இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவில் இருந்து நேரடி ஒளிபரப்பு
Posted by Kattankudi Web Community (KWC) on 19/05/2011
- மலேசியாவிலிருந்து அபூ றப்தான்-
நாளை ஐந்தாவது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவிலுள்ள தலைநகரான கோலாலம்பூரில் ஆரம்பமாகவுள்ளது.
நடைபெறவள்ள இந்த அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உலகத்தின் 12 நாடுகளிலிருந்தும் ஐநூற்றுக்கும் மேற்பட்ட பேராளர்கள் மலேசியாவை வந்தடைந்துள்ளனர்.
இம்மாநாடு நாளை ஆரம்பமாகி மூன்று நாட்களுக்கு நடைபெற்று ஞாயிற்றுக்கிழமை முடிவடையவுள்ளது.
நாளை இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு மலேசிய தலைநகரிலுள்ள கோலாலம்பூர் வர்த்தக கட்டிடத்திலுள்ள மெர்டோக்கா அரங்கில் நடைபெறவுள்ளது. ஆரம்ப வைபவத்தில் மலேசியாவின் பிரதமர் கலந்து கொண்டு இதனை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இம்மாநாட்டில் கலந்துகொள்ள மலேசியா வந்துள்ள உலக பேராளர்கள் கோலாலம்பூரிலுள்ள மலே பல்கலைக்கழகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இம்மாநாட்டையொட்டி இப்பல்கலைக்கழகத்தில் விஷேட அலுவலகமொன்று திறக்கப்பட்டுள்ளது. அதற்குப்பொறுப்பாக இம்மாநாட்டின் ஏற்பாட்டாளர் ஸேக் அப்துல்லா கடமையாற்றுகின்றார்.
இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து 160 பேர் மலேசியாவிற்கு வருகைதந்துள்ளனர்.
இதில் காத்தான்குடியிலிருந்து கலை இலக்கிய வாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்களும் வருகை தந்துள்ளனர்.
இந்த மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக காத்தான்குடி இன்போ நிர்வாக உறுப்பினர்கள் நான்கு பேர் மலேசியா சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாநாட்டின் இலங்கை ஏறபாட்டுக்குழவின் இணைப்பாளராக இலங்கையின் சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன் செயற்படுகின்றார்.
இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வினை காத்தான்குடி இன்போ மலேசியாவிலிருந்து இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 5.45 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தொழில்நுட்ப இடையூறுகள் இல்லாதவிடத்து, இந்த நிகழ்வு குறிப்பிட்டபடி நாளை நேரடியா ஒளிபரப்பு செய்யப்படும் என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.
எட்டு அரங்குகளில் இம்மாநாடு நடைபெறவுள்ளன. இம்மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் கவிதை, விவாதம், ஆய்வரங்கம் என்பன நடைபெறவுள்ளன.
இம்மாநாட்டினை யொட்டி மலேசியா கோலாலம்பூர் மலே பல்கலைக்கழகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.







Mazaa said
நிகழ்வுகளும் – நேரடி ஒளிபரப்பும் நல்லபடி நடந்தேற வாழ்த்துக்கள்..
A. Uwais said
Dear Brothers of Kattankudy info.
I thank you very much for your endeavours. But It is my humble advice to check the Spellings of articles before loading to the web. for example in your news of Islamic Conference in Malaysia ” instead of “MAHANADU’ it is inadvertently typed as “IMMADU’(இம்மாடு). Similarly there were some other inadvertent mistakes like:
அய்வுக்கட்டுரைகள்
பிற்பகள்
விழாக்கோழம்
please pay attention on them and provide a better service to the readers.
May ALLAH accept your endeavours.
Anees said
Thanks guys kattankudi.info for your dedicated works for our society….keep it up…