காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

காத்தான்குடி லஜ்னதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா சதகதுல் ஜாரியா அடிப்படையிலான உதவிகளைக் கோருகிறது

Posted by Kattankudi Web Community (KWC) on 07/06/2011

லஜ்னதுஸ்ஸுன்னா அலுவலகம்

- எம். ஏ. சீ. எம். ஜெலீஸ் / அபூ ஜுரைப் - 

கடந்த இரண்டு வருடங்களாக காத்தான்குடியில் தஃவா பணியில் ஈடுபட்டு வரும் லஜ்னதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா அமைப்பு புதிய காத்தான்குடியில் மகளிருக்கான அரபிக்கல்லூரி ஒன்று இல்லாத குறையைக் கருத்திற்கொண்டு கடந்த 07.01.2011 முதல் மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா எனும் மகளிர் அரபிக் கல்லூரியை ஆரம்பித்து நடாத்தி வருகிறது.

அரபிக்கல்லூரி ஆரம்ப நிகழ்வு

அல் குர்ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையில் அமைந்த சலபுகளான முன்சென்ற அறிஞர்களின் வழிமுறையைக் கொண்ட ஆலிமாக்களையும் அதன் தாக்கத்தை பெண்கள் சமூகத்தில் எதிரொலிக்கச் செய்யும் தாயியாக்களையும் உருவாக்குதல் என்ற குறிக்கோளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் அரபிக்கல்லூரி புதிய காத்தான்குடி பதுரியா வித்தியாலயத்தில் தற்காலிகமாக இயங்கி வருகின்றது.

அரபிக்கல்லூரியின் தற்போதய வகுப்பு

இப்பகுதியில் மகளிர் அரபிக்கல்லூரிகள் ஏதும் இல்லை என்பதும், இப்பகுதியைச் சூழவுள்ள மக்களில் அதிகமானோர் தூரத்தில் இருக்கும் கல்லூரிகளுக்கு பிள்ளைகளை அனுப்பும் வசதிகளைக் கொண்டிருக்கவில்லை என்பதும் கல்லூரிக்கான அமைவிடத்தை தெரிவு செய்வதில் கருத்திற்கொள்ளப்பட்டதாக லஜ்னதுஸ்ஸுன்னா நிர்வாகிகள் எமக்குத் தெரிவித்தனர்.

இந்தக் கல்லூரிக்கான நிரந்தரக் கட்டிடத்தை அமைக்கத் தேவையான காணி ஒன்று டெலிகொம் வீதியில் மஸ்ஜிதுல் இஹ்சான் பள்ளிவாயலுக்கு எதிராக அடையாளம் காணப்பட்டு முன்பணம் வழங்கப்பட்டுள்ளது. 314 x 80 அடி விஸ்தீரணமுள்ள இக்காணியின் விலை ரூபா 3.1 மில்லியனாகும் (31 இலட்சம்) மேலும் இக்காணியை செப்பனிட்டு ஒழுங்கு செய்ய குறைந்தது ரூபா. 1.5 மில்லியனாவது தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

காணியின் வீதிப்புற முகப்புத் தோற்றம்

காணியின் உட்புறம்

காணியின் பரப்பு 100 பேர்ச்களாகும் ஒவொரு பேர்ச்சுக்கும் கொள்வனவு செய்வதற்கும் செப்பநிடுவதற்குமான தொகை ரூபாய் 50,000 அளவில் (அதிகரிக்கக் கூடிய செலவினங்களையும் கருத்திற்கொண்டு) மதிப்பிடப்பட்டுள்ளது.

மார்க்கக் கல்விக்கு செய்யும் உதவி இன்ஷா அல்லாஹ் மரணித்த பின்னரும் நன்மையைத் தரும் சதகதுல் ஜாரியாவாக அமையும் என்ற அடிப்படையில் இக்காணியைப் பெறுவதற்கான நிதி உதவிகளை லஜ்னதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா அமைப்பு எதிர்பார்க்கிறது.

இதற்கான வேண்டுகோள் விடுத்து வெளியிடப்பட்டுள்ள பிரசுரம் வாசகர்களின் பார்வைக்காக இங்கே பதிவேற்றப்படுகின்றது:

இவ்விடயம் தொடர்பாக எமது ஒளிப்பதிவு அணி பதிவு செய்த காணொளியும் வாசகர்களின் பார்வைக்காக பதிவேற்றப்படுகின்றது:

இன்று செவ்வாய்க்கிழமை வரை 27 பேர்ச் காணிக்குரிய உதவி கிடைக்கப்பெற்றிருப்பதாக லஜ்னதுஸ்ஸுன்னா நிர்வாகம் எமக்கு உறுதிப்படுத்தியுள்ளது.

கிடைக்கப்பெற்றுள்ள உதவி - 07.06.2011

எனவே முடியுமானவர்கள் இந்த நற்காரியத்தில் பங்கெடுத்து உங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு லஜ்னதுஸ்ஸுன்னா அமைப்பு உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறது.

தொடர்பு மற்றும் வங்கிக் கணக்கு விபரங்கள்:

தபால் பெட்டி இலக்கம் 20,

காத்தான்குடி, இலங்கை.

தொலைபேசி: (0094) 65 224 8403

செல்லிடப் பேசிகள்: (0094) 77 991 8586 / (0094) 75 269 660

வங்கிக் கணக்குகள்:

அமானா வங்கி, காத்தான்குடி. கணக்கு இலக்கம்: 4-10-116868-0

சம்பத் வங்கி, காத்தான்குடி. கணக்கு இலக்கம்: 011560000032

Contact and Bank account details:

P. O. Box No: 20, Kattankudy, Sri Lanka

Telephone: (0094) 65 224 8403

Mobile Phones: (0094) 77 991 8586 / (0094) 75 269 660

Bank Accounts:

Amana Bank, Kattankudy Branch. Account No: 4-10-116868-0

Sampath Bank, Kattankudy Branch. Account No: 011560000032

2 Responses to “காத்தான்குடி லஜ்னதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா சதகதுல் ஜாரியா அடிப்படையிலான உதவிகளைக் கோருகிறது”

  1. நாஸர் - சவூதி said

    சிறந்த முயற்சி . பொருத்தமான இடம். அல்லாஹ் தங்களது முயற்சியை ஏற்றுக் கொள்வானாக!

  2. mohamed said

    inta idattil atihamaaha tennai marangal kaanappaduhinrana..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s