட்டத்தில் இதனை மறந்திடும் நிலமை ஏட்படலாம் ஆனால் அந்த தாய் மடுமே தன் நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் வரை வாழ்நாள் முழுக்க தவியாய் தவிக்க போகிறாள் எண்ணி எண்ணி ஏங்க போகிறாள் அந்ததாயின் வேதனை உயிர் வலி கொடுக்க கூடியது அவள் படும் வேதனை அவளுக்கு மட்டுமே விளங்கும் ! அவை வார்தைகளில் விளங்க படுத்த இயலாதவை! பரிதவிக்கும் அந்த தாய்க்கி திக்கற்ற நிலையில் உதவகூடிய அல்லாஹ்வே உன் கருணையை காட்டு! ஆண்களே உங்கள் வார்தைகளால் பெண்களையும் பெண்களின் வாழ்வையும் அநியாயமாக அழிக்காதீர்கள்

    • muhammed said

      மிக்க நன்றிகள் இம்றான்.அந்த தாய் தன் குழந்தையை வீசியது மனநிலை பாத்தித்த நிலையிலிருப்பினும்.ஆத்திரக்காரனுக்கு புத்தி முட்டும்.என்னும் நோக்கில் சிந்தித்தால் இதைக்கேட்டு ஆவேசத்துடன் கமன்ட் பன்னியிருக்கும் உண்மையறியா சிந்தனையாளர்களை பார்த்தோம்.ஒரு வகையில் கொலை பட்டம் சூட்டிய இவர்களே தப்பு செய்துவிட்டிருக்கின்றார்கள்.அனைத்தும் அல்லாஹ் அறிந்தவன்.தப்பு செய்தவர்கள் எவராயினும் நிச்சயம் தண்டனையுண்டு.

  38. sajiaasaji said

    unmaithan petredutha entha thaum evalavo kastam vanthalum than kulanthaiya kolla mattal unmaiyahave untha pen mana nilai pathikka pattirukkalam

  39. jazeema.dubai said

    thanks.dear.imran.i

  40. fajeeth said

    மன்னிக்கவும் imran எங்களுக்கு கிடைத்த செய்தி காத்தான்குடி ஆறாம் குறிச்சியில் தாயொருவர் தனது ஆறுமாதக்குழந்தையை கிணற்றினுள் வீசி குழந்தையை கொலை செய்ததாகதான் என்னமோ அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன். அண்மைக் காலமாக இக்கட்டுக்கோப்பை சீர்குலைக்கின்ற வகையிலும் நமது சமூகம் சம்பந்தமாக தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்தும் வகையிலும் ஒரு சில தனிநபர்கள், ஒரு சில இளைஞர்கள் மற்றும் குறிப்பிட்ட சில ஊடகங்கள் கூட செயற்படுவதை நாம் அவதானிக்கின்றோம். ஒரு சிலர் விடுகின்ற தவறுகள் ஒட்டுமொத்த சமூகத்தின் ஆரோக்கிய இருப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகிறது என்பதை நாம் மறுக்க முடியாது . இளைஞர்கள் இஸ்லாமிய சட்டத்தை மதிக்காது அதனை கையாள முனைவதும் இன்னும் சிலர் சுய கட்டுப்பாடின்றி செயற்பட முனைவதும் பாரிய சிக்கல்களை நமக்கும் நமது அன்புச் சகோதர சகோதரிகளுக்கும் ஏற்படுத்தி விடுகின்றது. இவ்விடயத்தில் கூடிய கரிசனை எடுக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம் .
    அல்லாஹ்வை அஞ்சுங்கள்அவன் கடுமையாகதண்டிப்பவன் ஜஸாக்கல்லாஹு ஹைர்

    இவ்வண்ணம்

    MAJIMAULL ISLAMIC SRILANKA

  41. ismailbuhari said

    anaiwaraiyum nal walippaduthe allah pothumanawan…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s