காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இலங்கை நிர்வாக சேவையில் வகுப்பு III வெற்றிடங்களை நிரப்புவதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2011

Posted by Kattankudi Web Community (KWC) on 05/07/2011

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இலங்கை நிர்வாக சேவையில் வகுப்பு III வெற்றிடங்களை நிரப்புவதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்குரிய விண்ணப்பங்கள் கடந்த 24.06.2011 அரச வர்த்தமானியில் கோரப்பட்டுள்ளன.

கடந்த முறை நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட மேற்படி போட்டிப்பரீட்சையில் தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகள் யாரும் தெரிவு செய்யப்படாததையிட்டு தெரிவிக்கப்பட்ட அதிருப்தியைத் தொடர்ந்து வடக்கு கிழக்கு மாகாண வெற்றிடங்களை நிரப்புவதற்காக தமிழ் மொழி மூலம் மாத்திரம் இப்பரீட்சை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்கத் தேவையான அடிப்படைத் தகமைகள்:

  • பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டதாரியாக இருத்தல் வேண்டும். பட்டம் வலுப்பெறும் திகதி (Effective date) 25.07.2011 அல்லது அதற்கு முன்னதாக இருக்க வேண்டும்.
  • குறித்த பட்டத்தை தமிழ் மொழி மூலம் கற்றிருத்தல் அல்லது பட்டத்தின் ஒரு பாடமாக தமிழ் மொழி கற்றிருத்தல் அல்லது க. பொ. த (உ/த) பரீட்சையில் தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கற்றிருத்தல் வேண்டும்.
  • 25.07.2011 அன்று 28 வயதை அடைந்திருத்தலாகாது.
பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி 25.07.2011 ஆகும்.

இது தொடர்பான பூரண விபரங்கள், மாதிரி விண்ணப்பப்படிவம் ஆகியவற்றுக்கு இணைக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தளைப் பார்க்கவும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s