காத்தான்குடி மட்/மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் விழா
Posted by Kattankudi Web Community on 17/06/2011
காத்தான்குடி மட்/மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் 2010ல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் விழா 2011.06.16 வியாழக்கிழமை இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் எம்.எம்.இஸ்மாலெப்பை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய 32மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன், தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்,பிரதேச கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.சுபையிர் உட்பட பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பெற்றோர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
This slideshow requires JavaScript.








niyas said
weldone boys..
niyas
uk