காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

ஆங்கிலம் தெரியாதவரா…? ஆங்கில செய்திகளை வாசிக்க விரும்புகின்றீர்களா…? கவலையை விடுங்கள்

Posted by Kattankudi Web Community (KWC) on 23/06/2011

- M L M. றிப்கி -

கூகிழின் முக்கிய சேவைகளில் ஒன்றான மொழிமாற்றி (Google Translate) உலகில் காணப்படும் பல மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு சேவையை இலவசமாக வழங்கிவருகின்றது. கூகில் இச்சேவையை மேலும் விஸ்தரிக்கும் முகமாக தமிழுக்கான மொழிபெயர்ப்பு பொறிமுறையையும் இச்வேவையுடன் இணைத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய இணைய தேடல் இயந்திர இணையத்தளமான கூகுள் குழுமம் 2006 ஆம் ஆண்டு இணையம் மூலமான பன்மொழி மொழிபெயர்ப்பு சேவையை ஆரம்பித்தது. இப்போது புதிதாக இணைக்கப்பட்ட 5 மொழிகளுடன் சேர்த்து இந்த மொழிபெயர்ப்புத் தொகுதியிலுள்ள மொழிகளின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.

இதன்மூலம், தமிழ் மொழியிலுள்ள வசனங்களை ஏனைய 62 மொழிகளில் மொழிபெயர்க்கவோ அல்லது அம்மொழிகளில் உள்ளவற்றை தமிழுக்கு மொழிபெயர்க்கவோ முடியும்.

இப்போது உங்களிடம் ஏதாவது ஆங்கில செய்திகளோ அல்லது கட்டுரைகளோ இருப்பின் http://translate.google.com/#en|ta| என்ற முகவரிக்கு சென்று உங்களுக்கான தமிழ் மொழிபெயர்ப்பை அதே நொடியிலேயே பெற்றுக்கொள்ள முடியும். இதில் மற்றுமொரு சுவாரஸ்யம் இதே போன்று உங்களிடம் உள்ள தமிழ் மொழிக்கான ஆங்கில மொழிபெயர்ப்பையும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

கூகுளுக்கே உரிய துரித வேகத்தை இந்த மொழிபெயர்ப்புச் சேவை கொண்டுள்ளது. யுனிகோட் எழுத்து விரிவடிவங்களையே (font) இது கிரகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய இணைய அகராதிகளைவிட அதிகமான பிறமொழி சொற்களுக்கான தமிழ் அர்த்தங்களையும், தமிழ்சொற்களுக்கான பிறமொழி சொற்களையும் கூகுள் மொழிபெயர்ப்பு சேவை வழங்குகிறது.

இனி ஏன் கவலை உடனேயே செல்லுங்கள் http://translate.google.com

6 Responses to “ஆங்கிலம் தெரியாதவரா…? ஆங்கில செய்திகளை வாசிக்க விரும்புகின்றீர்களா…? கவலையை விடுங்கள்”

  1. mohamed fahath said

    thx,for,kattankudy info.

  2. IMANA_KKY said

    wowwwwwwwwwwwwwwwwwwwwwww. great translater.

  3. Dr M L Najimudeen said

    Many thanks for your very valuable information- Dr M L Najimudeen

  4. KKYan said

    இப்படியான தொழில்நுட்ப செய்திகளுக்கு நன்றி
    மாஷா அல்லாஹ்….
    மேலும் எதிர்பார்க்கின்றோம்

  5. Azam said

    நன்றி சகோதரா

    Azam Hafiz
    Paris

  6. Saheed Ajmal said

    Thanks kattankudy info.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s