காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கான தொழிற்கல்வி வழி காட்டல் கருத்தரங்கு

Posted by Kattankudi Web Community on 29/06/2011

-எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்/அபூ றப்தான்-

இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சினால் மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கான தொழிற் கல்வி வழி காட்டல் கருத்தரங்கு மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் 28.06.2011 காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 வரை நடைபெற்றது.

 இக்கருத்தரங்கானது காத்தான்குடி நகர சபை உறுப்பினர் தேசபந்து சல்மா ஹம்ஸா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 200 மாணவர்கள் கலந்து கொண்ட இக்கருத்தரங்கில் பொதுவான தொழில், தொழிற் கல்வி வழிகாட்டல், தொழிற் சந்தை பற்றிய அறிமுகம் மற்றும் தொழிற் கல்வி நிறுவனங்கள் பற்றிய விரிவான தகவல் உட்பட தேசிய தொழிற் தகமை NVQ பற்றிய விரிவான விடயங்கள் வளவாளர்களால் வழங்கப்பட்டன.

 பிரதான வளவாளராக மட்டக்களப்பு மாவட்ட தொழிற் பயிற்சி அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் யு.யு. ஜாபிர் மற்றும் 3ம் நிலை தொழிற் பயிற்சி கல்வி ஆணைக்குழுவின் உத்தியோகத்தர் திரு வு. செந்தூரன் அத்துடன் தொழிநுட்பக் கல்வி பயிற்சி திணைக்களத்தின் தொழிநுட்பக் கல்விப் பணிப்பாளர் திரு. சேல்டன் சில்வா, மகாஜன கல்லூரியின் அதிபர் திருமதி. குனகசபை ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

This slideshow requires JavaScript.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s