காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

மாபெரும் இரத்ததான நிகழ்வு

Posted by Kattankudi Web Community on 10/07/2011

-அபூ றப்தான்-

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு வழங்குவதற்காக மாபெரும் இரத்ததான நிகழ்வொன்று காத்தான்குடியில் இன்று (10.7.2011) நடைபெற்றது.காத்தான்குடி தாருல் அதர் அத்தவிய்யாவின் சமூக சேவை பிரிவினால் இவ்இரத்ததானம் ஏழாவது தடவையாக இன்று நடாத்தப்பட்டது.


இவ்வமைப்பின் உப தலைவரும் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.நஸ்மலின் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப வைபவத்தில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் முருகானந்தன், காத்தான்குடி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் யு.எல்.எம்.நசுறுதீன், மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் கித்சிறி பண்டார உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது நூற்றுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் இரத்த தானம் செய்தனர்.
காத்தான்குடி  தாருல் அதர் அத்தவிய்யா எனப்படும் இவ்வமைப்பு ஏற்கனவே மனித நேயம் பேணும் வகையில் ஆறு முறை இரத்ததான நிகழ்வு நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

 

5 Responses to “மாபெரும் இரத்ததான நிகழ்வு”

  1. Fazal Jiffry said

    Dear Info,
    ‘தாருல் அதர் அத்தஅவிய்யாவின்’ என்பதே சரியானது.

  2. Abu Aayisha said

    மாஷா அல்லாஹ்,மிகவும் வரவேற்புக்குரிய விடயம்,அல்லாஹ் இவர்களின் இந்த நல்ல முயற்சிக்கு நற்கூலியை வழங்குவதோடு மென்மேலும் இவ்வாறான சமூக பணிகளை செய்வதற்கு உதவி புரிவானாக.இன்ஷா அல்லாஹ் எதிவரும் காலங்களில் நாட்டில் இருந்தால் நாங்களும் இவ்வாறான சமூக பணிகளில் முதன்மையானவர்களாக ஈடுபடுவோம்.

  3. mafas said

    Mashallah …….Very good work may Allah will help you all…………….

  4. Falulullah Farthan said

    Alhamdulillah………..

  5. manazir said

    jazakkallahu khairan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s