நீரில் மூழ்கி உயிரிழந்த ஓட்டமாவடி சிறாஜிய்யா அறபிக்கல்லூரி மாணவர்கள் மற்றும் விடுதி மேற்பார்வையாளரின் ஜனாஸாக்கள் பெருந்திரளான மக்கள் கண்ணீர் மல்க நல்லடக்கம்
Posted by Kattankudi Web Community (KWC) on 29/05/2011
இன்று காலை கட்டுவன்புல் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்த ஓட்டமாவடி சிறாஜிய்யா அறபிக்கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் மற்றும் விடுதி மேற்பார்வையாளரின் ஜனாஸாக்கள் இன்று இரவு பெருந்திரளான மக்கள் கண்ணீர் மல்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஓட்டமாவடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயலுக்கு மூன்று பேரின் ஜனாஸாக்களும் இரவு 11மணிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு தொழுகை நடாத்தப்பட்டு ஓட்டமாவடி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இம்மூவரின் ஜனாசா தொழுகையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜவாஹிர் சாலி, இஸ்மாயில், முன்னாள் அமைச்சரும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச சபையின் தலைவர் ஹமீட் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
ஓட்டமாவடி சிறாஜிய்யா அறபுக்கல்லூரி மாணவர்கள் 55 பேர் மற்றும் அதன் விரிவுரையாளர்கள் இன்று சுற்றுலா சென்று கட்டுவம்புல் பிரதேசத்திலுள்ள குளமொன்றில் நீராடிக்கொண்டிருந்த போது மூவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.







Mov.Masooth Ahmed Hashimi said
Allahummahfirlahum varhamhum. Neeril moolhi mouthanathal ivarkal 3 perum SHAHEED kal aavarkal..
sajee said
ALAH AVARHALIN PAAVNKALAIMANNITTU SUWANATTAI VALANKUVAANAHA
Ziaf said
Allahummahfirlahum varhamhum. Neeril moolhi mouthanathal ivarkal 3 perum SHAHEED kal aavarkal
mohammed niyas falahi said
ALLAH 3VALIFER HALUKKU JANNATHUL FIRTHOUSAI VALANKUVANAH ,EWARHLIN KUDUMPATHIL ULLAWER HALUKKU MANA NIMMATHI YA VALANKUVANAH
SAMEEM said
INNA LILLAHI VA INNA ILAIHI RAJIOON