காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

மடுவம் தொடர்பிலான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தீர்வுத்திட்டம் (2nd Update: Project Proposal)

Posted by Kattankudi Web Community on 16/07/2011

-அபூ றப்தான்-

செய்தியின் இறுதியில் திட்ட வரைபு பதிவேற்றப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகர சபை பிரிவில் நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாக காணப்பட்டுவரும் மடுவம் தொடர்பிலான தீர்வுத்திட்டமொன்றினை காத்தான்குடியிலுள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் முன்வைத்துள்ளது.

இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும் வகையில் விஞ்ஞான பூர்வமாக இவர்களால் தயாரிக்கப்பட்டுள்ள திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளித்து இந்த வரைவின் சுருக்கப்பிரதிகளை காத்தான்குடியிலுள்ள பொது நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிகளிடம் கையளிக்கும்

நிகழ்வும் இவர்களின் மக்கள் சந்திப்பும் (15.7.2011) வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லா இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான், ஏ.ஜி.எம்.ஹாறூன்,பொறியியலாளர் பளுள்ஹக், காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துர் காதர் பலாஹி, அதன் செயலாளர் மௌலவி ஜிப்ரி மதனீ, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் அன்சார் நழீமி, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை அமீர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி, அதன் சூறா சபை உறுப்பினர் ஏ.எல்.எம். சபீல் நழீமி. காத்தான்குடி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் எஸ்.எம்.எம்.காசீம்  உட்பட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது முக்கியஸ்த்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இத்திட்ட வரைபின் பிரதிகளும் வழங்கப்பட்டது.

 

This slideshow requires JavaScript.

இந்நிகழ்வில் ஆற்றப்பட்ட உரைகளின் முக்கிய விடயங்கள் வாசகர்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளன:

காத்தான்குடி நகர சபையை ஊழலற்ற நேர்மையான நகர சபையாக கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அப்துர் றஊப் மௌலவி தரப்பினருக்கும்  உண்டு இவற்றை நேர்மையாக செய்ய முன்வருமாறு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் றஹ்மான் தெரிவித்தார்.

காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் வெள்ளிக்கிழமை மாலை நடாத்தப்பட்ட காத்தான்குடியில் காணப்படும் மடுவம் தொடர்பான பிரச்சினைக்குரிய திட்டவரைபினை சமர்ப்பித்து அதை கையளிக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அப்துர் றஹ்மான் காத்தான்குடி நகர சபையை நேர்மையாக செய்யும் பொறுப்பு அப்துர் றஊப் மௌலவி தரப்புக்கும் இருக்கின்றது.

கடந்த நகர சபை தேர்தலில் தந்திரமாக அப்துர் றஊப் மௌலவி தரப்பினர் ஏமாற்றப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் அதை நன்கு உணர்வார்கள்.

காத்தான்குடி நகரசபையை ஊழலற்ற நேர்மையான நகர சபையாக செய்வதற்கு முன்வருமாறு நான் இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு  வேண்டுகோள் விடுக்கின்றேன்.

அத்தோடு தங்களது இந்த நவீன மடுவத்திட்டத்தை நகரசபை தவிசாளர் புறக்கணித்து வருவதாகவும் இது தொடர்பாக ஏற்கனவே திட்டமிடப்பட்ட தொழிநுட்பக் குழுக்கூட்டத்தை  கூட்டாமல் பொய்யான காரணங்களை சொல்லி இழுத்தடிப்பு செய்து வருவதாகவும் குற்றம் சாட்டிய அப்துர் றஹ்மான் இந்த திட்டத்தை அமுல்படுத்துமாறு காத்தான்குடியிலுள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் காத்தான்குடி நகரசபை மீது அழுத்தம் கொடுக்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் யாருக்கோ  கிடைக்கவேண்டிய தவிசாளர் பதவியை தவிசாளர் அஸ்பர் தந்திரமாக சுவீகரித்ததாகவும், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விமானநிலைய தலைவர் பதவியில் இருந்தபோது செய்த ஊழல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசானாயக்கவினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் ஹிஸ்புல்லாஹ் இன்னும் மௌனமாக இருப்பது சந்தேகத்தை தோற்றுவிப்பதாகவும் தனது உரையில் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிர்தௌஸ் நளீமி, நகரசபை ஆளும்தரப்பு மீதான குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசியதோடு இந்த நகரத்தை ஆளுவதற்கான பொறுப்பை பொதுமக்கள் பொருத்தமற்ற கைகளில் வழங்கி இருப்பது குறித்து தான் கவலை அடைவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் உரையாற்றிய அவர், தங்கள் மீது சேறு பூசும் நோக்கில் செயற்பட்டு பிழையான கண்ணோட்டங்களை வெளிநாட்டிலுள்ள சகோதரர்களுக்கு வழங்குவதாக   ஒரு சில ஊடகங்களை பெயர் குறிப்பிடாது விமர்சித்ததோடு தங்களது நல்ல விடயங்களை உலகுக்கு சொல்கின்றவர்களாக இந்த ஊடகங்கள் மாறவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார் . இந்த ஊரை நிர்வகிப்பதற்கு பொருத்தமானனவர்கள் தாங்கள்தான் என்பதையும்  சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வின் கருப்பொருளான நவீன மடுவத்தின் திட்டவரைபு சம்பந்தமான தொழிநுட்ப விடயங்களை பழுலுள் ஹக் மக்களுக்கு விளக்கினார்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் உரையாற்றிய நகரசபை உறுப்பினர் ஏ ஜி எம். ஹாரூன் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் செயற்பாடுகளை விபரித்ததோடு, ஆளும் தரப்பு மீதான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார் .

வாசகர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க நேற்று சமர்ப்பிக்கப்பட்ட திட்ட வரைபு பதிவேற்றப்படுகிறது. இது ஆங்கில மொழியில் அமைந்துள்ளது. மொழிபெயர்ப்பு விரைவில் வெளியிடப்படும் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

50 Responses to “மடுவம் தொடர்பிலான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தீர்வுத்திட்டம் (2nd Update: Project Proposal)”

  1. good

  2. Shukry said

    Well done…

  3. பிஷ்ருல் ஹனான் said

    கலந்துகொண்ட மக்களையும் ஒரு கிளிக் பண்ணிருக்கலாம்.

  4. m.fiham said

    good idea

  5. Anees said

    can anyone share a copy of slaughterhouse proposal with us?

    • அஸ்ஸலாமு அலைக்கும்
      மாடறுக்கும் மடுவம் தொடர்பான PMGGஇன் திட்ட வரைபை முற்றாக வாசகர்களுக்கு வழங்குவதற்கான நவடிக்கையில் நாம் ஏற்கனவே ஈடுபட்டுள்ளோம்.விரைவில் வாசகர்கள் அதனை காணக்கூடியதாக இருக்கும்

      நன்றி
      காத்தான்குடி இணையச் சமூகம்

  6. muna said

    “மடுவத் தீர்வு திட்டம் மிக முக்கியமனதும் காலத்தின் தேவையுமாகும்.இதற்காக கட்சி பேதமின்றி ஒன்றுபடுதல் அனைவரினதும் கடமை”

  7. திட்டம் தேவையானது ஆனால் அது முழுமையான பிரயோசனத்தை தரகூடியதாக எளிமையானதாகவும் இருக்க வேண்டும்!!! திட்டத்தை வரைந்தவர்கள் யாவருமே தமிழ் மொழியில் கல்வி பயின்றவர்களே அப்படி இருக்க இந்த திட்டம் ஆங்கிலத்தில் வரையபட்டிருப்பது வேறு எங்கோ வரைய பட்ட திட்டத்தின் நகளோ என்ற சந்தேகத்தை நியாயமாக எழுப்ப வல்லது எனவே இப்படியான விடயங்கள் பொது மக்கள் முன் அறிமுகபடுத்தபடும் போது புறியும் மொழியில் அறிமுகபடுத்துவதே திட்டத்துக்கான ஆதரவை தேடி தரும்!!! தமிழில் ஆவனம் முழுமையாக தயாரிக்க படமுதல் பொது மக்களின் முன் எடுத்து இயம்புவதட்கான அவசரம் யாதோ??? நவீனம் என்றூ போய் அறபு நாடுகளை போல் அல்லாஹ் அக்பர் சொல்லி எல்லா உயிர்களையும் ஒறே தக்பீரில் அறுக்கமல் இருந்தால் சரி

    • Muzzammil said

      Mr; Hiras ஆங்கிலத்திலாவது ஒரு திட்டம் வந்திருக்கே
      அதை நினைந்து சந்தோசப்படுங்கள்

    • sahabdeen said

      சகோதரர் ஹிராஸ், இந்த ப்ரொஜக்ட் எதற்காக, யாருக்காக தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் புரிந்து கொண்டால் நீங்கள் தமிழில் தயாரிக்கவில்லையே என்று சொல்லமாட்டீர்கள். இது ஒரு தொழிநுட்ப அறிக்கை. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பி நிதியைக் கோருவதற்காக தயாரிக்கப்பட்டிருக்கிறதே தவிர ஊருக்குள் பொது மக்களிடம் கொடுத்து ஸகாத் ஸதகா நிதி திரட்டுவதற்கு அல்ல. இருந்தாலும் அதனை தமிழில் மொழிபெயர்த்து வழங்குவோம் என்றும் அவர்கள் சொல்லியிருப்பதை நீங்கள் கவனிக்கவில்லையா?

      அத்துடன் எங்காவது பிரதிபண்ணியிருப்பார்களோ என்ற சந்தேகமும் உங்களுக்கு வந்திருக்கிறது. இவ்வாறான தொழில்நுட்ப விடயங்களை பல்வேறு முன்மாதிரிகளிலிருந்துதான் தயாரிப்பது வழக்கம். காத்தான்குடிக்காக மாத்திரம் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கலாமா என்ன? புரிந்து கொண்டால் சரி.

    • fahim said

      Mr Hiraz இதில் வரும் Technical Terms எனும் தொழில் நுட்ப சொல் தொடர் தமிழ் சொல் தொடர்களை தேடப்போனால் கிடைக்கவும் கஷ்டம் அதை பயன் படுத்தினால் உங்களுக்கு மட்டும் அல்ல ஒருவருக்கும் விளங்கவும் மாட்டாது.இதை குறைகளஹா பார்க்காமல் திட்டத்தின் நன்மை பற்றி நீங்கள் உணர்தல் போதும்,இது பற்றிய தெளிவான தமிழ் விளக்கம் வெள்ளிக்கிழமை சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்டது .

  8. IMANA_KKY said

    பேசிப் பேசியே காலத்த கடத்தாம மடுவத்த கட்டி துறக்கிற வழியப்பாருங்கவா. கா-குடில மாட்டு இறைச்சி இல்லேன்னா ஊரே நாறிப் போயிடும். தவிசாளர் அவர்களே கொஞ்சம் அனுசரித்து போங்களேன் அவங்கிட பிளேன் என்டாலும் நாமதானே து…… வைக்கிற!

    • Raheem - KKY said

      IMANA_KKY: கா-குடில மாட்டு இறைச்சி இல்லேன்னா ஊரே நாறிப் போயிடும்.

      இது உங்களுக்கும் சேர்த்துத’தானே..Mr.IMANA_KKY ? நீங்க சரியாச் சொல்றயாயிருந்தா.. எங்களுக்கு இறச்சியில்லாட்டி நாங்க நாறிடுவோம் என்டு சொல்லியிருக்கனும்..

      இல்லாட்டி இப்படி அருவருப்பான உங்களுக்கு மட்டுமே சகஜமான வார்த்தைகளையெல்லாம் இந்த ஜனரஞ்சக மீடியாக்களில் நீங்கள் பயன்படுத்தக்கூடாது….

  9. Abdullah said

    6000,,7000 வாக்கு எடுத்த என்று சொன்னாக. . கள்ள வாக்கு அளிப்பது ஹராம் என்று சொன்னாக.. வாக்களித்த ஆக்கள் எங்கடாப்பா

    • காத்தான்குடியான் said

      வந்து பாக்கல்லையா….
      இன்று பெண்கள் படைய்ய…

  10. hifaz said

    hiraz yannathan sollawarugirar ivarai ponra thevai illatha vimar sanagkalai pirasurithu ungal….. ……. kollatheerkal

  11. mmsa said

    Mr. Hiraz

    why are you worried about the language, what we need is slaughter house, it is very important to our home town, if you can’t support for the good deeds please keep quite and watch what is going on or please come forward and start the job please don’t discourage any one, give your opinion in good manner.

    Mr. Abdullah please try to learn how to comment politely in acceptable way

    • why I want to follow your advice????

      • mmsa said

        yes you don’t need to follow any ones advise in your own life, but this is public matter and very important problem of our home town, this matter is taken up by courts and verdict also given, so when you advise it should not affect the heart of the people who come forward to do some things, either you do it or let others to do it. don’t act like animal sleeps on the straw it is not eating or not allowing to eat others too.

    • Uneducated People said

      AA Bro. mmsa,

      What is the fault on Bro. Hiraz? He pointed out correctly.. Ok tell me what is the purpose of Slaughtering House Proposal publishing to the people??? The proposal has to be read, clarified and understands by kattankudy people. If the people don’t understand the language, how are they going to get it??? It’s useless. Even majority of ………. members they won’t understand English language. They have to convey the message in people easily understanding language. Don’t think that all the people are educated in English like ………… …………… could take another election to proof they are good in English language, but not this occasion.

  12. AL.முகம்மது said

    தேர்தல் காலங்களில் றஊப் மௌலவி தரப்புக்கு எதிராக விமர்சித்தவர்கள்,அவர்கள் தேர்தலில் வெல்லவே கூடாது என்று மேடை மேடையாக நின்று முழங்கியவர்கள், இன்று றஊப் மௌலவி தரப்பை நோக்கி நேர்மையாக நகரசபையை கொண்டு செல்ல உதவிக்கரம் கேட்கிறார்கள்.
    இதுதான் உங்களது கொள்கையா…?
    இதுதான் நாகரிக அரசியலா ….?
    இதுதான் நீங்கள் சொன்ன தர்மமா …?

    இதைத்தான் “அமெரிக்க பாணி” என்று சொல்வதோ,,,,,,அவர்களுக்கு தேவைப்பட்டால் நல்லவர்கள் என்று சொல்வார்கள் ,தேவை இல்லை என்றால் எதிர்த்து நிட்பார்கள்.
    காத்தான்குடி இன்போ விற்கு ஏதோ எல்லாம் சொன்னவர்கள் ,மொட்டை ஊடகம் என்று சொன்னவர்கள் ,அதன் அங்கத்தவர்களுக்கு அரசியல் சாயம் பூசியவர்கள் ,இப்போது என்ன சொல்ல போகிறார்கள்,,,,எதையாவது பேச முன்னர் சற்று யோசித்து கதைக்க பழகுங்கள்.தான் சொல்வது மட்டும் சரி என்ற மமதை வந்துவிட்டால் ,அப்புறம் நல்லது கூட கெட்டதாகத்தான் தெரியும்.
    ஊரில் உள்ள எல்லோரையும் மதிக்க பழகுங்கள் ,அப்புறம் நாகரீகம் தானாக பிறக்கும்.

  13. Ooraan said

    How about the forecasted cost and budget breakdown?

  14. Nirfan said

    Any report must have a cost benefit analysis. so where is that? how about the total cost? Budget must be the vital part. so this report is incomplete. Non practicing Eng Rahman and Haq are not capable to do the cost information. so please take time and consult other people and reproduce the report to the public.

    • Rifdy said

      வைக்கோல்கட்டில் ஏதோ தூங்கிக்கொண்டு தான் உண்ணுவதுமில்லை அடுத்தவைகளை உண்ணவிடுவதுமில்லை என்ற கதையாகிவட்டது உங்களின் நிலைப்பாடு. காத்தான்குடியில் மிகப்பிரதான பிரச்சினையாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்ற மடுவப்பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டுவரும்பொருட்டு அறிவுபூர்வமாக சாத்தியமான முயற்சிகளை எந்தத்தரப்பு மேற்கொண்டாலும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டியது காத்தான்குடி மக்கள் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். அதனைவிடுத்து நல்ல முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதுபோல ஏதாவதொரு குறை கூறிக்கொண்டும், அறிவுபூர்வமற்று விமர்சித்துக்கொண்டும் காலம் கடத்துவதில் என்ன சுகத்தை நீங்கள் அனுபவிக்கின்றீர்கள் என்பதுதான் புரியவில்லை. நீங்கள் சமூகத்திற்கு உதவிசெய்யாவிட்டாலும் சமூகத்திற்காக நன்மை பயக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பவர்களை பிழையானவர்களாக மக்களுக்கு சித்தரித்து உபத்திரம் செய்யாதிருங்கள். வெளியிடப்பட்ட காத்தான்குடி மடுவப்பிரச்சினை தொடர்பிலான PMGG இனது ஆய்வறிக்கையை படித்து விளங்கிக்கொண்ட வகையில் அது வெளிநாட்டிலும், எமது நாட்டின் சில ஊர்களிலுமுள்ள மடுவங்களில் காணப்படுகின்ற வசதிகளையும், தற்போது காத்தான்குடியின் மடுவத்தில் காணப்படுகின்ற குறைபாடுகள் என்ன, இக்குறைபாடுகளால் அதனை சூழ்ந்து வாழ்கின்ற மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் என்ன. இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமானால் காத்தான்குடிக்கு ஏற்றவகையில் மடுவத்தை எவ்வாறு அமைக்கவேண்டும், அதற்கான பௌதீக தேவைகள் என்ன என்பவற்றை தெளிவாக விளக்குகின்றது என்பதை அதனை வாசிக்கின்ற எவரும் புரிந்துகொள்ள முடியும். மேலும் இத்திட்டத்தை காத்தான்குடிக்கு ஏற்றவகையில் முழுமையாக அமுல்படுத்தவதற்கு நகரசபை அனுமதியையும் வழங்கி அதற்கான இடவசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.மக்கள் பிரச்சினை இவ்வாறிருக்க, நிர்பானுடைய பிரச்சினை PMGG தனது ஆய்வறிக்கையில் திட்டத்திற்கான தொகை மதிப்பீட்டை வளங்காதாகும். இதனை ஒரு விடயமாகக் கருதி தனிநபர்களை சாடுகின்ற வேலையை மேற்கொண்டிருக்கின்றார். இதிலிருந்த விளங்குகின்றது சமூகப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டங்களை முன்னெடுப்பதில் முண்டியத்துக்கொண்டு முட்டுக்கட்டை போடுபவர்கள் யார் என்று.

      @ Nirfan: You used say in your most of the comments in kattankudi info news that Eng. Abdul Rahman, Eng. Falulul Haq are none practicing Engineers so they are not capable to do Tech. advice, costing etc. etc (According to you only). IT SEEMS THAT YOU ARE A GOOD PRACTICING ENGINEER OR/AND EXPERIENCED CAMPAIGNER IN YOUR OWN FIELD. So, why you cannot participate as an Engineer for Tech. advice & costing or bring some specialized and qualified persons in order to end up this …… slaughterhouse problem. Do not think this slaughterhouse problem is Abdul Rahman’s family and his colleagues’ or PMGG’s problem but this is a long time critical and crucial problem for all people of kattankudy including you If you are a Kattankudy citizen. This is not a time to making unnecessary arguments and silly comments in regard to slaughterhouse problem of kattankudy. This proposal submitted to civil organization and public not only for reading but also to be a sincere advisor and supporter in order make successful of this project Insha Allah. Hope Mr. Nirfan would know what he is doing.

  15. Ooraan said

    This report could be considered as an initiative for the proposed project. The effort deserve some recognition and appreciation for their data gathering and bringing them in a concise format.

    I am very happy that they published this report in a social forum paving way to get constructive critisim and suggestions from different sects of the society to shape up the report to make it perfect.

    I personally thought that this report should have reviewed before put in a social domain. As brother Hiraz sarcastically pointed out, a local language version of the report very vital to get more inforamation and suggestion from our people.

    As brother Nifran suggested a clear cost estimation, budget breakdown and activity breakdown with time limits are amonsgst the basic components of a construction proposal. I still wonder how PMGG missed this part as the party filled with professionals and academics.

    I hope PMGG possess an attitude to listen and consider the constructive criticism and suggestions from its non members for the purpose of getting more viable future projects for our community.

    Thank you

  16. ahameed said

    ஊரை நிர்வகிப்பதற்கு பொருத்தமானனவர்கள் யார் என்பதை மக்கள் தீர்மனித்துள்ளர்கள் மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும் அதுதான் நாகரீகமான அரசியள் உங்களை மக்கள் நிரகரிதுள்ளர்கள் ஒரு “வாக்காள்” என்ராலும் அப்துர் றஊப் மௌலவி ஏமாற்றப்பட்டாரா இல்லை அவரின் பரந்த மணம் விட்டுக்கொடுத்தார் ஆடு நளையிது என்று ஓநாய் கவலை அடைத்த கதைதன்

  17. hakeema riyas said

    very important thing to kattankudy well done. writer, when you bring a matter inforont of people dont miss lead the readers. cos, we need development of kattankudy only obviously not other things.you observe the comments and decide( Dont give loopholes to create problems).

  18. mmsa :yes you don’t need to follow any ones advise in your own life, but this is public matter and very important problem of our home town, this matter is taken up by courts and verdict also given, so when you advise it should not affect the heart of the people who come forward to do some things, either you do it or let others to do it. don’t act like animal sleeps on the straw it is not eating or not allowing to eat others too.

    Hello Mr. Unknown person mmsa!!!
    I’m a public man I have right to write my opinion in public mater in public media which is coming to public. But I don’t have right to advice or blaming public people in public media same like you. Regarding my opinion if they providing any good and well plan to solve the butchery and slaughter house problem they have to do base on what they got the modern plan, but what they are doing they prepaid or got it one mockup plan project for the butchery and slaughter house problem then they come to public with un known language hand out for getting publicity of the job? In this world if any good educate man can come to public with any unknown language hand out for getting public support? Is it possible? I got it from the activity of introducing of modern slaughter house plan for this mater public only support to them but public can’t ask any question or public any need to understand what they are going to do. public should thing about them ,’’they are educated whatever they do or say that must be correct we no need to argue or no need to know about that if educate people doing anything that is going smooth and well path?
    Who was get it degree or master degree or PhD in technology or engineering or building and constriction study field if they not working same field to long time them study practically nothing to doing to any mater of engineering or constriction or science of constriction so we know very well who is introducing modern plan of slaughter and butchery house. That’s way we suffering and saying about our opinion in this regards.
    No animal doing what u said about animals but your home animal may do that because by that animal living with you.
    If you want solve this problem in easy way don’t eat meat of beef if you not eat beef meet for a long time its giving healthy and good life for you and your community.
    Otherwise if you want to build modern slaughter house u can able to build in your own land same like a private property then you can give free of charge service to public
    So if you want to do you can do much way if you want to make a big issue with another politician you have many option
    So wt they are going to do? Build? Or make big issue?

    • Rifdy said

      Its a big joke. Mr. Hiraz can write and read unknown language. Hahahahahaha. Keep it up

      • If I know that unknown language it is meaning public should know that unknown language? ohhh!!! Poor kind guy Allah may bless you always

    • Dear Hiraz,

      MMSA may be an unknown person to you, but not for KWC, he is one of the members of our Yahoo group since it beginning.

      Write politely on each other, aim of the comments to bring up healthy and productive discussions for our society. In a few cases, our comments has been notified to respective parties.

      We regret for any inconvenience to any reader due to the ongoing harsh discussions.

      Wassalam
      WebAdmin

      • Rifdy said

        சகோ. ஹிறாஸ்,

        ஆங்கிலத்தில்தான் சாதாரண தரப்பரீட்சையில் கொடி கட்டியதாக குறிப்பிட்டீர்கள். தமிழிலுமா அவ்வாறு கொடி கட்டிப் பறக்கவிட்டீர்கள். ஏனெனில் நீங்கள் தமிழில் எழுதும் விமர்சனங்களில் தமிழ் தெரிந்தவர்களே அதனை மறக்குமளவுக்கு எழுத்துப் பிழைகள் சிதறவிடப்பட்டிருக்கின்றன. தயவுசெய்து உங்கள் கருத்துக்களை அர்த்தமுள்ள வகையில், தெரிவிக்கும் விடயங்களை தெளிவாகவும், எழுத்துக்கள் பிழையின்றியும், புத்திசாலித்தனமாகவும் குறிப்பிட்டால் பொருத்தமானதாக இருக்கும். பின்னர் அடுத்தவர்களுடைய அபிப்பிராயங்களை நாகரீகமற்ற முறையில் விமர்சிக்காமல் நல்ல முறையில் விமர்சிக்கலாம்.

    • thamizan said

      முஹம்மது ஹிராஸ் தமிழ் பற்ருள்ள நீங்கள் ஏன் உங்களது கருத்தை ஆங்கிலத்தில் சொல்கின்றீர்கள் எங்களுக்கு ஒன்ருமே புரியவில்லை முதலில் நீங்கள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழில் சொல்லுங்கோ

  19. uzair said

    please upload the document to public mode.

    • மன்னித்து கொள்ளுங்கள் சார் புரியாத பாஷையில் கருத்தெழுத நேர்ந்ததட்கு !!! எங்களுக்கும் அந்த பாஷை புறிந்தும் புறியாத பாஷைதான் நாங்களும் அந்த பாஷையில் ஓ எல் பரீட்சையில் கொடி எடுத்தவர்கள் தான்!!! இங்க சிலபேர் பாஷை புறியாத சிலரிடம் ஒரு திட்டத்தை கொடுத்து இதட்கு ஆதரவு தாறுங்கள் என கேட்பத்தான் பெரிய வேடிக்கையாக இருக்கு!!! பாவம் அதிகாரத்தரப்பின் பழயீனத்தை இப்படி பயன்படுத்தி கொள்வது மனித தன்மை இல்லைதானே சேர்!!!

      • thamizan said

        முதல்ல நீங்க ஊருக்கு வாங்க அப்பதானே நிலம புரியும்

  20. Ooraan said

    I don’t understand what sort of loopholes given in the article to mislead or manipulate viewvers. It seems like an unbiased coverage of the occasion and sequence of events covered as it happens.

    If you think any fabricated news items put on the road, I mean published, you can point out specifically I hope our unbiased “info” will look in to the matter. It seems that you guys were effectively brainwashed by your politcal sect to look “info” through a prejudised view.

    Thanks

  21. badood ahamed- said

    ASSALAMU ALAIKUM MY DEAR RESPECTFUL KATTANKUDY INFO….
    AND TO ALL OUR KATTANKUDY BROTHERS IN ISLAM WHO ARE POTING COMMENTS.
    EVEN THOUGH THE ALL OFFICIAL NEWS WEB SITES INCLUDING OUR KATTANKUDY INFO ALLOWING US TO COMMENT ON PARTICULAR NEWS ITEMS THEY ARE POSTING, WE-AS A RESPONSIBLE KATTANKUDY MUSLIM COMMUNITY, HAVE TO STRICTLY COMPLY AND OBEY WITH THE NORMS OF OUR THAKWAA, SINCERITY AND SENCE OF HUMOUR AS A MUSLIM. BECAUSE WE, AS A WHOLE IN THE NAME OF ALLAH, ARE THE TREND SETTERS AND GUIDE TO THE WHOLE WORLD. WE HAVE TO BE PROUD AS WE GOT AN OPPORTUNITY FROM ALLAH (SWT) TO BE BORN AS MUSLIMS IN KATTANKUDY SOIL.
    WE, ONCE AGAIN, AS A RESPONSIBLE COMMUNITY IN-FRONT OF ALLAH, ARE ANSWERABLE TO EACH AND EVERY WORDS WE ARE USING ON A HUMAN. ALLAH WILL BE QUESTIONING EVERY ONE IN THE DAY OF JUDGEMENT. BEFORE WE USE A WORD, WE SHOULD THINK TWICE, SPECIALLY OUR COMENTS SHOULD BE A HELPING HAND RATHER. BECAUSE, WHEN YOU NOTICE, EVEN THOUGH OUR KATTANKUDY BROTHERS AND POLIIICAL AUTHORITIES SUCH AS HONOURABLE MINISTER HIZBULLAH, HONOURABLE CHAIRMAN, HONOURABLE MEMBERS OF EPC MUBEEN AND FAREED, HONOURABLE MEMBERS OF OUR UC RABDUL RAHMAN AND HAROON AND OHHER MEMBERS ARE OUR TREASURE GIVEN BY ALLAH. ALL OF THEM AND THEIR INTENTIONS ARE TRUE AND GENUINE TOWARDS OUR COMMUNITY. WE SHOULD PRAISE AND ENCOURAGE THEM. INSHA ALLAH IN FUTURE, ALL OUR BROTHERS POSTING COMMENTS IN THIS SITE SHALL FOLLOW A PATH OF MANNERS AND DECENCY AND LET US AVOID CRITICISING OUR OWN BROTHERS IN ISLAM.
    MY OPINION TO PMGG ON THEIR PROPOSAL REGARDING SLAUGHTER HOUSE IN KATTANKUDY. IS, PLEASE GATHER THE OPINION FROM OUR BROTHERS AND TRY TO INCLUDE THOSE COLLECTIONS IF NEEDED. AND, PLEASE TABLE YOUR PROPOSAL AS A BILL IN OUR KATTANKUDY URBAN COUNCIL, TABLE YOUR ARGUMENT AND SUGGESTIONS INTHE COUNCIL.
    TRY TO WIN THE SUPPORT OF THE COUNCIL BY PRAYING ALLAH (SWT) AND TRY TO MAKE IT AS A LAW. PLEASE AVOID TO GATHER PUBLIC MEETINGS TO TABLE YOUR PROPOSAL WHICH MAY MAKE THINGS WORST. THE SPEECH YOU ARE GIVING IN MEETINGS WILL NEVER GAIN YOU A SUPPORT OF THE HONOURABLE MEMBERS. ULTIMATELY YOUR GOOD PROPOSAL MAY GET REJECTED IN THE COUNCIL. WHATEVER THE PROPOSAL YOU TABLE CANNOT BE MAKE AS A LAW TO IMPLEMENT WITHOUT THE SMAJORITY SUPPORT OF ALL HONOURABLE MEMBERS. I AM WONDERING WHY YOU MADE SUCH A HURRY DECISION TO GATHER A PUBLIC MEETING WITHOUT PRESENTING IT TO THE COUNCIL RATHER.
    I AM LOOKING FORWARD A RESPONSE FROM THE HONOURABLE MEMBER OF OPPOSITION OF THE COUNCIL ABDUL RAHMAN ON BEHALF OF ALL INFO VIEWERS. PLEASE MARCH FORWARD WITH YOUR PROPOSAL IN THE NAME OF ALLAH. OUR HONOURABLE DEPUTY MINISTER HIZBULLAH TOO HAS LOT OF PAST EXPERIENCES IN IMPLEMENTING SUCH PROJECTS. HAVE A DIALOGUE WITH HIM TOO.
    MAY ALLAH HELP YOU IN YOUR GENUINE EFFORT OF KATTANKUDY COMMUNITY. WASSALAM

    • Rifdy said

      சகோ. பதூத் அவர்கள் காத்தான்குடி மடுவம் தொடர்பிலான PMGG இனது திட்டம் சம்பந்தமாக தனக்கு தெரிந்த விடயங்களை மாத்திரம் சுட்டிக்காட்டி PMGG இனால் வெளியிடப்பட்ட அறிக்கை மக்கள் முன்றலில் வழங்குவதற்கு முன் நகரசபையின் பெரும்பான்மையைப் பெற்றிருக்கவேண்டும் என அவரது நியாயமான ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருந்தார். PMGG தனது பிரத்தியேக இணையத்தளத்தில் “நகரசபையின் நான்காவது அமர்வு – PMGGஇன் உத்தியோகபூர்வ அறிக்கை” எனத்தலைப்பிட்ட ஒரு செய்தியை கடந்த 04-06-2011 அன்று பிரசுரித்திருந்தது. அதில், நான்காவது சபை அமர்வில் மடுவம் தொடர்பான PMGG இனது திட்டம் தயாராக இருப்பதாகவும் சபை அனுமதித்தால் அதனை தற்போது விவரிக்க முடியும் இல்லையேல் சபை அமர்வு முடிந்த பின் கலந்துரையாட முடியும் என சகோ. அப்துர் றஹ்மான் அவர்கள் தெரவித்த கருத்திற்கு பதிலளித்த நகர முதல்வர் இல்லை சபை அமர்வு முடிந்த பின் என்னை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து விளக்கமளிக்குமாறு கேட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வாறு சபை அமர்வு முடிந்த பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் திட்டத்திற்கு பொறுப்பாக இருக்கின்ற சகோ. பழுலுல் ஹக் அவர்கள் நகர முதல்வருக்கு விளக்கமளித்தாகவும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு காணி ஒதுக்கீட்டை செய்து தருமாறு நகர முதல்வரிடம் கோரியதாகவும் அதற்கான உரிய பதிலை அவரிடம் எதிர்பார்ப்பதாகவும் மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இதுவரையில் நகரமுதல்வரிடம் இருந்து உரிய பதில் கிடைத்ததாகவும், திட்டத்தை அமுல்படுத்துவதற்கு நகரமுதல்வர் தனியாகவோ அல்லது ஆளும் உறுப்பினர்களுடன் குழுவாகவோ சம்மதம் தெரிவிக்காத நிலையில் மக்கள் நலனுக்காக தயாரிக்கப்பட்ட அத்திட்டத்தை மக்களிடமே கையளித்து அவர்களின் சம்மதத்தினூடாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நகரமுதல்வருக்கும் இதர உறுப்பினர்களுக்கும் அழுத்தம் கொடுத்து திட்டத்தை நடைமுறைப்படுத்தவதுதான் நியாயமானதும் வரவேற்கத்தக்கதுமாகும் என்பது எனது அபிப்பிராயமாகும். அல்லது நகரமுதல்வரும் ஆழும் தரப்பு உறுப்பினர்களும் PMGG இனது திட்டம் காத்தான்குடி மடுவத்திற்கு பொருத்தமில்லை எனக்கருதின், அவர்களுடை பொருத்தமானதும் சாத்தியமானதுமான திட்டங்களுடன் முன்வந்து உரிய தீர்வை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவேண்டும். ஆளும்தரப்பு செய்வதாகவுமில்லை, செய்பவர்களுக்கு வழிவிடுவதாகவுமில்லை என்றால் மக்கள் அவர்களை தெரிவுசெய்து பொறுப்புவாய்ந்த நகரமுதல்வராகவும், உறுப்பினர்களாகவும் சபைக்கு அனுப்பியதில் என்ன பலன் இருக்கின்றது. தேர்தல் காலங்களில் மேடை மேடையாக காத்தான்குடியின் மடுவத்திற்கான தீர்வை குறுகியகாலத்தில் வழங்குவோம் 20 இலட்சம் என்ன 200 இலட்சம் செலவு வந்தாலும் நாங்கள் செய்வேம் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று முளங்கிய பிரதியமைச்சர் சகோ. ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தற்போது பிரச்சினை அவசரமாக தீரக்கப்படவேண்டிய இக்கட்டில் இருக்கும் சந்தரப்பத்தில் அமைதிகாக்கும் மர்மம்தான் புரியவில்லை. சகோ. பதூத் நீங்கள் கூறியதுபோல பல அனுபவங்களைக்கொண்ட பிரதியமைச்சர், PMGG இனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வரிக்குவரி வாசித்து அதனை நடைமுறைப்படுத்தப்போவதாக தேர்தல் முடிவு வெளியான தினத்தன்று காத்தான்குடி இன்போவினது பேட்டியொன்றில் சூழுரைத்தது போன்று PMGG இனது இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த முன்வருவாரா??? அல்லது அவர் நல்லதொரு திட்டத்தைத்தானும் கொண்டுவந்து காத்தான்குடி மடுவப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா??? அல்லது கமா (,) போட்டு தொடர்கதையாக்கிவிடுவாரா???

  22. hakeema riyas said

    Ooran, before you advise you should remove the mask what you wear.. if you dont under stand the loop hole what do you have in …………………….? i just say, it is not a political issue.also,nobody wants to wash my brain.

    • Ooraan said

      Bro/Sis Hakeema Riyas,

      First of all regret if my comment affected your psyche personally.

      Maintaining my identity or anonymity in a social forum is entirely decided by me. No other person can influence on that aspect. Further, as far as this issue is concerned, my identity is irrelevant.

      Saying baseless, generalized and unethical criticism to a neutral social media shows your immaturity in social forums. I just asked you to be specific about the loopholes so that people like us can get a clear picture about the so called loopholes. Remember, human kind is much diversified in Allah’s creation especially the intelligent aspect of humans show a continuous variation. As you are being an intellectual, you may have viewed the article from a different angle and found out some loopholes based on concrete evidence and rational thinking. So you are welcome to explain those loopholes to enlighten average persons like me.

      Only brainwashed people make generalized and baseless allegations without any detail. Rational human being always have an attention to details and look for concrete evidence before making allegations.

      Thank you

  23. hakeema riyas said

    why do you want to inter fear others matter without invite i asked clarity from the writer of this article not others..the sense made me to get that, you have wrote this article or you are a ……..because you affected badly the wording loophole. this much of sense you have to reply for a comment you perfectly know the loophole. not necessary to explain. .i ask allah to bring light and your identity or humanity not the big issue for kattankudy.. again i ask if you are not the writer of this article dont interfear.

    • Dear Reader,

      This article written by our reporters, who were present at the meeting. Edited by editors, without adding or removing main points.

      We also had to update it twice with speech details and project proposal.

      If you have any concern on its contents, point out directly where the news misleading people and where we have created loopholes purposely. We are ready to offer the explanation.

      Wassalam
      WebAdmin

    • Oooraan said

      Dear KKY info management, thanks for putting some light on the issue to Mr/Ms Hakeema Riyas..

      Dear Bro/Sis Hakeema Riyas,

      Remember you are tarnishing the image of a well respected social media in a public forum and expecting clarification from the writer personally, excellent. Before commenting on a social forum you shoul understand that it’s an open forum and everybody have a righ to say.

      If you are a person with pure social objective as you claimed to be, first, you should clearly state the loopholes, second put those list of loopholes in a personal email to get clarification from “info” instead of commenting the nutrality in a public manner.

      I think you are very curious about persons. First it was me then now the writer of the article.

      A small piece of advice before closing. “rathar than concentrating on the identity of people put some attention on the subject matter and try to make some wise decision without others’ influance on your way of thinking.

      Best Regards – Ooraan

  24. badood ahamed- said

    DEAR READERS OF KATTANKUDY-INFO AND PARTICULARLY TO DEAR BROTHER RIFDY, ASSALAMU ALAIKUM TO YOU ALL. THANK YOU RIFDY FOR GOING THROUGH MY COMMENTS. ONCE AGAIN I HUMBLY REQUEST ALL OUR INFO READERS AND COMMENT VIEWERS TO AVOID CRITISING EACH OTHER AND CONCENTRATE ON THE PARTICULAR VIEW POINT. I REALLY APPRECIATE AND CATAGORIZE THE COMMENTS POST BY DR.AL-HAJ NAJIMUDIN AS VALUABLE AND MEANINGFUL.

    BROTHER RIFDY, IN YOUR COMMENT YOU HAVE MENTIONED THAT I HAVE COMMENTED BY USING LIMITED SAURCE OF INFORMATION WHATEVER I GOT ON PMGG PROPOSAL. RIFDY, FOR YOUR CONCERN, I AM NOT A PERSON TO COMMENT ON IMPORTANT SUBJECTS BY USING LIMITED OR LACK OF INFORMATION. I AM VERY WELL AWARE THAT THERE WAS A NEWS RELEASE POSTED ION PMGG PERSONAL (INDIVIDUAL AS YOU MENTIONED). THAT POSTING BY PMGG WAS DATED JUNE 4, REFERING TO THE PROCEEDINGS OF FOURH SITTINGS OF UC-KKY. STILL, AS A READER OF KATTANKUDY-INFO, I AM NOT THAT MUCH IMMATURED TO CONSIDER THAT PMGG NEWS RELEASE AS AN AUTHENTIC RELEASE. BECAUSE, AS YOU MENTIONED, AND ACCORDING TO THE COMMON DATA, THAT PARTICULAR NEWS RELEASE POSTED BY THEM IS AN INDIVIDUAL ITEM OF PMGG. I MYSELF, OR SOMBODY ELSE WHO IS SEARCHING FOR THE AUTHENTIC NEWS ITEMS CANNOT CONSIDER THOSE AS AUTHENTIC AND RELIABLE. THE REASON FOR THIS IS THAT, THE REASON RIOTS TOOK PLACE OPPOSITE MEERA BALIKA SCHOOL SHOWS THE THE TRND OF PRESENT POLICIES OF PMGG AND THEIR GENTLEMEN POLITICS.

    I AM SO SORRY TO COMMENT ALL THESE, BECAUSE I MYSELF AND MY INTENTION WAS ONLY A GENUINE AND GENUINE ALONE. THAT IS WHY I ON MY FIRST DAY COMMENT, REQUESTED ALL OUR READERS TO MAITAIN THE HIGH LEVEL ISLAMIC IDENTITY AND TO BE GENUINE AND MANNERS IN THEIR WORDS. ULTIMATELY, BROTHER RIFDY, YOUR COMMENTS COMPELLED ME TO WRITE ALL THESE, EVENTHOUGH I AM STILL A STRONG SUPPORTER TO THE PROPOSAL OF PMGG.

    (Deleted as per comment moderation policies)

    RIFDY, DO YOU KNOW A FAMOUSE SAYING…………..?
    “TWO WRONGS ARE NOT EQUAL TO ONE WRIGHT”

    I WANT TO REMIND YOU, DO NOT MIS CALCULATE ABOUT ME, BECAUSE I AM NOT AN AGENT FOR ANY POLITICIANS IN KATTANKUDY, AND I AM SUPPORTING ANYONE NEITHER.
    PLS CHECK MY FIRST OPINION, YOU WILL UNDERSTAND THAT HOW MUCH I RESPECTED ALL OUR HONOURABLE KATTANKUDY POLITICAL BROTHER.

    WASSALAM.

    P:S:….NO NEED OF INVITING UC CHAIRMAN FOR DISCUSSION ABOUT PROPOSAL. PMGG OPPOSITION UC MEMBERS CAN STRAIGHT AWAY TABLE THE PROPOSAL PAPER. LET’M TO HAVE THE ARGUMENT AND COUNTER ARGUMENT IN THE COUNCIL. MOVE FOR VOTE. IF YOU GET THE MAJORITY VOTE-MASHA ALLAH, THERE YOU GET OUR SLAUGHTER HOUSE. IF THE PROPOSAL DEFEATED, COME FORWARD TO THE PEOPLE, HERE WE ARE THERE FOR YOU, WE WILL GO FOR MARCH AND WIN OUR RIGHTS.
    THIS IS THE ACCEPTED POLITICAL NORMS PRACTICED IN OUR COUNTRY.

    ……………………………………………………………………………..

    • Assalamu Alaikum, Dear Brother Badood Ahamed.

      Please avoid typing in “ALL CAPS”, it is known as shouting in online communication and hard to read.

      Also try to break your long comments into paragraphs. Will ease the readability.

      Some paragraphs of your comment was deleted as per our comment moderation policies. If you could avoid such matters in future, that will be really helpful.

      Wassalam
      WebAdmin

    • Rifdy said

      வஅலைக்குமுஸ்ஸலாம் வறஹ்மதுல்லாஹ்.!

      சகோதரரே..!

      சமூக ஒற்றுமை கடைப்பிடிக்கப்படவேண்டும், இணையத்தளங்களில் கருத்துரைப்பவர்கள் அடுத்தவர்களின் மான மரியாதைகளில் கைவைக்காமல் விடயங்களில் மாத்திரம் நின்றுகொண்டு விமர்சிக்கவேண்டும் என்ற உங்களைப்போன்றவர்களின் ஆதங்கங்கள் நன்றாகவே விளங்குகின்றது. அவ்வாறு அநாவசியமாக விமர்ப்பவர்களுக்கு இதுபோன்ற அறிவுரைகள் விளங்கும்..! கொஞ்சம் சுணங்கும்..!

      மேலும் PMGG இனது உத்தியோகபூர்வ இணையச் செய்தியை உங்களால் அங்கீகரிக்க முடியாது என்பது உங்களுடைய சொந்த விறுப்பு வெறுப்பாகும். இவ்வாறான குழப்பங்களில் இருந்து விடுபட்டு நகரசபை தொடர்பான செய்திகளின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதற்கு நகரசபையினால் ஒரு பிரத்தியேக இணையத்தளம் ஆரம்பித்து சபை அமர்வுகள் தொடர்பிலான செய்திகளை வெளியிடவேண்டும் அல்லது சபை அமர்வுகளின் பின்னர் உத்தியோகபூர்வ ஊடக சந்திப்பை நகரசபை மேற்கோள்ளவேண்டும். இதுபோன்ற ஏற்பாடுகள் இல்லாதவிடத்தில் வெளியிடப்படும் செய்திகளில் அவரவர் சார்பில் செய்திகளில் நம்பகத்தன்மையில் குழப்பம் எழுவது நியாயமானதேயாகும்.

  25. Rifdy :

    சகோ. ஹிறாஸ்,
    ஆங்கிலத்தில்தான் சாதாரண தரப்பரீட்சையில் கொடி கட்டியதாக குறிப்பிட்டீர்கள். தமிழிலுமா அவ்வாறு கொடி கட்டிப் பறக்கவிட்டீர்கள். ஏனெனில் நீங்கள் தமிழில் எழுதும் விமர்சனங்களில் தமிழ் தெரிந்தவர்களே அதனை மறக்குமளவுக்கு எழுத்துப் பிழைகள் சிதறவிடப்பட்டிருக்கின்றன.
    தயவுசெய்து உங்கள் கருத்துக்களை அர்த்தமுள்ள வகையில், தெரிவிக்கும் விடயங்களை தெளிவாகவும், எழுத்துக்கள் பிழையின்றியும், புத்திசாலித்தனமாகவும் குறிப்பிட்டால் பொருத்தமானதாக இருக்கும். பின்னர் அடுத்தவர்களுடைய அபிப்பிராயங்களை நாகரீகமற்ற முறையில் விமர்சிக்காமல் நல்ல முறையில் விமர்சிக்கலாம்.

    ரிப்தி!!!
    மொழி என்பது ஒரு தொடர்பாடல் ஊடகம்! அது காலத்தின் கோலத்திட்கு தக்க வடிவங்கள் மாறகூடியது !தட்கால பூலோகம் சகல விதி முறைகளையும் உடைத்தெறிந்து பாமரர்களுக்கும் புறியும் பேச்சுமொழி நடையையே எழுத்து விடிவத்திலும் கொண்டுவரும் வகையில் பயனிக்கிறது உலகில் அதிகமான மொழி வடிவங்கள் , பேச்சு மொழியையே ஊடக மொழியாகவும் எழுத்து மொழியாகவும் மாற்றிக்கொண்டிருக்கிருக்கும் காலமிது நாம் மாற்றங்களை வரவேப்பவர்கள் சுதந்திரத்தை ஆதரிப்பவர்கள் எனவே எமது தொடர்பாடலை பேச்சு மொழியில் எழுதுவதை வழமையாக்கி கொண்டோம் இதில் தமிழை தத்தெடுத்து போற்றி காக்க புறப்பட்ட உங்களை போன்றோர் பிழை கண்டு பிடிப்பதால் எமகேது நட்டம்!!! நான் தமிழை சரியாக எழுதாததை பற்றி என்னை படைத்தவன் எந்த விசாரனைக்கும் உள்ளாக்கமாடன் தமிழை பாமரத்தனாமக எழுதுவதால் எனகேதும்பாவமும் எழுதப்படாது! ஆனால் நன்மை அல்லாத ஒருகாரியத்தின்பால் தூண்டிய செயலுக்காக நிச்சயமாக அல்லாஹ்விடம் உங்களுக்குத்தான் விசாரனை உண்டு!!! நாகரீகம் என்பது அவரவர் பார்வை,சிந்த்தனை ஓட்டங்களுக்கேட்ப வேறு பட கூடியது சிலருக்கு நல்லதாக படுவது சிலருக்கு கெடுதியாக தெறியும் அதுதான் உலக அமைப்பு! உங்கள் நினைப்பு படி மற்றவர் எழுதவும் முடியாது நடக்கவும் முடியாது!!!மேலும் மக்களின் தரங்களுகேற்றவாரு அவர்களுடன் நடந்து கொள்ளுங்கள் என்பது அல்லாஹ்வின் தூதரின் கட்டளை!!!நீங்கள் இந்த சாதாரண கருத்துமூலம் தெளிவான இரு பாவ காரியங்களை செய்துள்ளீர்கள் முதலாவது மற்றவர்களின் குறைகளை தேடி ஆராய்ந்து அதை பற்றி எழுதியது குறை பேசிய பாவம்!!! இரண்டாவது நன்மை அல்லாத விடயத்தின் பால கவனம் செழுத்த தூண்டிய பாவம் எனவே எதையும் எழுதும் முதல் இது அல்லாஹ்விடம் எத்தகைய இடத்தை பெற்று தரும் என்பதை ஒருதடவையாவது சிந்தித்து எழுதுங்கள்! அல்லாஹ்வை எந்த நிலையிலும் பயந்து கொள்ளுங்கள் காத்தன்குடி இன்போ யாரையும் வம்புக்கு இழுக்கும் தளமல்ல! அழகிய முறையில் தெளிந்த கருத்துகளை தெளிவாக எடுத்துரைக்க உதவும் தளம் நினைவில் வைதிருங்கள் மேலும் என்னிடம் நான் ஓயலில் பயின்ற அனைத்து பாடங்கலிலும் அதிவிசேட சித்தி இப்போது உண்டு!!!

  26. badood ahamed- said

    ASSALAMU ALAIKUM TO ALL BROTHERS RELATED TO KATTANKUDY INFO-WEB AMIN.
    I COULD SEE THAT YOU HAVE DELETED MOST OF MY COMMENTS AND VIEWS WHICH YOU HAVE MENTIONED AS ACCORDING TO YOUR COMMENT MODERATION POLICIES.
    I RESPECT YOUR POLICIES-BUT, THE DELETION YOU MADE HAS HIDDEN THE MEANING OF MY COMMENT WHICH ULTIMATELY HAS BECOME A HALF STORY.
    PLEASE DO DELETE WITHOUT MAKING HARM TO THE POINT AND COMMENT.

    I AM SO UNHAPPY TO NOTE THAT THE KATTANKUDY INFO-WEB ADMIN FAILED TO UNDERSTAND THE INTENTION I HAD IN MY COMMENT.

    I, TRULY AND WITHOUT ANY HIDDEN AGENDA, MENTIONED THOSE COMMENTS ABOUT PMGG, JUST BECAUSE THEY ARE ALWAYS FOLLOWING A TREND OF MUD SLIGGING ON THEIR POLITICAL OPPONENTS. MY INTENTION REALLY AND PURELY WAS TO STOP THEM DOING THOSE TYPE OF ACTIVITIES, WHILE REMAINING A SUPPORTER MYSELF TO THEIR PROPOSAL.

    DEAR WEB ADMIN, WHILE DELETING MY COMMENTS, PLEASE IN NEAR FUTURE, MAKE SURE TO AVOID PUBLISHING THOSE UNRULY HARSH SPEECHES MADE BY THE PMGG.
    MY OPINION IS VISE-VERSA FOR OTHER POLITICAL PARTIES TOO.

    I WISH WEB-ADMIN ALL THE BEST FOR YOUR CONTINUOUS EFFORT OF ENLIGHTING OUR COMMUNITY.
    GOOD LUCK.
    ALHAMDULILLAH

    WASSALAM

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s