காத்தான்குடி கல்விக்கோட்டத்தின் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் (படம் இணைப்பு)
Posted by realsweet1993 on 07/06/2011
-அபூ றப்தான் / எம்.ஏ.சீ.எம். ஜெலீஸ்-
மட்டக்களப்பு மத்தி வலய கல்வியலுவலக பிரிவிலுள்ள காத்தான்குடி கல்வி கோட்டத்தின் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (5.6.2011) காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன காரியாலயத்தில் நடைபெற்றது.
பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் கல்விக்குழு ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.எம். ஹிழ்ர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.நிசாம், மட்டக்களப்பு மத்தி வலய கல்விப்பணிப்பாளர் யு.எல்.எம்.செயினுதீன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட், அதிபர்கள், அதிகாரிகள், சம்மேளன தலைவர் இஸ்மாயில், பிரதி தலைவர் சட்டத்தரணி அப்துல் ஜவாத் உட்பட சம்மேளன பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் காத்தான்குடி கல்வி கோட்டத்திற்கான கோட்டக்கல்வி அதிகாரி நியமனம், உள்ளக ஆசிரியர் இடமாற்றம், அதிபர் வெற்றிடமாகவுள்ள பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. உடனடியாக காத்தான்குடி கல்வி கோட்டத்திற்கு கோட்டக்கல்வி அதிகாரியொருவரை நியமிப்பதென இங்கு முடிவு செய்யப்பட்டது.
This slideshow requires JavaScript.







SAMEEM said
SAR EXSELANT
niyas said
kalakkuringa saarai….
atheef said
How many literate have been in your discussion dear minister and respected federation?. Do you have any research regarding Kattankudy educational and school’s conditions?. Always you are thinking about physical appearance of the growth and development. No sufficient good teachers, less qualified principals, lack of sanctification of responsible persons and organizations on education are common problem until in our context. The reality is everyone keens to do everything without consider of their qualification. The schools are mirror of the society . Make a good society rather showing your power.
AL ZAM said
அல்லாஹ்வுடைய உதவியால நம்ம ஊருட கல்வி நிலை குத்தம் சொல்ற அளவுக்கு இல்ல. இருந்தாலும் பாடசாலை சமுகம் இன்னும் மாறனும். ஸ்கூல் படிப்பு…. டியூஸன் படிப்பு என்ட கதயே வரப்படாது. 100 வீதம் இலவசக்கல்வி இலவசக்கலவியாவே நம்மட புள்ளைகள் அனுபவிக்கனும்.