காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 4,986,219 மொத்த வருகைகள்

ஊர்க்குருவி – YMMA காத்தான்குடி கிளையின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாலரின் உண்மை முகம்

Posted by Kattankudi Web Community (KWC) on 27/05/2011

இலங்கை பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஒரு முஸ்லிம் சமூக அமைப்பு ‘அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப்பேரவை’ (YMMA) ஆகும். இவ்வியக்கமானது முஸ்லிம் வாலிபர்களை ஒன்றிணைத்து பல சமூக செயல்களை மேற்கொள்வதே இதனது அடிப்படை நோக்கம்.

அதனடிப்படையில் சில வாரங்களுக்கு முன்பு ‘Al Bukhary Foundation, Malaysia’ என்ற கல்வி நிறுவனத்தின் புலமைப்பரிசில் ஒன்றை அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப்பேரவை (YMMA) ஊடாக வழங்கத் தீர்மானித்தது.

அதற்காக ‘Al Bukhary Foundation, Malaysia ’ கல்வி நிறுவனம் இலங்கையில் இருந்து வருமைகோட்டுக்குட்பட்ட பத்து மாணவர்களுக்கு மலேசியாவில் டிப்ளோமா (Diploma)  பாட நெறியை விமானசீட்டு தவிர்ந்து மற்ற அனைத்து செலவுகளையும் தாம் பொறுப்பேற்று படிப்பிப்பதற்காக அழைப்பை விடுத்தது.

இதனை சிறந்த முறையில் மேற்கொள்ள எண்ணிய அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப்பேரவை (YMAA) தனது அனைத்து கிளைகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பியது.

அந்த கடிதத்தில் ஊரில் உள்ள (YMMA கிளை அமைந்துள்ள) கா.போ.த சாதாரண தரம் அல்லது உயர்தரம் படித்து தனது வறுமையினால் பட்டப்படிப்பை மேற்கொள்ள விருப்பம் இருந்தும் படிக்க முடியாத பத்து மாணவர்களின் விபரங்களை தருமாறும், அதிலிருந்து அகில இலங்கை ரீதியாக பத்து மாணவர்கள் இப்புலமைபரிசிளுக்கு தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

YMMA யினால் இவ்வாறான ஒரு கடிதம் எமது காத்தான்குடி கிளைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை பெற்றுக்கொண்ட காத்தான்குடி YMMA கிளையின் தலைவர் மற்றும் செயலாளர் இருவரும் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளனர். அதாவது, ‘நாம் இக்கடிதம் தொடர்பாக யாரிடமும் அறிவிக்க தேவை இல்லை. இந்த புலமைப்பரிசிலுக்கு நாம் இருவரும் விண்ணப்பம் செய்வோம்’ என்று முடிவு செய்துள்ளனர்.

இச்செய்தி மற்ற ஊர் YMMA கிளை உறுப்பினர் ஒருவரினால் காத்தான்குடி YMMA கிளையின் பொருளாளருக்கு தெரிய வந்துள்ளது. அவர் உடனடியாக தலைவரை தொடர்பு கொண்டு விபரம் கேட்டுள்ளார்.

உடனே தலைவர் செயலாளரை அழைத்துள்ளார். செயலாளர் அந்த விடயம் தொடர்பாக பொருளாளருக்கு விளக்கி விட்டு அவரையும் தங்களது ஒப்பந்தத்திற்குள் இழுத்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மூவரும் அந்த புலமைப்பரிசில் விண்ணப்பத்தில் கோரப்பட்டிருந்த அனைத்து தரவுகளையும் கள்ளத்தனமாக தயார் செய்துள்ளனர்.

உண்மையில் நோக்கும் போது இவர்கள் சற்றும் இப்புலமைப்பரிசிலுக்கு தகுதி அற்றவர்கள்.

இவ்வாறு வேலைகள் நிறைவு பெற்ற நிலையில் ஒரு வறிய மாணவர் இணையத் தளத்தில் தன் படிப்புக்கு ஏதாவது புலமைப்பரிசில் கிடைக்குமா என தேடிய பொழுது, இப்புலமைபரிசில் தொடர்பாக கண்டறிந்துள்ளார்.

உடனடியாக YMMA காத்தான்குடி கிளையின் தலைவரை அணுகி விசாரித்துள்ளார். அதற்கு அவர் நாங்களும் இப்பொழுதுதான் கேள்விப்படுகிறோம், நீர் இது பற்றி மேலதிக தகவல் கிடைத்தால் அறியத்தறவும் என்று அந்த வறிய மாணவனை பல கதைகள் கூறி குழப்ப நினைத்துள்ளார்.

இவர்களின் கதைகளில் நம்பிக்கை இல்லாத அம் மாணவர் கொழும்பில் உள்ள தனது நண்பனை தொலைபேசி ஊடாக அழைத்து இப்புலமைபரிசில் தொடர்பாக விசாரிக்குமாறு கூறியுள்ளார்.

அவரும் YMMA தலைமை காரியத்தை தொடர்பு கொண்ட பொழுது அவர்கள் இப்புலமைபரிசில் தொடர்பாக முழு விபரம் அடங்கிய ஒரு கடிதத்தினை உங்களது பிரதேசத்தின் கிளைக்கு அனுப்பியுள்ளோம், அங்கிருந்து மூன்று விண்ணப்பங்கள் மாத்திரம் வந்திருப்பதாகவும் முடிவுத்திகதி முடிந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவரின் நண்பன் “இதற்கு எனது நண்பனும் விண்ணபிக்க உள்ளார், அவருக்கு YMMA காத்தான்குடி கிளையினால் எவ்வித அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை என்றும், இது தொடர்பாக அவர் YMMA காத்தான்குடி கிளையின் தலைவரை தொடர்புகொண்ட பொழுது அவர் இவ்வாறான தகவலை தராமல் மழுப்பி விட்டார்” என நிலைமையை எடுத்துரைத்துள்ளார். அதுமட்டுமல்லாது, தனது நண்பனுக்கு ஏதாவது உதவி பன்னுமாரும் கேட்டுள்ளார்.

நிலைமையை புரிந்து கொண்ட YMMA தலைமை காரியாலயம் காத்தான்குடி மாணவர்களுக்காக ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளனர். இந்த சந்தோசமான செய்தியை அம்மாணவருக்கு கூறியுள்ளார் அவரது நண்பர்.

இதன்போது அம்மாணவனின் நண்பன் காத்தான்குடியில் விண்ணபித்த மாணவர்களை தொடர்பு கொண்டு என்ன என்ன தகவல்கள் விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ளது என்று விசாரிக்க அவர்களில் ஒருவரின் முகவரியை அல்லது தொலைபேசி இலக்கத்தை தருமாறு தலைமைக்காரியத்தில் கேட்டுள்ளனர்.

அவர்கள் YMMA காத்தான்குடி கிளையின் தலைவரின் பெயரை கூறியுள்ளார்கள்.  அதிர்ச்சி அடைந்த அம்மாணவரின் நண்பன், மற்ற இருவரின் பெயரையும் தகவலுக்காக கேட்டுள்ளார்.

அவர்கள் YMMA காத்தான்குடி கிளையின் செயலாளர் மற்றும் பொருளாலரின் பெயர்களை கூற இவர்களின் சதித்திட்டம் அம்பலமாகியது.

இதில் என்ன வேடிக்கை என்றால், இவர்கள் மூன்றுபேரும் அவர்களது விண்ணப்பத்துடன் கொடுத்துள்ள தகவல்களில், தாங்கள் மூவரும் பரம ஏழை என்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். அனால் இவர்கள் பரம ஏழையும் கிடையாது சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களும் கிடையாது. அல்லாஹ் எல்லாவற்றிற்கும் போதுமானவன்.

குறிப்பு:- இதில் சம்பந்தப்பட்ட மாணவர், மற்றும் YMMA காத்தான்குடி கிளையின் தலைவர், செயலாளர், பொருளாலர் அனைவரும் 2010 கா.போ.த உயர்தரப்பிரிவு (GCE A/L) மாணவர்களாகும்

9 Responses to “ஊர்க்குருவி – YMMA காத்தான்குடி கிளையின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாலரின் உண்மை முகம்”

  1. backery said

    allah poathumanavan
    intha mun……………. yaar

  2. Mohammed Hiraz said

    அட கபால் …………………………… நல்லா உழைத்து நல்ல நிலமையில் உங்கள வளர்த்து படிபித்து இருக்கின்ற வேளையில் அல்லாஹ் உங்களுக்கு கொடுக்காத கஷ்ட நிலமையை மற்றவர்கள் முன் நாடக பானியில் பொய்யாக சோடனை செய்து உங்கட பதவி இயக்க பொறுப்புகளை பாவித்து பத்தொன்பது வயதிலேயே இப்படி தில்லு முள்ளு பன்ற நீங்க வளர்ந்தா …………………….என்ன வேன்டும் என்றாலும்……………..??? உங்களை போன்றோறுக்கு வாழ்நாளுக்கும் எந்த பொறுப்பையும் இனி அல்லாஹ் சுமத்தாமல் எதிர்கால மோசடியிலும் உங்களை போன்றோறின் ………………….இருந்து ……………………..ம் ஊர் மக்களையும் காத்தருள்வானாக!!!

  3. Farees said

    இவர்கள் ஒன்னரை இலட்சம் ரூபாய்கள் இலஞ்சமாக University selection board இல் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு கொடுத்து எப்படியேனும் பல்கலைகழகத்தில் ஒரு புலமைபரிசில்லை பெற்றுவிடுவோம் என்று ஊருக்குள் பீய்தித்திரிகிரார்கள்…….. இவ்விடயத்தில் முக்கிய கவனம் எடுக்குமாறு சம்பத்தப்பட்ட தரப்பாரை கேட்டுக்கொல்கின்றேன்…………

  4. abtr said

    friend`s 2010 A/L bacth elaaraium epadi turohihel endu ninaikaathinga

  5. athilkky said

    இந்த தில்லுமுல்லு ஒன்றும் நமக்கு புதிதல்லவே…. “கற்றுக்கொடுத்தது யாரு ????” நாமும் நம்முட அர…. உம் தானே. முன்மாதிரிகள் முன்னுக்கு இருக்கும் போது, எல்லாத்தையும் மறந்து நாமும் அதுகளுக்கு மாலை போடும் போது, இப்படியான இளசுகளும் அதப் போல உருவாகாம என்ன செய்யும்??

  6. IMANA_KKY said

    Yaaaaaa Allah!!!!!!!!!!!!

  7. Shukry said

    day by day our kattankudy name is going very badly…

  8. பிஷ்ருள் ஹனான் said

    இப்படியான ………….ளை வளர்த்துவிடும் நம் தலைகளையும் அடையாளம் கண்டு சமூகத்தில் அவர்களின் தோலை உரிக்கவேண்டும்…..!!!!!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s