தமிழ் மொழித் தினப் போட்டியில் காத்தான்குடி அல் அமீன் மகா வித்தியாலயம் சாதனை
Posted by Kattankudi Web Community on 22/06/2011
கடந்த திங்கட்கிழமை 20.6.2011 மட்டக்களப்பில் நடைபெற்ற கிழக்கு மாகாண மட்டத்திலான 65 பாடசாலைகள் கலந்து கொண்ட தமிழ் மொழித் தினப் போட்டியில் காத்தான்குடி அல் அமீன் மகா வித்தியாலயம் பத்து புள்ளிகளை பெற்று 9வது இடத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரை வரைதல் போட்டியில் அல் அமீன் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி எம்.ஐ.பாத்திமா ஷப்னா முதலாமிடத்தையும், பேச்சுப்போட்டியில் இதே பாடசாலையைச்சேர்ந்த மாணவி எச்.எம்.எப்.ஷேஹா முதலாமிடத்தை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை இந்தப்போட்டியில் ஐந்து புள்ளிகளை பெற்று 22வது இடத்தை பெற்றுள்ளது.
இப்போட்டியில் திருகோணமலை மாவட்டம் 158 புள்ளிகளைப்பெற்று முதலாமிடத்தையும், மட்டக்களப்பு மாவட்டம் 146 புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்தையும் கல்முனை மாவட்டம் 124 புள்ளிகளைப்பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.
இதில் வலய மட்டத்தில் திருகோணமலை கல்வி வலயம் 138 புள்ளிகளை பெற்று முதலாமிடத்தையும், மட்டக்களப்பு கல்வி வலயம் 79 புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்தையும், கல்முனை கல்வி வலயம் 74 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தையும் பட்டிருப்பு கல்வி வலயம் 26புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன.







![Alphabet-Tamil[1]](http://kattankudi.files.wordpress.com/2011/06/alphabet-tamil11.gif?w=116&h=150)
husney jasmin said
maaza allah .welldon dear pupils.
mafas said
Mashallah…….. good……care on may Allah with us …..
mohamed fahath said
alhamtulilah…….etu pola enum manuku parumay sartu taravantum…epp patsalaiel palaya manavan eanpatel parumaiadaikeran.masaallah